Wednesday, October 2, 2019

இஞ்சி சூப்

வயிற்று உபாதைகளுக்கு ஆரோக்கியமான #இஞ்சிசூப் செய்வது எப்படி?

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

இதில் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன.

அந்த வகையில் இன்று இஞ்சியை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தக்காளி - 1
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
சீரகம், கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
செய்முறை

இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும். காய்ந்த மிளகாயை சுட்டு வைக்கவும்.

சின்ன உரலில் இஞ்சி, ப.மிளகாய், பூண்டு, சுட்ட மிளகாய், மிளகு, சீரகம், சின்னவெங்காயம், தக்காளி, சேர்தது அரைத்து கொள்ளவும்.

வாணலியில எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த கலவை சேர்த்து வதங்கவும்.

இந்த கலவை சற்று வதங்கியதும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும். சுவையான இஞ்சி சூப் தயார்.

No comments: