Thursday, September 15, 2016

செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு

ஆயத்த நேரம் : இருபது நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : நாற்பது நிமிடங்கள்
பரிமாறும் அளவு : ஆறு நபர்களுக்கு


நாட்டுக் கோழி கறி - ஒரு கிலோ
சி.வெங்காயம் - நூறு கிராம்
தக்காளி - இரண்டு
பட்டை, கிராம்பு, இலை, அன்னாசிப் பூ - தாளிக்க
எண்ணை - மூன்று டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
உப்பு - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
அரைக்க:
சோம்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
பூண்டு - ஆறு பெரிய பல்
இஞ்சி - ஐந்து கிராம்
வர மிளகாய் - பதினைந்து
மல்லி விதை - இரண்டரை டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன்
கசகசா - ஒரு டீ ஸ்பூன்


முதலில் கோழிக் கறியை சிறிய துண்டங்களாக நறுக்கி அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி பிசறி வைக்கவும்.
சீரகம், சோம்பு, ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி, இஞ்சி, பூண்டு சேர்த்து தனியாக விழுதாக அரைக்கவும்.
மிளகாய், மல்லியை தனியாக விழுதாக அரைக்கவும்,
தேங்காய் துருவல், கசகசா தனியாக விழுதாக அரைக்கவும்.
வெங்காயத்தை இரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கவும்.
இப்போது கோழிக் கறியை நன்றாக நான்கு முறை தண்ணீர் ஊற்றி கழுவவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க வைத்துள்ளவற்றைப் போட்டு வதக்கவும்.
வாசனை வந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.
பிறகு கோழிக்கறியை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி பின் தக்காளி சேர்க்கவும்.
ஐந்து நிமிடம் வதக்கிய பின் நான்கு டம்ளர் தண்ணீர், மஞ்சள் & சோம்பு விழுது, உப்பு சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.
பின் மிளகாய், மல்லி கலவை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
பின் தேங்காய் விழுது சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
செட்டிநாட்டில் வைக்கப்படும் நாட்டுக் கோழி குழம்பிற்க்கு மற்ற அசைவ உணவு வகைக்களுக்கு போடுவது போல் வாசனை சாமான்கள் நிறைய சேர்க்காவிட்டாலும் சுவை மிக நன்றாக இருக்கும். ஆனால் படிப் படியாக பொருட்களை சரியாக சேர்க்க வேண்டும்.

No comments: