Thursday, September 15, 2016

கோபி மஞ்சூரியன்

உணவு விடுதிகளிலும், வெளியே விருந்துகளுக்குச் செல்லும் போதும் சாப்பிட்டிருக்கும் கோபி மஞ்சூரியனை நாம் ஏன் வீட்டிலேயே செய்து ருசிக்கக் கூடாது.

என்னென்ன தேவை?

காளிஃப்ளவர் - 1 பூ
எலுமிச்சை பழம் - பாதி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
கரம்மசாலா - கால் தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 1 தேக்கரண்டி
கான்ப்ளார் (சோள மாவு) - 1 தேக்கரண்டி
கேசரி பவுடர் - சிவப்பு நிறம்

எப்படிச் செய்வது?

உப்பு போட்டு கொதிக்க வைத்த நீரில் காளிஃப்ளவரை சிறுசிறு பூக்களாகப் பிரித்து போட்டு 5 நிமிடங்களில் எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் பூக்களில் இருக்கும் புழுக்கள் வெளியேறுவதுடன் கொதிக்கும் நீரில் காளிஃபிளவர் சிறிது மென்மையாகிவிடும்.

பின்னர் வாய் அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, கான்ப்ளார், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்றாக போட்டுக் கொள்ளவும்.

எலுமிச்சையை பிழிந்து சாறு விட்டுக் கொள்ளவும். பின்னர் ஒரு கிண்ணத்தில் தேவையான அளவிற்கு கேசரி பவுடரைக் கொட்டி சிறிது தண்ணீர் விட்டு கரைத்து இந்த கலைவையில் கொட்டவும்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பஜ்ஜிக்கு செய்வது போல் கலவையை கலந்து கொள்ளவும்.

இதில் ஆற வைத்திருக்கும் காளிஃபிளவர்களை போட்டு கிளறி அரை மணி நேரம் ஊற விடவும்.

பின்னர், கடாயில் எண்ணெய் ஊற்றி எ‌ண்ணெ‌ய் காய்ந்ததும், தீயை சிறிதாக குறைத்துவிட்டு கலவையுடன் ஊறிய காளிஃபிளவரை எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.

கலவையும், அதன் உள் இருக்கும் காளிஃபிளவரும் நன்கு வேக வேண்டும். எனவே இரு பக்கமும் வெந்து மொரு மொருவென வரும் வரை காத்திருந்து எடுக்கவும். அத‌ற்காக ‌தீயை கூ‌ட்டி ‌விடா‌தீ‌ர்க‌ள். ‌சி‌று‌ந்‌தீ‌யிலேயே வேக வே‌ண்டு‌ம்.

பொறித்து எடுத்த கோபி மஞ்சூரியனை, காகிதம் வைத்த பாத்திரத்தில் போடவும். மஞ்சூரியனில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை அந்த காகிதம் உறிஞ்சிக் கொள்ளும்.

சுவையான கோபி மஞ்சூரியனை சுடாக பரிமாறவும். பாராட்டுக்களைப் பெறவும்.

இதையே ‌பிரை‌ட் ரை‌ஸ் போ‌ன்றவ‌ற்‌றி‌‌ற்கு துணை பதா‌ர்‌த்தமாகவு‌ம் செ‌ய்யலா‌ம். அத‌ற்கான செ‌ய்முறை அடு‌த்து வழ‌ங்க‌ப்படு‌ம்.

No comments: