Monday, November 18, 2019

சிராத்தம் திதி திவஷம்

சிராத்தம் திதி, திவசம் தர்ப்பணம் கொடுப்பது குறித்து வேத சாஸ்திரம் சொல்வது என்ன? சொல்லும் மந்திரங்கள் என்ன?


"திவசம் வேறு, தர்ப்பணம் வேறு. தர்ப்பணம் என்பது ஒவ்வொரு நாளும் எல்லோரும் செய்ய வேண்டிய புண்ணிய காரியம். சூரியன், வருணன், அக்கினி என எல்லா தேவர்களுக்கும் நீர்நிலைகளில் நின்று ஜலத்தை அள்ளி விட்டு 'ஆதித்யா தர்ப்பயாமி' என ஒவ்வொரு தேவர்களுக்கும் செய்வதே தர்ப்பணம்.

 தர்ப்பணம் என்றால் 'திருப்தி செய்வது' என்று பொருள். நீரை அவர்களுக்கு அளித்து அருளைப் பெறுவது. ஆனால், அமாவாசை மற்றும் இறந்தவர்களின் திதி அன்று மட்டும் எள்ளும், நீரும் கலந்து இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

 இந்த இரு நாட்களில் மட்டுமே இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். அதிலும் இதை ரத்த சம்பந்தம் கொண்டவர்கள் மட்டுமே செய்யவேண்டும்.

திவசம் என்றால் இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இறந்தார்களோ, அந்த மாதம் அந்தத் திதியில் (பஞ்சமி என்றால் அந்த மாதபஞ்சமி) பிராமணரை அழைத்து செய்யப்படும் ஒரு விரிவான சடங்கு. ஹோமம் வளர்த்து முதலில் தேவர்களை திருப்தி செய்ய வேண்டும். பின்னர் 3 தர்ப்பை புல்லில், இறந்து போனவர் மற்றும் அவர்களது முன்னோர்கள் என அனைவரையும் மானசீகமாக வரவழைத்து அவர்களின் மேல் பிண்டம் வைத்து உணவளிக்க வேண்டும். அந்த பிண்டத்தை பசுக்களுக்கு அளித்து பிராமணருக்கு அரிசி, காய்கறிகள், தட்சிணை அளித்து ஆசி பெற வேண்டும். பின்னர் படையல் இட்டு, காக்கைக்கு உணவிட்டு, அதன் பிறகே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும். இதுவே திவசம் எனப்படுகிறது.

 இதுவசதியுள்ளவர்கள்பண்ணக்கூடியது. வசதியில்லாதவர்கள் அந்தத் திதியில் நீர்நிலைகளுக்குச் சென்று எள்ளும் நீரும் தெளித்து தர்ப்பணம் கொடுக்கலாம்.

ஆனால் திவசமோ, தர்ப்பணமோ திதியைப் பார்த்து மட்டுமே தர வேண்டும். இருக்கும்போது நட்சத்திரம் என்பார்கள். அதாவது உங்களின் பிறந்த நாளை நீங்கள் பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டே கொண்டாடவேண்டும். மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து இருந்தால் மாசி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளன்றுதான் உங்கள் பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டும் அதுவே நமது மரபு.அப்போதுதான் கடவுளின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிட்டும்.

அதைப்போலவேஇறந்தவர்களுக்கு அவர்கள் இறந்து போன திதிதான் முக்கியம். அன்றைய தினத்தில் மட்டுமே அவர்கள் நம்மை நாடி வருகிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. அமாவாசை மற்றும் இறந்து போன திதியில் மட்டுமே அவர்கள் வருகிறார்கள். எனவே அதை விடுத்து அவர்கள் இறந்து போன தேதியை கணக்கிட்டு திதி கொடுப்பது வீணானதுதான். அவர்கள் பூமிக்கு வராத நாளில் அவர்களுக்கு உணவளிப்பது என்ன பயனைத் தரும்? ஒரு மாதம் என்பது இறந்து போனவர்களுக்கு ஒரு நாள், அந்த ஒருநாளில் அவர்கள் மறைந்து போன திதி அல்லது அமாவாசை தினம் மட்டுமே அவர்கள் திருப்தியைத் தேடி வருகிறார்கள்.
அந்த நாட்களில் மட்டுமே திவசம், தர்ப்பணம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்''

''பொதுவாக ஒரு வருடத்தில் இத்தனை திவசம் கொடுக்கவேண்டும் என்று சாஸ்திரங்களில்

''இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை இறந்தவர்களின் திதியைக் கணக்கிட்டு கொடுப்பதுதான் திவசம் என்றாலும், இறந்து போனவர்களுக்கு ஓராண்டுக்குள் 16 முறை திவசம் கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

 ஆன்மாவின் அங்கமான 16 அம்சங்களும் சொர்க்கத்தை அடைய உறவினர்கள் செய்யும் இந்த 16 திவசங்கள் அவர்களை திருப்திப்படுத்தி, அவர்கள் ஜன்மசாபல்யம் அடையச் செய்து விடுகிறது.


திவசங்கள் கட்டாயமாக இறந்தவரது குடும்பத்தாரால்தான் செய்யப்பட வேண்டும். இறந்து போனவர்களின் 10-ம் நாள், 16-நாள் காரியங்கள், மற்றும் மாதாமாதம் ஒரு திவசம், 27-ம் நாள் ஒரு திவசம், 12-ம் மாதத்துக்கு முன்பு ஒன்று என மொத்தமாக 16 முறை திவசங்கள் செய்வது இறந்து போனவரின் ஆன்மாவை குளிரச்செய்து விடும்.

இறந்தவர்களின் ஆன்மா, அது மேற்கொள்ளும் யாத்திரை, அப்போது அவர்களுக்காக நாம் செய்ய வேண்டிய கைங்கரியங்கள் என எல்லாவற்றையுமே கருட புராணம் விளக்கமாகக் கூறுகிறது. ஆனால், கருட புராணத்தை வீட்டில் படிக்கவே கூடாது. இறந்தவர்கள் வீட்டில் மட்டுமே படிக்கலாம் என்பது நம்பிக்கை.


எல்லோருமே இறந்தவர்களின் முதல் ஆண்டுக்குள் 16 முறை திவசம் கொடுப்பது நல்லது. அந்நிய நாட்டு பழக்க வழக்கங்களால் நாம் நிறைய மாறி விட்டோம், ஆனால் வாழும்போது நட்சத்திரம்; வாழ்ந்த பிறகு திதி என்பதே நம்முடைய மரபு. அதன்படியே வழிபாடு செய்து பித்ருக்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்''

சிரார்த்தம் எப்படி செய்வது ?

முன்னோர்களின் அனுபவ வார்த்தைகளே, சாஸ்திரங்கள். அந்த சாஸ்திரபடி, வாழ்க்கையை நடத்துவோருக்கு, ஒரு குறைவும் உண்டாகாது. சாஸ்திரங்களின்படி வாழ்க்கை நடத்திய, பீஷ்மரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இது...
சிராத்தம் என்பதே சரி. சிரார்த்தம் என்பது தவறு. சிரத்தையுடன் செய்ய வேண்டியது என்பதினாலேயே இது, சிராத்தம் எனப்பட்டது. மற்ற கர்மாக்களை செய்யும் போது இருப்பதை விட, சிராத்தம் செய்யும் போது, மிகுந்த சிரத்தையுடன் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் பித்ருக்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.

ஒரு சமயம், பீஷ்மர், பித்ரு சிராத்தம் செய்யத் துவங்கினார். அதனால் பீஷ்மர் மிகுந்த சிரத்தையுடன், சிராத்தம் செய்து கொண்டிருந்த போது, பீஷ்மருடைய தகப்பனாரான சந்தனுவிற்கு, ஒரு எண்ணம் தோன்றியது. நம் மகன், நமக்காக சிராத்தம் செய்து கொண்டிருக்கிறான். அவனுடைய சாஸ்திர நம்பிக்கையை, நாம் சோதனை செய்து பார்க்கலாம்... என, நினைத்து, பிண்டப் பிரதானம் நேரத்தில் கொடுக்கும் பூமியை பிளந்து, கையை நீட்டி, மகனே பீஷ்மா... பிண்டத்தை என் கையில் கொடு... எனக் கேட்டார் சந்தனு. பீஷ்மரோ, தந்தையே... பிண்டத்தை, தரையில் பரப்பப்பட்ட தர்ப்பைகளின் மீது வைக்கச் சொல்லித் தான், சாஸ்திரங்கள் கூறுகின்றன. தந்தையின் கையில் கொடுக்கும்படி, அவை சொல்ல வில்லை... என்று சொல்லி, தந்தையின் கைகளை விலக்கி, தரையில் பரப்பப்பட்ட தர்ப்பைகளின் மீது வைத்தார். சந்தனு மகிழ்ந்து; பீஷ்மருக்கு ஆசி கூறி, அகன்றார். எனவே, சாஸ்திரங்களில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதை சிரத்தையுடன் கடைபிடித்து நடந்தாலே வாழ்வில் ஏற்படும் பாதி துன்பங்கள் மறையும்!

பித்ரு தர்ப்பண மந்திரங்கள்

யஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.
யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.



சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி தர்பணம் செய்யவும்.
அமாவாசை தர்ப்பணம்.



Sandhya Vandanam

முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா.



பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும்.
இரன்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும்.



ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.



சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.
ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்
அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி





மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம்



ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ





ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச



யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த
அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய



ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே



அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ:



தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம்



மத்யே…………..
நாம ஸம்வத்ஸரே …………..அயனே…………..ருதெள …………..மாஸே……..க்ருஷ்ண பக்ஷே………….யாம் புண்ய திதெள ………….வாஸர



யுக்தாயாம்…………..நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணு கரன ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டானாம் வர்தமானாயாம்



……………..யாம் புண்ய திதெள (பூணல் இடம்) ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர
ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்————



—-(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ



ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய



ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும்.
…………கோத்ராணாம்…………. சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ:



மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
கையில் பவித்ரதுடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.
பூணல் இடம்: தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும் .அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச னூதனாஹா
அதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை.



தர்பையை எறிந்து விடவும் கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் இரைக்கவும்.



இந்த மந்த்ரம் சொல்லி.
அபஹதா அசுரா ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயன்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன:
பூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)
அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ



பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.
பூணல் இடம்: தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் ஸம்ப்ரதாயப்படி போட்டு ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும் ..



“ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச”
அஸ்மின் கூர்ச்சே ……………கோத்ரான் ………..ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான்…………



கோத்ரா:…………தா வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி. ஜீவனுடன்



இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.





மற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………
(அம்மா ஆத்து கோத்ரம்)………….ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு



ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. என்று “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்.
.
ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ்



ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ. என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி



ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்மூன்று



தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.
வர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில்
போடவும்



. இட து காலை முட்டி போட்டு கொன்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.
1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ்தேனோ வந்து



பிதரோஹ வேஷூ…………கோத்ரான் ……..ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.



1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே



ஸெளமனஸே ஸ்யாம ……….கோத்ரான்……சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே



அவந்த் வஸ்மான் ………….கோத்ரான்……….ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் ………..சர்மணஹ



ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .
2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா



விப்யஸ் ஸ்வதா நமஹ …………கோத்ரான்……….ஸர்மனஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
.
2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ்



ஸ்வதயா மதந்தி. ………….கோத்ரான்……….ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ ……………கோத்ரான்…………..ஸர்மணஹ ஆதித்ய ரூபான்



ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
3.2: மது நக்த முதோஷஸீமது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா ………கோத்ரான்……….சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா



மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந:………..கோத்ரான் ………….ஸர்மனஹ ஆதித்ய ரூபான்



ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி \
மாத்ரூ வர்க்கம்: …………….கோத்ராஹா……….தாஹா வஸு ரூபாஹா மாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்பயாமி…….மூன்று முறை
கோத்ராஹா………….தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை;
கோத்ராஹா………தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.
மாதா மஹ வர்க்கம் தர்பணம்:
1.1: உதீரதாம்+ஹவேஷு …………கோத்வதான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி



.
1.2 அங்கிரசோ+ ஸ்யாம……….கோத்ரான் ………..சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
1.3 ஆயந்துனஹ+அச்மான்………கோத்ரான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.1 ஊர்ஜம் வஹந்தீர்+பித்ரூன் ……….கோத்ரான்………ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
2.2 பித்ருப்யஸ்+நமஹ ………கோத்ரான்……..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.3 யே சேஹ +மதந்து……….கோத்ரான்…..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.1 மதுவாதா+ஓஷதீ ………..கோத்ரான்…….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.2 மது நக்தம்+பிதா……….கோத்ரான்……..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
3.3 மது மான்+பவந்துநஹ ………கோத்ரான்………..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
…………..கோத்ராஹா………….தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
……………கோத்ராஹா…………தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை





……….கோத்ராஹா……..தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.





ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத



பூணல் வலம்
நமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை,

நமோவ: பிதரோ மன்யவே,நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் லோகேஸ்த யுஷ்மாகுஸ்தேனுயே



அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம் வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம்



வஸிஷ்டோ பூயாஸம்.
இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.





பூணல் இடம்.;
உத்திஷ்ட்த பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தாமன்வேதா புராணம் தத்தாதஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத்



பாகதான்தேவதாஸு. அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி அஸ்மாத் கூர்ச்சாத்
பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான்



யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.
பவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து



கையில் எடுத்து, யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்



ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத



Kayena vacha Manesendryarva Budhyahmanath Prakrthe Swabavaath,



Karomi Yath Thath Sarvam Sriman Narayanethi Samarppayami’
.
என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.

தர்ப்பணம், சிராத்தம் கூடுதல் தகவல்கள்

1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்றபொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களைஅணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.

2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில்தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.

3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிராத்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும்ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.

5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமானபூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமானபூஜைகளைச் செய்ய வேண்டும்.

6. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும்என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

7. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்ததண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.

8. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்ததண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்துஅவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள்என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

9. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிராத்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது.அகவே தவறாது சிராத்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.

10. மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிராத்தம் செய்யவேண்டும்.

11. மன்வாதி 14 நாட்களிலும் யுகாதி 4 திதிகளிலும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆயிரம் ஆண்டுகள் வரை முன்னோர்களுக்குமகிழ்ச்சியைக் கொடுக்கும்.

12. மன்வாதி யுகாதி நாட்களில் செய்யப்படும் புண்ணிய நதி நீராடல், ஜெபம், ஹோமம் ஆகியவை கூடுதல் பித்ரு புண்ணியத்தைத் தரும்.

13. தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும்ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.

14. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதிநாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4,அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

15. இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்ய வேண்டி நாள்

16. துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத்தரும். ஆகவே அதிக புண்ணி யங்களைத் தரும் தந்தையரின் சிராத்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.

17. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிராத்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும்சிவனும் கூறியுள்ளனர்.

18. இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிராத்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றைய நாளன்று இறந்த ஜீவன் காற்றுவடிவில் இறந்தவரின் குழந்தைகள் வாழும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிராத்தத்தில் தரும் உணவை சாப்பிடுவதற்காககாத்துக் கொண்டிருக்குமாம்.

19. முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் சிராத்தத்துக்கு பார்வணசிராத்தம் என்று பெயர்.

20. ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிராத்தம் சங்கல்ப சிராத்தம்எனப்படும்.

21. ஒருவருக்கு சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள் அனைத்தையும்,சமைக்காமல் அப்படியே தட்சணையுடன் அளித்துச் செய்யும் சிராத்தம் ஆம சிராத்தம் எனப்படும்.

22. சிராத்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வதுஹிரண்ய சிராத்தம் எனப்படும்.

23. சிராத்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.

24. சிராத்தம் நடத்தப்படும் இடம், சிராத்தம் செய்யும் நேரம், சிராத்தத்தில் பித்ருக்களாக பாவித்து பூஜிக்கப்படும் நபர், சிராத்தத்தில்உபயோகிக்கும் பொருட்கள், சிராத்தம் செய்யும் நபர் ஆகியவை சிராத்தத்துக்கு முக்கியமானவை. இவைகள் தூய்மையானவைகளாகஇருந்தால் சிராத்தத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும்.

25. பித்ருக்களை சிராத்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு சிராத்தம் செய்து அவர்களுக்குஉணவளித்து, அவர்களை திருப்தி செய்தால் அவர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள், அழியாப்புகழ், உடல் வலிமை,செல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றை தருகிறார்கள

26. நமது பித்ருக்களிடத்தில் சிராத்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிராத்தத்தில் வாங்கித்தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிராத்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பியபலன் கைகூடும்.

27. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிராத்த உணவு அவரவர்களின்பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான்மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும்தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.

28. பெற்றோர்களின் வருஷ சிராத்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷசிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

29. அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பண பூஜைகளை செய்து விட்டு பிறகு மஹாளயத்தைசெய்ய வேண்டும்.

30. பெற்றோர்களின் வருஷாந்தர சிராத்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதிதர்ப்பணங்கள் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

31. தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொருவருக்கு வருஷாந்திர சிராத்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில்வருஷசிராத்தம் செய்து விட்டு பிறகு மாஸிகத்தை செய்ய வேண்டும்.

32. தாய் தந்தை இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிராத்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிராத்தம் செய்ய வேண்டும்.பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.

33. பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர்களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டுவிட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

34. இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில் உங்கள் மறைந்த முன்னோர்வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள்.

35. சிராத்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாகப் பிறப்பான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

36. உடல் நிலை சரியில்லா தவர்கள் அருகில் யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு சிராத்தம் செய்ய வேண்டும்.

37. நம்மைவிட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாக புண்ணியமும்,செல்வமும் நமக்கு கிடைக்கும்.

38. மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெறவேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிராத்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால்பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

39. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத் தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பாவகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள்.சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

40. “மக்களுக்கு தொண்டாற்றி, சுயநலமின்றி அரிய இறைப்பணிகளைப் புரிந்தோர் மட்டுமே பித்ருலோகம் அடைகின்றனர் என்பதைகருடபுராணம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

41. “நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மஹாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம்,பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.”

42. கார்த்திகை மாதம் உத்திராயண புண்ணியகாலம் சுக்ல பட்சம், பவுர்ணமி திதியில் தானம் செய்ய வேண்டும். கிருஷ்ணபட்சம்(தேய்பிறை) துவாதசி திதியில் தானங்கள் அளிக்கலாம்.

43. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்தமரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.

44. பித்ருக்கள் எங்கிருந்தாலும் சரி, தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள்அளவும் சந்தேகம்கிடையாது.

45. ஒருவர் மரண படுக்கையில் அவதிப்படும்போது அவரது மகன் அல்லது மகள் மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரையை எருமைமாட்டிற்கு தானம் அளித்தால் மரண அவதி நீங்கும்

51. திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவனுக்கு அறிவு, ஞான சக்தி, பசுக்கள் தேக ஆரோக்கியம்,சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம், அனைத்து பலன்களும் தவறாமல் கிடைக்கும்.

52. சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டுஇறந்திருந்தால் திருப்தி அடைவார்கள்.

53. மஹாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை நினைத்து மனதார வணங்கினால் சகலசவுபாக்கியங்களும் தேடி வரும்.

54. மாகளாய பட்சத்தின் 16 நாட்களும் சிராத்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அளிக்கும்.

55. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அற்றை நன்குதெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

56. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினை?

Wednesday, October 2, 2019

இஞ்சி சூப்

வயிற்று உபாதைகளுக்கு ஆரோக்கியமான #இஞ்சிசூப் செய்வது எப்படி?

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

இதில் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன.

அந்த வகையில் இன்று இஞ்சியை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தக்காளி - 1
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
சீரகம், கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
செய்முறை

இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும். காய்ந்த மிளகாயை சுட்டு வைக்கவும்.

சின்ன உரலில் இஞ்சி, ப.மிளகாய், பூண்டு, சுட்ட மிளகாய், மிளகு, சீரகம், சின்னவெங்காயம், தக்காளி, சேர்தது அரைத்து கொள்ளவும்.

வாணலியில எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த கலவை சேர்த்து வதங்கவும்.

இந்த கலவை சற்று வதங்கியதும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும். சுவையான இஞ்சி சூப் தயார்.

Wednesday, September 18, 2019

நாளையிலிருந்து (14/09/19) மஹாளய பக்ஷம் ஆரம்பம். கண்டிப்பாக தாய், தந்தை திதிகளில் தெவசமோ, தர்ப்பணமோ செய்யுங்கள். 15 நாட்களுமே தர்ப்பணம், பிரம்ம யக்ஞம் செய்வது மிகவும் சிறப்பு, உத்தமம். அப்படி செய்தால் நம் முன்னோர்களின் ஆசீர்வாதம் நம் குழந்தைகளுக்கு, பேரன் பேத்திகளுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும்.
மாயவரத்திற்கு அருகில், பூந்தோட்டம் என்கிற கிராமத்திற்கு செல்லும் வழியில், திலதர்ப்பணபுரி என்கிற ஸ்தலம் இருக்கிறது. இங்கேயுள்ள கோவிலில் மஹாளய பக்ஷம் 15 நாட்களையுமே “தர்ப்பணத் திருவிழா” என்று கொண்டாடுகிறார்கள். அங்கே சென்று தர்ப்பணம் செய்ய முடிந்தால் அது சிறப்பு. முயற்சி செய்யுங்கள். இந்தத் தலத்தில்தான் ஸ்ரீராமர், தன் தந்தை தசரதனுக்குத் தர்ப்பணம் செய்ததாக ஐதீகம். ராமபிரான் தர்ப்பணம் செய்வது போன்ற சிலைகள் அங்கே இருக்கின்றன.
இந்தக் கோவிலின் இன்னொரு விசேஷம் என்னவென்றால், ஆதிவிநாயகர் சன்னதி இங்கு உள்ளது. அதாவது யானை முகத்தை அடைவதற்கு முன் விநாயகர் எப்படி இருந்தாரோ அந்த மாதிரி விக்கிரகம் இருக்கிறது. கூகுளில் இந்தக் கோவிலைப் பற்றிய மற்ற விவரங்கள் இருக்கின்றன.
01. இந்த 15 நாட்களுமே நம் முன்னோர்கள் நம்மோடு வ்ந்து வசிக்க எமதர்மர் அனுமதி கொடுக்கிறார். எனவே இந்த நாட்களில் அவர்களுக்கே முன்னுரிமை. தர்ப்பணம் செய்த பிறகுதான் ஸ்வாமிக்கு விளக்கேற்றுவது, பூஜை, நைவேத்தியம் எல்லாமே.
02. சரி. நான் ரிடையர்ட். அதனால் தர்ப்பணம் செய்து விட்டு சாப்பிடுவேன். ஆனால் என் மகன்/மகள் வேலைக்கு செல்ல வேண்டுமே, குழந்தைகள் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்ல வேண்டுமே. தினசரி வீட்டில் சாப்பிடாமலேயே அவர்கள் வெளியில் போக முடியுமா? இந்த கேள்வி பலருக்கு இருக்கும். இதைக் காரணமாக வைத்து சிலர் தர்ப்பணத்தையே தவிர்த்து விடுவார்கள். தவறு. குளித்து விட்டு முதலில் சமையல் ஆகட்டும். வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பவர்கள் சாப்பிட்டு விட்டு செல்லட்டும். அதன் பிறகு சாதமும் பருப்பும் தனியாக மீண்டும் வைத்துக் கொண்டால், கர்த்தாவும், மனைவியும் தர்ப்பணத்திற்குப் பிறகு அதை எடுத்துக் கொள்ளலாமே!
03. திதி இருந்தால் மட்டுமே அந்த நாளில் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதில்லை. 15நாட்களில் என்றைக்கு வேண்டுமானலும் செய்யலாம்.
04. வருடத்திற்கு ஒரு முறை வருகிறது. வாத்யார்கள் அதிகமாகத்தான் கேட்பார்கள். முகம் சுணுங்காமல் கொடுங்கள். கோபத்துடனும், எரிச்சலுடனும், வேண்டா வெறுப்பாக செய்வதில் எந்தப் பலனும் இல்லை.
05. ஹிந்துக்கள் அனைவருமே (பிராமணரல்லாதவர்கள் கூட) தர்ப்பணம் செய்ய வேண்டும். மாமிச உணவை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு, பட்டை, சோம்பு போன்ற லாகிரி வஸ்துக்களைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
06. இந்த 15 நாட்களுமே கண்டிப்பாகக் குளித்து விட்டுத்தான் சமையல் செய்ய வேண்டும்.
எனக்குத் தெரிந்த சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். சாஸ்திர விரோதமான தவறுகள் இருந்தால் சொல்லுங்கள். மாற்றிக் கொள்ளலாம்.







Friday, May 18, 2018

பித்தம் சரியாக

பித்தம் சரியாக   பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

Monday, November 13, 2017

*கூலிக்கு மாறடிக்கும் ஊடகங்களால் ஒரு நல்ல பிரதமரை தோற்கடித்து விட்டோமா...?*

*கூலிக்கு  மாறடிக்கும் ஊடகங்களால் ஒரு நல்ல     பிரதமரை தோற்கடித்து விட்டோமா...?*

2009 களில் திடீரென ஜெர்மனி, ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இன்னும் பல மேலை நாடுகளின் வங்கிகள் எல்லாம் திவாலாகியது.

சீனாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. உலகமே பொருளாதார தேக்கநிலையால் ஸ்தம்பித்து நின்றது.

உலகம் முழுதும் சுமார் 80 மில்லியன் பேர் வேலை இழந்தனர்.
உலகின் பல துறைமுகங்கள் எரிவாயு தட்டுப்பாட்டை சந்தித்து செய்வதறியாது விழி பிதுங்கி நின்றன.

சரக்கு கப்பல்கள் நங்கூரம் போட்டு மாதக்கணக்கில் துறைமுகத்தை விட்டு அகலாமல் நின்றன. *கச்சா எண்ணெய் விலை 160 டாலர்களை தொட்டு அரக்க முகம் கொண்டு பயமுறுத்தியது*.

பல நாடுகளில் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் போர் பதற்றங்கள் வேறு.

*இந்தியா மட்டும் சீராக சென்றுகொண்டிருந்தது. ஒரு கணம் அமெரிக்கா, ரஷ்யாவின் பார்வைகள் இந்தியாவின் பதற்றமில்லா நிலையை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கின*.

*இந்தியாவில் ஒரே ஒரு வங்கி கூட திவாலாகவில்லை. வளர்ச்சி மற்றும் உற்பத்தி விகிதம் வழக்கம்போல சராசரி அளவில் உயர்ந்தது*.

மேலை நாடுகளுக்கு சேவை செய்யும் IT நிறுவனங்கள் மட்டும் அமெரிக்காவிடம் இருந்து ப்ரொஜெக்ட் வராததால் தங்கள் ஊழியர்களை Layoff செய்தது. வேறு யாரும் வேலை இழக்கவில்லை.

*உணவு தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. சிறு நிறுவனங்கள் கூட இந்தியாவில் மூடப்படவில்ல*.

இதற்கிடையில் *ஊரக மேம்பாட்டுக்காக வாஜ்பாய் ஆட்சியில் உலக வங்கியில் வாங்கிய கடனும் அடைக்கப்படது*.

இது அத்தனையையும் சாத்தியமாக்கிய அந்த மாமேதை இந்தியப் பிரதமரை, மூன்று ஐரோப்பிய நாடுகளின் பிரதமர்கள் வந்து சந்தித்து நெருக்கடி நிலையை சமாளிக்க ஆலோசனைகள் கேட்டார்கள்.

பொருளாதார தேக்கநிலையை சமாளிக்க IMF நடத்திய கலந்தாய்வில் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் அழைக்கப்பட்டார். ஆம் உலகமே வியந்த அந்த தன்னிகரற்ற பொருளாதார மாமேதை

👍👍 *Dr.மன்மோகன் சிங்*👍👍

அப்படிப்பட்ட மாமேதையை தூக்கி விட்டு...... *வளர்ச்சி* என்றப் பெயரில் விவரமறியா கும்பல்களிடம் ஆட்சியைப்  பறி கொடுத்துவிட்டு.......!

இன்று ஒட்டுமொத்தமாக திவாலாகிக் கொண்டிருக்கின்றோம்.

வளர்ச்சி என்றப் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள்.... இந்தியாவை வளரும் நாடுகளின் பட்டியலிருந்தே தூக்க வைத்து விட்டது தான் இன்றைக்கு ஆட்சியிலிருப்பவர்களின் சாதனை.

Tuesday, October 24, 2017

குலதெய்வ வழிபாடு ஏன் அவசியம்?

குல தெய்வம் என்பது , உங்கள் குலத்தில் தோன்றிய உங்கள் முன்னோர்களாகக் கூட இருக்கக் கூடும் . அல்லது உங்கள் குடும்பம், சமூகம் அல்லது பல குடும்பங்கள் விளங்க தங்கள் உயிரையே கொடுத்து காப்பற்றியவராய் கூட இருக்கலாம். எந்த ஒரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு, ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே.
நீங்கள் ஒருவேளை குல தெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை.
உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக சென்று வரவேண்டும்.ஒருவேளை உங்கள் குலதெய்வம் இருக்குமிடத்திலிருந்து நீங்கள் வெகுதூரம் வாழ்ந்துகொண்டிருந்தால்,ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பூஜை செய்வதற்குரியபணத்தை மணி ஆர்டர் அனுப்பிவிடுவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.கோவில் நிர்வாகத்தினர் உங்களது பெயர்,நட்சத்திரம்,ராசிப்படி அர்ச்சனை செய்து பிரசாதத்தை அனுப்பி வைப்பார்கள்(பல இடங்களில் இதை நடைமுறையாகவே வைத்திருக்கின்றார்கள்).நீங்கள் வருடத்துக்கு ஒருமுறை நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.
மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய்,பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல்வைத்து படையல் போட்டு வணங்கியப்பின்னரே,அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.
குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.வீடு கட்டுவதற்கும்,திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.
ஒருவருக்குக்குலதெய்வம் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் பத்திர காளி அம்மன் என வைத்துக்கொள்வோம்.அவர் சென்னையில் குடியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.அவர் தனது குல தெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை சென்னையில் இருக்கும் வடிவுடை அம்மனுக்கோ, காளிகாம்பாளுக்கோ செய்துவிட்டால்,அது குலதெய்வத்தைப் போய்ச்சேராது.ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமான சித்தர்களின் ஜீவன் அமைந்திருப்பதால்,இந்த நிலை.எனவே,தனது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றே நேர்த்திக்கடனை செலுத்திட வேண்டும்.


Saturday, June 10, 2017

கோலம் போடும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்

சில விதிகள் ஏற்ப கோலமிட்டால்
வாழ்க்கையில் வளம் சேரும்.
சூரியன் உதிப்பதற்கு முன்பு பசுஞ்சாணம் தெளித்து கோலம்போட வேண்டும்.
வீட்டு வாசலில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் .
எனவே புது தண்ணீரே தெளிக்க வேண்டும்.
தெற்கு பார்த்தோ,
தெற்கில் முடியும்படியோ
கோலம்போடக்கூடாது.
கோலம் போட்டதும் காவி இடுவது மும்மூர்த்திகளை குறிக்கும்.
கோலத்தின் நடுவில் செம்பருத்தி,
பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும்.
வியாழக்கிழமை துளசி மாட கோலம்,
வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரை கோலம்
சனிக்கிழமை பவளமல்லி கோலம்
பவுர்ணமி தினத்தன்று தாமரைப்பூ கோலம்
ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை கோலம்,
திங்கட்கிழமை அல்லி மலர்க்கோலம்
செவ்வாய்க்கிழமை வில்வ இலை கோலம்,
புதன் மாவிலைக்கோலம்
ஞாயிற்றுக்கிழமை சூரிய கோலம் போடுதல் நல்லது.
வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம்
தீய சக்திகளை உள்ளே விடாது.
அமாவாசை மற்றும்
இறந்தவர்களுக்கு
திதி தரும் நாட்களில்
வாசலில் கோலம் போடக் கூடாது.
அந்த ஆத்மாக்களை வீட்டினுள்
அனுமதிக்காமல் கோலங்கள் தடுக்கும்.
அதனால் நம் முன்னோர்கள்
நம்மை தேடி வருகிற திதி தரும் நாளில் வாசலில் கோலங்கள் போடாமல் இருந்து,அவர்களை வீட்டினுள் அனுமதித்து
ஆசி பெறுவது நல்லது.
இடது கையால் கோலம் போடக்கூடாது.
குனிந்து நின்றே கோலம் போட வேண்டும்.
உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும்.
கோலம் போட்ட பிறகே
அடுப்பு பற்றவைக்க வேண்டும்.
ஆள்காட்டி விரலை நீக்கியே
கோலம் போட வேண்டும்.
கிழமைக்கு ஏற்ப வாசலில் கோலமிட்டால் கெட்ட ஆவிகள் நம் வீட்டை நெருங்காது.
பின்குறிப்பு: மேலே உள்ள ஆலோசனைகள் ready made stticker & ப்ளாஸ்டிக் கோலங்களுக்கு பொருந்தாது.
விஜய் சுவாமிஜி,
ஸ்ரீ பைரவா பவுண்டேஷன்

பைரவ வழிபாடு கைமேல் பலன்

எட்டாவது திதிநாள் எனப்படும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் வரும் எட்டாவது திதிநாட்கள் பைரவ வழிபாட்டிற்குரியவை.
இவ்விரு அஷ்டமிகளில் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து சிவனை வழிபடுவதற்குரிய நாள். ஆடித்தேய்பிறை அஷ்டமிக்கு நீலகண்ட அஷ்டமி என்ற பெயரும் உண்டு. இந்த நாளில் பழங்கள் மட்டுமே உண்டு அர்ச்சிக்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை மேட்கொண்டு நடத்தும் விரதம் இது. ஞாயிறு பைரவ வழிபாட்டிற்கு உகந்த நாள். திரிபுவனம் ஸ்ரீ சரபர் – திருவிசலூர் சதுர்கால பைரவர் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்து பைரவரை வழிபடலாம்.
நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.
குழந்தைப்பேறு கிட்ட தம்பதியர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவப்பு நிறப் பூக்களால் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.
வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமே ஸ்கஸ்ரநாமமோ அர்ச்சனை செய்யது 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.
இழந்த சொத்தைத் திரும்பப் பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நெய் அல்லதி நல்லெண்ணை இட்டு தீபம் ஏற்றுவது பைரவ தீபமாகும்.
சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால்அர்ச்சனை செய்யது 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.
திருமணத் தடை நீங்க ஞாயிறு இராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.
பகைபயம் நீங்க 9 முறை பைரவருக்கு அர்ச்சனை செய்யது வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள் செய்ய வேண்டும். இப்படி 9 கிழமைகள் செய்தால் வியாபார நஷ்டம் விலகும், எல்லாத் தொல்லைகளும் அகலும்.
தீராத் நோய்கள் தீர பைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்ய வேண்டும். அந்த அபிஷேக தீர்த்தத்தை உட்கொள்ள பிணிகள் தீரும்.
செல்வம் செழிக்க வளர்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ணபுஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்தக்காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் பணப் பெட்டியில் வைக்க செல்வம் செழிக்கும்.
தினந்தோறும் காலையில்
” ஓம் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷணபைரவாய நமஹ “
என்று ஜெபிப்பது நல்லது.
விஜய் சுவாமிஜி,
ஸ்ரீ பைரவா பவுண்டேஷன்

