Thursday, August 16, 2012

நாவை அடக்கப் பழகினால் ஞானியாக முடியும்

* அழுக்குத் துணிகளை நல்ல துணிகளோடு சேர்த்துக் கட்டுவதில்லை. அதுபோல, கொடிய தீயவர்களோடு நல்லவர்கள் சேர விரும்புவதில்லை.
* சர்க்கரை என்று எழுதிக் காட்டினால் இனிப்பை உணர வைக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உண்மையை உணர முடியும். அனுபவமே நமக்கு நல்ல ஆசிரியராக வழிகாட்டுகிறது. 
* எதிலும் மாறுபாடான சிந்தனை இருப்பதை தவிர்க்க முடியாது. அதுபோல, கடவுள் விஷயத்திலும் நாத்திகம் பேசும் மனிதர்கள் இருக்கின்றனர்.
* குடும்பம் என்பது சமூகத்தின் ஒருபகுதியே. நற்பண்புகள் குடும்பத்தில் இருந்தால் சமூகத்திலும் பிரதிபலிக்கும்.
* நாவை அடக்கப் பழகினால் ஞானியாக முடியும். எளிய உணவு, அளவான பேச்சு இரண்டையும் கடைபிடித்தால் நன்மை அனைத்தும் நம்மை வந்தடையும்.
* மற்றவர் மீது காட்டும் அன்பு நம்மைக் கட்டிப் போடுகிறது. ஆனால், கடவுளிடம் நாம் வைக்கும் அன்பு, கட்டுகளில் இருந்து நம்மை விடுவிக்கிறது.
சாய்பாபா

No comments: