சுகாதார விழிப்புணர்வு அவசியம்...
கருத்துகள்
பதிவு செய்த நேரம்:2012-04-07 12:27:54
மருத்துவத்
துறை வேகமாக வளர்ந்து வந்தபோதிலும், நோய்கள் புதிது புதிதாக உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் சுகாதார கேடுதான். சுகாதாரமின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். எனவே, அவர்களுக்கு சுகாதாரமாக இருப்பது பற்றி கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை என குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், சிறு வயதிலேயே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்தினால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அதை மறக்க மாட்டார்கள்.
நம் நாட்டில் குழந்தைகள் கைகளை சரியாக கழுவாமல் சாப்பிடுவதால் ஆண்டுக்கு 5 லட்சம் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதே காரணத்துக்காக உலக அளவில் 29 லட்சம் குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. குறிப்பாக பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில்தான் இத்தகைய பாதிப்பு அதிகம். எனவே, குழந்தைகளிடம் சாப்பிடுவதற்கு முன்பு கை கழுவ வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளை உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கு அடிப்படைக் காரணம் அவர்கள் கைகளை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் இருப்பதே. ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் என்ற கிருமி நகங்களின் இடுக்குகளில் ஒட்டிக் கொண்டு உணவருந்தும்போது வயிற்றுக்குள் சென்று குடலில் பல்கிப் பெருகி நோயை உண்டாக்குகிறது.
குழந்தைகள் மணலில் விளையாடும்போதும், மலம் கழித்துவிட்டு வரும்போதும், கை, கால்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்கின்றன. எனவே, சரியான முறையில் கை, கால்களை சோப்பு போட்டு சுத்தம் செய்வதால் மட்டுமே இந்த பாக்டீரியாக்களை அழிக்க முடியும்.
தினமும் காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு பல் துலக்கிவிட்டு, குளிக்கச் சொல்ல வேண்டும். பள்ளிக்கூடம், ஷாப்பிங், விளையாட்டு மைதானம் ஆகியவற்றுக்கு சென்று வந்தால் கைகால்களை சோப்பு போட்டு கழுவச் சொல்ல வேண்டும். கைகளை அவசர அவசரமாக 2-3 வினாடிகளில் கழுவக் கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். கைகளை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும்.
எந்த ஒரு பொருளையும் சாப்பிடுவதற்கு முன்பு கட்டாயமாக சோப்பு போட்டு கை கழுவ வேண்டும் என்பதை உணர்த்த வேண்டும். இதுபோல் இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு பற்களை சுத்தம் செய்யச் சொல்லவும்.
குழந்தைகள் இந்த முறைகளை கடைபிடித்து வந்தால் நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளுக்கு
உலகம் முழுவதும் 2050ம் ஆண்டில் 60 வயதை கடந்த முதியோர் எண்ணிக்கை 200 கோடியாக உயரும்.
முதியோரில் 4 முதல் 6 சதவீத்தினர் அதிக வருவாய் பிரிவினை கொண்ட பணக்கார நாடுகளில் வசிப்பார்கள்.
வீட்டில் ஆரோக்கிய குறைபாடான, ஊட்டச் சத்து குறைந்த உணவுகளால் முதியோரில் பலர் அறிவாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

No comments:
Post a Comment