Wednesday, February 15, 2017

அற்புதமான வாழ்க்கை போதனை.....*

*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,*
*சீன அறிஞர் எழுதியது,அது தமிழாக்கத்தில்.......!!!*
*வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!*
*தேவைக்கு செலவிடு........*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி......*
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்......*
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......*
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......*
*ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...*
*உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....*
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......*
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....*
*உன் குழந்தைகளை பேணு......*
*அவர்களிடம் அன்பாய் இரு.......*
*அவ்வப்போது பரிசுகள் அளி......*
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........*
*அடிமையாகவும் ஆகாதே.........*
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*
*பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க*
*இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!*
*அதைப்போல*
*பெற்றோரை மதிக்காத* *குழந்தைகள்*
*உன் சொத்து* *பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......*
*உன் சொத்தை தான் அனுபவிக்க,*
*நீ சீக்கிரம் சாக வேண்டுமென,*
*வேண்டிக் கொள்ளலாம்*-
*பொறுத்து கொள்.*
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*
*கடமை ,அன்பை அறியார்*
*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
*ஆனால்......*
*நிலைமையை அறிந்து*
*அளவோடு கொடு*
*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்*
*கை ஏந்தாதே,*
*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி*
*வைத்திராதே*
*நீ*
*எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து*
*காத்திருப்பர்.*
*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*
*தரவேண்டியதை பிறகு கொடு.*
*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!*
*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......*
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
*நண்பர்களிடம் அளவளாவு.*
*நல்ல உணவு உண்டு.....*
*நடை பயிற்சி செய்து.....*
*உடல் நலம் பேணி......*
*இறை பக்தி கொண்டு......*
*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......*
*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!*
*வாழ்வை கண்டு களி...!!*
*ரசனையோடு வாழ்.....!!*
*வாழ்க்கை வாழ்வதற்கே,....!!*

Tuesday, January 31, 2017

கடவுள் மட்டுமே நிரந்தரம்

உலகத்திற்கு ஆதாரமான கடவுள் மட்டுமே நிரந்தரமானவர். மற்றதெல்லாம் நிலையற்றவையே.
* வாழ்க்கை என்பது வியாபாரம் அல்ல. கைமாறு கருதாமல் நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்குச் செய்ய வேண்டும்.
* பாவத்திற்கு காரணமான ஆசை, கோபம் இரண்டையும் மனதிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது.
* பணத்தின் தேவை அதிகரித்தால் நிம்மதியும், அமைதியும் குறையத் தொடங்கி விடும்.
- காஞ்சிப்பெரியவர்

Wednesday, January 25, 2017

சாணக்கிய சூத்திரங்கள்

1. தர்மம் சந்தோஷத்தைக் கொடுக்கும்.
2.பணம் இருந்தால் தர்ம 
காரியங்கள் செய்யலாம்.
3.பணத்தினால் நாட்டின் 
சுபிட்சம் பெருகும்.
4. புலனடக்கம் நாட்டின் 
மேன்மையைப் பெரிதாக்கும்.
5.பணிவு இருந்தால் புலனடக்க முடியும்.
6.பெரியோர்களுக்குச் சேவை 
செய்தால் பணிவு வளரும்.
7.முதியோர் சேவைதான் 
உண்மையான அறிவு.
8.பாமர ஜனங்களின் கோபம் 
எல்லாக் கோபங்களையும் விட 
மோசமானது.
9.ஒரு சக்கரம் ஒரு வாகனத்தை 
நடத்தி செல்ல முடியாது. 
10.விவாதத்திற்கும் ஆலோசனைக்கும் 
பிறகே எல்லாக் காரியங்களையும் 
ஆரம்பிக்க வேண்டும்.
11.அதிர்ஷ்டம், கடுமையாக 
உழைப்பவர்களுக்கு 
மட்டும்தான் கிடைக்கும்.
12. அதிர்ஷ்டத்தை மாத்திரம் 
நம்பினவன் ஒருபோதும் 
வெற்றி அடைவதில்லை.
13.உங்களிடம் இருக்கும் 
குறைகளை யாரிடமும் 
சொல்லாதீர்கள்.
14.பொறுமை இல்லாதவனுக்கு 
நிகழ்காலமும் எதிர்காலமும் 
கிடையாது.
15.அளவோடு சாப்பிடுவது 
உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
16.வயதான காலத்தில் 
சிறு உபாதைகளையும் 
அலட்சியப்படுத்தாதீர்கள்.
17.திருடுவதைவிடச் சாவது மேல்.
18.பசியைவிடப் பெரிய எதிரி இல்லை.
19.பாத்திரமறிந்து தானம்செய்.
20.வயதுக்கேற்ற ஆடை அணி.
21.மேதை, முட்டாள், நண்பன், 
ஆசிரியர் மற்றும் உன் எஜமானன், 
இவர்களுடன் தர்க்கம் செய்யாதே.
22.தாயார்தான் எல்லா குருமார்களைவிடச்
சிறந்தவள்.
23.முட்டாள் நண்பனைவிட 
புத்திசாலி எதிரி சிறந்தவன்.
24.எதுவும் சாஸ்வதம் இல்லை.
25.அஹிம்ஸைதான் மதத்தின் சின்னம்.
சாணக்கிய நீதி
1.கடவுள் இருப்பிடம் 
கல்லிலோ, மரக் கட்டையிலோ, 
மண்ணிலேயோ இல்லை. 
மனிதர்களின் உணர்ச்சிகளிலும் 
(feelings) எண்ணங்களிலும்தான்.
2.எப்படி பூக்களில் நறுமணம் 
இருக்கிறதோ, 
எண்ணெய் விதைகளில் 
எண்ணெய் இருக்கிறதோ, 
மரக் கட்டையில் நெருப்பு 
இருக்கிறதோ, 
பாலில் நெய்யும், 
கரும்பில் சர்க்கரையும் 
இருக்கிறதோ, 
அப்படித்தான் 
கடவுள் நம்முடைய 
உடம்பில் வாசம் செய்கிறார். 
புத்தியுள்ள மனிதன் இதைப் 
புரிந்துகொள்ள வேண்டும்.
3.மனித வாழ்க்கையின் 
முக்கியமான 5 விஷயங்கள்- 
வயது, வேலை, 
பொருளாதார வசதி, 
படிப்பு, மரணம் — 
அவன் கருவில் இருக்கும்போதே 
தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன.
4.ஒரே ஒரு காரியத்தினால் 
இந்த உலகத்தை 
ஜெயிக்க ஆசைப்பட்டால், 
அது முடியும் — 
மற்றவர்களை தூஷணையாகப் 
பேசத் துடிக்கும் உன் நாக்கை 
அடிக்கி வைத்தால் — 
நா காக்க.
5.வெளி தேசத்தில், 
உன் அறிவு, உனக்கு நண்பன். 
வீட்டுக்குள், உன் மனைவிதான் 
உன் நண்பன். 
வியாதிஸ்தனுக்கு மருந்துதான் 
நண்பன். 
மரணத்திற்குப் பின் உன் நண்பன் 
நீ செய்த தர்மம்தான்.
6.ஆசைப்பட்டவர்களிடமிருந்து பிரிவு, 
நெருங்கிய உறவினர்களிடமிருந்து 
அவச் சொற்கள், தீர்க்க முடியாத கடன், 
கொடுங்கோல் அரசனுக்குச் 
செய்யும் சேவை, 
கெட்ட புத்தியுள்ளவர்களுடன் நட்பு - 
இவை போதும், ஒரு மனிதனை எரிக்க. 
வேறு நெருப்புத் தேவையில்லை.
5.வயதான காலத்தில் மனைவியின் 
மரணம், சகோதரர் கையில் பண 
அதிகாரம், தினசரி உணவுக்காக 
மற்றவரை அண்டி நிற்பது — 
இவை வாழ்க்கையின் முரண்பாடுகள். 
(anamoly). 
இவையே துக்கத்திற்கு காரணங்கள்.
8.நல்ல படிப்பு வேண்டும் என்று 
நினைக்கிற மாணவன் 
தவிர்க்க வேண்டிய விஷயங்கள் — 
காமம், குரோதம், லோபம், 
அழகு படுத்திக்கொள்வது, 
வேண்டாத பொழுதுபோக்குக்காக 
நேரம் செலுத்துவது, 
அதிகமான தூக்கம், 
எல்லா விஷயங்களிலும் 
எல்லை மீறி நடப்பது.
9.இந்த உலகம் ஒரு அழகான மரம். 
எப்பொழுதும் இரண்டு 
ருசிமிக்க பழங்களைக் 
கொடுக்கும் — 
அழகான,மிருதுவான பேச்சு; 
நல்லவருடைய சேர்க்கை.
10.பாம்பிற்குப் பல்லில் விஷம். 
விஷப் பூச்சிக்கு அதன் 
தலையில் விஷம். 
தேளுக்கு அதன் வாலில் விஷம். 
கெட்ட குணம் படைத்த 
மனிதனுக்கு 
உடல் பூரா விஷம்.
11.கடந்த காலத்தை நினைத்து 
வருந்தக் கூடாது. 
எதிர்காலத்தை நினைத்துக் 
கவலைப்படக் கூடாது. 
புத்திசாலிகள் நிகழ்காலத்தை 
மட்டும் நினைத்துத் 
தங்கள் வாழ்க்கையை 
அமைத்துக்கொள்வார்கள்.
12.எக்காரணத்தைக் கொண்டும் 
கீழே சொல்லப்பட்டவற்றை 
உங்கள் காலால் தொடதீர்கள் — 
நெருப்பு, ஆசிரியர், பிராமணர், 
பசு, கன்னிப் பெண், 
வயதானவர்கள்,குழந்தைகள்.
13.ஒரு தனிமனிதனைக் 
குடும்ப நலத்திற்காகவும், 
ஒரு குடும்பத்தைக் கிராம 
நலத்திற்காகவும், 
ஒரு கிராமத்தை தேச 
நலத்திற்காகவும், 
மனச்சாட்சிக்காக 
உலகத்தையும் 
தியாகம் செய்யலாம்.
14.எதிலும் அளவோடு 
செயல்பட வேண்டும். 
எல்லாமே ஒரு அளவோடு 
இருக்க வேண்டும். 
'சீதையின் மிக அதிகமான அழகு 
அவள் கடத்தப்படுவதற்குக் 
காரணமாக இருந்தது. 
ராவணனின் அளவுகடந்த திமிர் 
அவன் மரணத்திற்குக் காரணமாக 
அமைந்தது. 
மகாபலியின் அளவுக்கதிகமான 
தானம் செய்யும் புத்தி 
அவன் ஏமாறுவதற்கு 
வழிசெய்துகொடுத்தது.
15.மனிதன் தனியாகவே 
இந்த உலகத்திற்கு 
வருகிறான். 
தனியாகவே உலகத்தை 
விட்டுச் செல்கிறான். 
தனியாகவே தான் செய்த 
நல்லது- கெட்டது காரியங்களின்
பயனை அனுபவிக்கிறான். 
தனியாகவே தனக்கு உண்டான 
முடிவான நிலையை அடைகிறான்.

Friday, December 2, 2016

சித்தர்களால்_சொல்லப்பட்ட_20_பரிகார_முறைகள்

(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.
(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.
(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.
(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.
(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.
(7)அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.
(8)செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.
(9) 7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.
(10)வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.
(11)ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.
(12)படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.
(13)வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.
வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.
(14)உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..
(15)உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல்
போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்
(16)சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .
(17)வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்
(18)கோவில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.
இதற்குப் பரிகாரம்:
வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று
(19)சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.
இதற்குப் பரிகாரம்:
ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு “ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய” என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்
(20)கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்

Sunday, October 30, 2016

உடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா?

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது.

மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.

கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.

நீங்கள் உறங்கிய பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும்.

பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

Monday, October 24, 2016

உங்கள் வீடுகளில் சதா ஒப்பாரி சத்தமா?...

உங்கள் வீடுகளில் சதா
ஒப்பாரி சத்தமா?...
பெண்களுக்குள் போட்டியும்,பொறாமையுமா?...
லட்சுமி வாசம் செய்வதற்கு பதில் தரித்திர தாண்டவமா?...
அனைத்துக்கும் காரணம் டிவி சீரியல்கள்தான்...
அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள் !
டிவி நாடகங்களில் வரும் அழுகை சத்தங்கள், ஒப்பாரிகள், உரக்கக் கத்திப் பேசுதல்,சோகம் மற்றும் இழவு இசைகள் உங்கள் வீட்டில் இருக்கும் லக்ஷ்மி கடாக்ஷத்தைச் சீர் குலைத்து கெடுத்து விடும்.
இதனால் வீட்டில் பணம் தங்காமல் போகும்.
வீண் செலவுகள் ஏற்படும்.
அது மட்டுமின்றி உங்கள் உடல் நலத்தையும் சீரழித்து விடும்.
இதனால் தலைவலி, ரத்த அழுத்தம், இதய கோளாறுகள்,மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்...
முக்கியமாக பிறரை எப்படிக் கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது,
மாமியார் மருமகள் சண்டை,
சந்தேகப்படுவது, சகுனி வேலை பார்ப்பது,
பிறர் தொழிலை எப்படி கெடுப்பது என்பதே காண்பிக்கப்பட்டு மக்களுக்கு பழக்குவிக்கப்படுகிறது .
சுய லாபத்துக்காக இப்படி மக்களைச் சீரழிப்பதில் டிவி சீரியல்கள் முதலிடம் வகிக்கிறது.
தயவுசெய்து மக்களே,
இது போன்ற கேவலமான நாடகங்களைப் புறக்கணியுங்கள்.
நமது செயல் மட்டும் இல்லை எண்ணங்களும் நமது கர்மாதான்.
எனவே உங்கள் விலைமத்ப்பில்லா ஓய்வு நேரத்தை அன்பான குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள கணவன், மனைவி, பெரியவர்களோடும் நல்ல புத்தகங்களைப் படிப்பதிலும் பிறருக்கு நன்மை செய்யும் நல்ல
காரியங்களிலும் ஈடுபடுங்கள்.
இல்லையேல் வரும் பலன்களை
நல்லதோ கெட்டதோ நீங்கள்தான் அவற்றை உருவாக்கினீர்கள் என்பதை உணர்ந்து அனுபவிக்க தயாராகுங்கள்.
அல்லதை விடுத்து நண்பர்களே
நல்லதை பாருங்கள் ,
கேளுங்கள்
பேசுங்கள்,
சிந்தியுங்கள்
வாழ்வில் எல்லாம் நல்லதாய் நடக்கும்.
வாழ்க வளமுடன் & நலமுடன்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நம்மை சுற்று நடப்பனவற்றுக்கு
நாமே பொறுப்பு.
நம் எண்ணம் போலவே நம் வாழ்க்கை.

Saturday, October 1, 2016

“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்

*“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀🎀*

*காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*

* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*

*பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*

*சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*

* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்*

*வாழை வாழ வைக்கும்*

*அவசர சோறு ஆபத்து*

*ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*

*இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*

*ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*

*இருமலை போக்கும் வெந்தயக் கீரை*

*உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*

*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*

*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*

*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*

*💎சித்தம் தெளிய வில்வம்*

*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*

*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*

*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*

*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*

*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*

*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*

*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*

*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*

*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*

*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*

*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*

*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*

*உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.*

*🎀🎀நலம் உடன் வாழ்வோம்🎀🎀*

குடல் புழுத் தொல்லை தடுப்பது எப்படி?


குடல் புழுத் தொல்லை தடுப்பது எப்படி?


டாக்டர் கு. கணேசன்

குழந்தைகளுக்கு ஏற்படுகிற மோசமான பாதிப்புகளில் குடல்புழு தொல்லை முக்கியமானது. உலக அளவில் சுமார் 200 கோடி பேர் குடல் புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் ஒரு வயதிலிருந்து 12 வயதுக்கு உட்பட்ட 22 கோடி குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரம் கூறுகிறது. சுயசுத்தமும் சுற்றுப்புற சுகாதாரமும் குறைவதால் இது உண்டாகிறது. சுற்றுச்சூழல் சுகாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு மட்டுமல்ல... பெரியவர்களுக்கும் சிறுவர் சிறுமிகளுக்கும் இளைய வயதினருக்கும்கூட இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.



காரணங்கள்

அசுத்தமான சுற்றுப்புறம்தான் குடல்புழுத் தொல்லைக்கு அடிப்படைக் காரணம். குறிப்பாக, தெருவோரங்களை திறந்தவெளிக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் தொல்லை அடிக்கடி வருகிறது. அசுத்தமான தெருவில், மண்தரையில், தண்ணீரில் குழந்தைகள் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, காலில் செருப்பு அணியாமல் நடப்பது, உணவு சாப்பிடுவதற்கு முன்னால் கைகளைக் கழுவி சுத்தப்படுத்தத் தவறுவது ஆகியவை குடல்புழுத் தொல்லை ஏற்படுவதற்குத் துணை போகின்றன. சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவு மூலமும் இது ஏற்படுகிறது. குழந்தைக்கு மண் தின்னும் பழக்கம் இருந்தால் குடலில் புழு வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சமையலுக்கு முன்பு காய்கறிகளைக் கழுவி சுத்தம் செய்யத் தவறினாலும் குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

புழுக்கள் வளரும் விதம் குடல்புழுக்களில் உருண்டைப் புழு, கொக்கிப் புழு, நூல் புழு, சாட்டைப் புழு, நாடா புழு எனப் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையிலும் ஆண், பெண் என்று இனமுண்டு. பெண் புழு இடுகிற முட்டைகள் மனித மலத்தின் வழியாக நிலத்துக்கு வந்து மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும். குழந்தைகள் விளையாடும்போது கை விரல் நகங்களில் அவை புகுந்துகொள்ளும். கைகளை நன்றாகச் சுத்தப்படுத்தாமல் உணவைச் சாப்பிடும்போது உணவுடன் முட்டைகள் சிறுகுடலுக்குச் சென்று, பொரிந்து ‘லார்வா’க்கள் எனும் குறும்புழுக்கள் வெளிவரும்.

ஒவ்வொரு லார்வாவும் சிறுகுடலின் சுவற்றைத் துளைத்து, ரத்தத்தில் கலந்து, கல்லீரலுக்குச் சென்று சுமார் 4 நாட்கள் அங்கே தங்கும். பிறகு அங்கிருந்து இதயத்துக்குச் சென்று நுரையீரலுக்குள் நுழையும். பிறகு அங்கிருந்து உணவுக்குழாய்க்கு வரும், மீண்டும் இரைப்பை வழியாக குடலுக்கு வந்து சேரும். இந்த ‘சுற்றுலா’வுக்கு சுமார் மூன்று மாதங்கள் ஆகும். அதற்குள் ‘லார்வா’ கட்டத்தில் இருந்தவை முழுப் புழுக்களாக வளர்ச்சி பெற்றுவிடும். அதன்பிறகு நமக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கும்.



உருண்டைப் புழு

குடல்புழுக்களில் பரவலாக நம்மைப் பாதிப்பது ‘உருண்டை புழுக்கள்’ (Round worms). பார்ப்பதற்குப் பழுப்பு நிறத்தில் ஒரு சரடு மாதிரி இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு 20 புழுக்களிலிருந்து 100 புழுக்கள் வரை இருக்கலாம். ஓர் ஆண் புழுவின் நீளம் 10 - 20 செ.மீ. ஒரு பெண் புழுவின் நீளம் 30 - 40 செ.மீ. ஒரு பெண்புழு ஒரே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரம் முட்டைகளை இடும். ஒரு புழுவானது ஒரு வருடம் வரை நம் குடலில் வாழும். உருண்டைப் புழுக்கள் குடலில் இருந்தால் அந்த நபருக்கு அடிக்கடி வயிற்றில் வலி வரும். பசி குறையும். சாப்பிடப் பிடிக்காது. குமட்டல் வரும். உணவு செரிமானம் குறையும். உடல் மெலியும். எடை குறையும். இந்தப் புழுக்கள் புரதச் சத்தை விரும்பிச் சாப்பிடுவதால், இந்த நபர்களுக்குப் புரதச் சத்துக் குறைவு நோய் (Protein Malnutrition) ஏற்படும். இந்தப் புழுக்களின் உடலிலிருந்து ஒருவித நச்சுப்பொருள் சுரக்கிறது. இது பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, சருமத்தில் அரிப்பு, சிவந்த தடிப்புகள் ஏற்படுவதுண்டு. சிலருக்கு வறட்டு இருமல் ஏற்படும். இளைப்பு ஏற்படலாம். இந்தப் புழுக்கள் அதிக எண்ணிக்கையில் ஒன்று கூடிவிட்டால் ஒரு பந்துபோல் திரண்டு குடலை அடைத்துக்கொள்ளும். அப்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமையும் ஏற்படும்.

குழந்தைகள் சாப்பிடும் உணவில் உள்ள சத்துகளை உருண்டைப் புழுக்கள் சாப்பிட்டுவிடுவதால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைவு ஏற்படுகிறது. இதன் விளைவாக உடல் வளர்ச்சிக் குறைவும் மனவளர்ச்சிக் குறைவும் ஏற்படுகின்றன. கொக்கிப் புழு அமைப்பில் உருண்டைப் புழுக்களைப்போலவே இருக்கிற ‘கொக்கிப் புழுக்கள்’ (Hook worms) அளவில் மட்டும் மிகச்சிறியவை. இவற்றின் லார்வாக்கள் மனிதப் பாதத்தின் சருமத்தைத் துளைத்துக் கொண்டு நேரடியாகவே ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குச் சென்று இதயம், நுரையீரல், உணவுக்குழாய், இரைப்பை வழியாக குடலுக்கு வந்து முழு புழுக்களாக உருமாறுவதுண்டு. ஓர் ஆண் புழு 8 மி.மீ நீளமிருக்கும். பெண் புழு 12.5 மி.மீ. நீளமிருக்கும். இவற்றின் அகலம் அதிகபட்சமாக 5 மி.மீ. இருக்கும். இவை மூன்று ஆண்டுகளுக்கு மேல் நம் குடலில் உயிர் வாழும். இவற்றின் வாய்ப்பகுதி கொக்கிபோல் வளைந்திருக்கும். அதில் நான்கு சூரப்பற்கள் இருக்கும். குடல் சுவற்றில் கொக்கி கோர்த்ததுபோல் தொங்கிக்கொண்டிருக்கும். குடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி வாழும். இத்தோடு புழுக்கள் கடித்த குடல் பகுதியிலிருந்து ரத்தம் தொடர்ந்து கசியும். இவ்வாறாக குடலிலிருந்து ரத்தம் வெளியேறுவதால், கொக்கிப்புழுவால் பாதிக்கப்பட்ட நபருக்கு வயிற்றுப் பிரச்னைகளோடு ‘ரத்தசோகை நோய்’ (Anaemia) ஏற்படுவதுதான் முக்கியமான பாதிப்பு.

ஒரு கொக்கிப் புழுவானது நாளொன்றுக்கு 0.2 மி.லி. ரத்தத்தை உறிஞ்சிவிடும். ஒருவரின் குடலில் ஒரே நேரத்தில் ஆயிரம் புழுக்களுக்கும் அதிகமாக வசிப்பதுண்டு. அப்படியானால் இந்தப் புழுக்கள் தினமும் எவ்வளவு ரத்தத்தைக் குடித்து நம்மை பாதிக்கும் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். நடைமுறையில் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாதங்களில் பித்தவெடிப்பு, சேற்றுப்புண் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட வேலை செய்பவர்களுக்குக் கொக்கிப் புழு பாதிப்பு மிக அதிகம்.

இந்தியாவில் குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் ரத்தசோகை நோய் ஏற்பட முக்கியக் காரணம் கொக்கிப்புழு தொல்லைதான். குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏற்படும்போது நினைவாற்றல் குறைகிறது. கல்வித்திறன், சிந்தனைத்திறன் என ஒட்டுமொத்த செயல்திறனும் பாதிக்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு இது ஏற்படும்போது தாயையும் சேயையும் பாதிக்கிறது. கொக்கிப்புழு லார்வாக்கள் பாதங்களைத் துளைத்து உடலுக்குள் நுழைகின்றன. அப்போது பாதங்களில் அழற்சி, அரிப்பு, தடிப்புகள் ஏற்படலாம். ஒருவருக்குப் படை எதுவுமில்லாமல் பாதங்களில் அரிப்பு ஏற்பட்டால் கொக்கிப்புழு பாதிப்பு இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

நூல் புழு

குடல்புழுக்களில் மிகச் சிறியவை ‘நூல் புழுக்கள்’ (Thread  worms). பார்ப்பதற்கு வெட்டிப்போட்ட பருத்தி நூல்போல் வெள்ளை நிறத்தில் இருக்கும் ஓர் ஆண் புழுவின் நீளம் 2 லிருந்து 4 மி.மீ. ஒரு பெண் புழுவின் நீளம் 8லிருந்து 12 மி.மீ. இவற்றின் தடிமன் 0.1 லிருந்து 0.5 மி.மீ.பொதுவாக இப்புழுக்கள் குழந்தைகளைத்தான் வெகுவாக பாதிக்கும். மற்ற புழுக்கள் எல்லாம் குடலில்தான் முட்டை இடும். இவை மட்டும் மனிதனின் மல வாயில் முட்டை இடுகின்றன. இதனால் அங்கு அரிப்பு ஏற்படும். இரவில் ஏற்படும் மலவாய் அரிப்புதான் இந்தப் புழுக்களால் ஏற்படுகிற பெருந்தொல்லை. இதன் விளைவால் பலருக்கும் இரவில் தூக்கம் கெடும். நூல் புழுக்களைப் பொறுத்தவரை ஆரோக்கியத்துக்கு அதிகமாகக் கெடுதல் தருவதில்லை.

சாட்டைப் புழு

பார்ப்பதற்கு சாட்டையைப்போல ஒரு முனை தடித்தும் மறுமுனை ஒல்லியாக நீண்டும் இருப்பதால் இப்புழுவுக்குச் ‘சாட்டைப்புழு’ (Whip worm) என்று பெயர். ஓர் ஆண் புழுவின் நீளம் 3 லிருந்து 4 செ.மீ. ஒரு பெண் புழுவின் நீளம் 4 லிருந்து 5 செ.மீ. குழந்தை இரவில் திடீரென்று உறக்கத்தில் எழுந்து அழுதால் அல்லது வயிற்றுவலி என்று சொன்னால் சாட்டைப்புழு பாதிப்பு இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தக் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கும் ஏற்படும். பசியே இருக்காது. சாப்பிடமாட்டார்கள். எடை குறையும். உடல் மெலியும், இவர்கள் ஒல்லியாகவும் செயலில் மந்தமாகவும் இருப்பார்கள்.

நாடா புழு

ஒரு பாவாடை நாடாவைப்போல வெள்ளை நிறத்தில் நீளமாக இருக்கிற புழுக்களுக்கு ‘நாடா புழுக்கள்’ (Tape worms). என்று பெயர். இவற்றைத் தொட்டுப் பார்த்தால் தட்டையாக இருக்கும். இதனால்  ‘தட்டைப் புழுக்கள்’ என்றொரு பெயரும் உண்டு. இவற்றில் பல வகைகள் உள்ளன. முக்கியமானவை மாட்டிறைச்சி நாடா புழு (Beef Tape worm), பன்றி இறைச்சி நாடா புழு (Pork Tape worm). மீன் இறைச்சி நாடா புழு (Fish Tape worm), நாய் நாடா புழு (Echinococcus granulosus). ஒவ்வொரு புழுவும் ஒரு ரிப்பன் மாதிரி 5 மீட்டரிலிருந்து 10 மீட்டர் வரை நீளமாக இருக்கும். ஒருவருக்கு ஒன்றிரண்டு புழுக்கள்தான் இருக்கும். ஆனால், 15 ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கும்.சாதாரணமாக எல்லோருக்கும் இந்தப் புழுக்கள் தொற்றுவதில்லை. மாட்டு இறைச்சி / பன்றி இறைச்சி / மீன் இறைச்சியைச் சாப்பிடுபவர்கள் மற்றும் நாயுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இவை தொற்றுகின்றன. மாடு மற்றும் பன்றியின் தசைகளில் இந்தப் புழுக்களின் லார்வாக்கள் வசிப்பதே இதற்குக் காரணம். வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற தொல்லைகள் இதனால் வரலாம். மேலும் கல்லீரல், நுரையீரல், மூளை, சிறுநீரகம் போன்றவற்றில் ‘நீர்க் கட்டிகள்’ (Hydatid cysts) வளர்வதும் உண்டு. இது குழந்தைகளுக்கு அவ்வளவாக தொற்றுவதில்லை. பெரும்பாலும் பெரியவர்களுக்கு தொற்றுவதே நடைமுறை.

பரிசோதனை என்ன?

பெரும்பாலான குடல் புழுக்களை நோயாளிக்கு மலப்பரிசோதனை செய்வதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். மலத்தில் குடல் புழுக்களின் முட்டைகள் வெளிவருவதைக் கண்டறிந்து, எந்தப் புழுவின் முட்டை, எந்தக் குடல்புழு நோய் எனக் கணிக்கப்படுகிறது. மேலும் குடல் புழுக்களின் லார்வாக்கள் நுரையீரலுக்குள் பயணம் செய்யும்போது ரத்தத்தில் `இயோசினோபில்’ அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த எண்ணிக்கையை வைத்து மறைமுகமாக குடல்புழு தொல்லையைக் கணிப்பதும் உண்டு. நாடா புழுக்களைக் கண்டறிய, பாதிக்கப்பட்ட நபருக்கு குறிப்பிட்ட தசைகளின் திசுக்கள் ஆய்வு செய்யப்படும். அதன் மூலம் நாடாபுழு பாதிப்பை தெரிந்து கொள்ளலாம். நாடா புழுக்களின் பாதிப்பு இருப்பவர்களுக்கு மலத்தில் வெள்ளை நிறத்தில் வெட்டிப்போட்ட ரிப்பன் மாதிரி இவற்றின் உடற்பகுதிகள் வெளியேறும். இவற்றைப் பரிசோதித்தும் இந்தப் புழுக்களை உறுதி செய்யலாம்.

சிகிச்சை என்ன?

குடல் புழுவை ஒழிக்கப் பெரியவர்களுக்கு மாத்திரையாகவும் குழந்தைகளுக்குத் திரவ மருந்தாகவும் பல மருந்துகள் கிடைக்கின்றன. எந்தப் புழுவின் பாதிப்பு உள்ளது என்பதை மலப் பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப மருத்துவர் யோசனைப்படி மருந்து சாப்பிட்டால் குடல் புழுக்கள் 100 சதவிகிதம் அழிந்துவிடும். இந்த மருந்துகளில் நாடா புழுக்கள் தவிர மற்ற புழுக்களுக்கு ‘அல்பென்டசோல’ மாத்திரை அல்லது மருந்து முக்கியமாகத் தரப்படுவதுண்டு. நாடா புழுக்களுக்கு ‘நிக்லோசமைடு’ மாத்திரைகள் தரப்படுவதுண்டு. அதே வேளையில் சுகாதார முறைகளையும் கடைப்பிடித்தால்தான் குடல் புழுக்கள் மீண்டும் மீண்டும் தொல்லை தராது.

தவிர்க்க என்ன வழி?

* சுயசுத்தம் காக்கப்பட வேண்டும். சுற்றுப்புற சுகாதாரம் மேம்பட வேண்டும்.
* குளியலறை மற்றும் கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.
* திறந்தவெளிகளையும் தெருவோரங்களையும் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக்கூடாது.
* கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். குழந்தைகளையும் இவ்வாறு செய்வதற்குப் பழக்கப்படுத்துங்கள்,
* சகதி, சேறு உள்ள அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக்கூடாது. சுத்தமான இடங்களில் விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள்.
* நகங்களை பத்து நாட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும்.
* குழந்தைகள் விரல் சூப்பக்கூடாது.
* குழந்தை ஈரப்படுத்திய உள்ளாடைகளை உடனுக்குடன் மாற்றுவதும், தினந்தோறும் மாற்ற வேண்டியதும், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் முக்கியம்.
* எக்காரணத்துக்காகவும் உள்ளாடைகளை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
* ஈக்கள் மொய்த்த பண்டங்களைச் சாப்பிடக்கூடாது. காரணம், மலத்திலுள்ள புழுக்களின் முட்டைகளை குடிநீருக்கோ, உணவுக்கோ கொண்டுவருவதற்கு ஈக்களுக்குப் பெரும்பங்கு உண்டு.
* சாலையோரக் கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடக்கூடாது.
* காய்கனிகளை உண்பதற்கோ சமைப்பதற்கோ பயன்படுத்தும் முன்பு  தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.
* நன்றாகக் கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும்.
* பாதுகாக்கப்பட்ட உணவுகளையே உண்ண வேண்டும்.
* சாப்பிடுவதற்கு முன் கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டியது அவசியம்.
* காலில் செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும்
* அசுத்தமான குளம், குட்டை, ஏரி, நீச்சல்குளம் போன்றவற்றில் குளிப்பதையும் நீச்சலடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
* வீட்டுக்குள் நுழைந்ததும் பாதங்களை நன்றாகக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். பித்தவெடிப்பு, சேற்றுப்புண் இருந்தால் உடனே சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.
* தரமான கடைகளில் மட்டுமே இறைச்சிகளை வாங்க வேண்டும்.
* மீன், இறைச்சி போன்றவற்றை நன்றாக வேகவைத்தபின் சாப்பிட வேண்டும்.
* வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும் அதைத் தூக்கிக் கொஞ்சினாலோ, விளையாடினாலோ கண்டிப்பாகக் கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.  

சமையலுக்கு முன்பு காய்கறிகளை கழுவிச் சுத்தம் செய்யத் தவறினாலும் குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சு

⭕ பச்சரிசி அதிகமானால்- சோகை நோய்
⭕ அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம்
⭕ பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி
⭕ இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்
⭕பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்
⭕ தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்
⭕ மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.
⭕ கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்
⭕ பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.
⭕ முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்
⭕ எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்
⭕ மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.
⭕ மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.
⭕ காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.
⭕ டீ அதிகமானால் - உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்
⭕ எலுமிச்சை அதிகமானால் - பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.
⭕ எள்ளு அதிகமானால் - பித்தம் செரியாமை உண்டாகும்.
⭕ உப்பு அதிகமானால் - எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்
⭕ வெங்காயம் அதிகமானால் - தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்
⭕ குங்குமப்பூ அதிகமானால் - மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.
⭕ வெள்ளை பூண்டு அதிகமானால்- ரத்தம்
கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்
🍚🍲 *அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சு

Thursday, September 22, 2016

அர்த்த சாஸ்திரம் சொல்லும் முக்கிய 29 விடயங்கள்!

1 .ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.
2 .ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.
3 .ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .
4 .ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.
ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.
5. நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.
6 .உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.
7 .கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
8 .காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.
9 .பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.
10. சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
11 .சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
12. விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
13. இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
14 .கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
15 .அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.
ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
16 .யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.
17. எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
18. அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.
19. சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்.
20. வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.
21. அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.
கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.
22 எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.
23 மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.
பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .
24 பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.
கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.
25 கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.
26 வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.
27 பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.
28 வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.
29. கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.
உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம்.
தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.