1.ஈசான்யத்தில் வரக்கூடாதவை. - மேல் நிலை தண்ணீர் தொட்டி, மரங்கள், செப்டிக் டேங்க், பாத்ரூம், மின் இணைப்பு, சமையலறை, சலவைக்கல், தூண்கள்,படுக்கை அறை, வீட்டின் உள்ளே மேல் பகுதியில் அலமாரி போன்ற அமைப்பு ஆகியவை கூடாது. அதிகமான பொருட்களை ஈசான்யத்தில் வைத்து பாரமாக்கவும் கூடாது. 2. அக்கினியில் வரக்கூடாதவை - மேல் நிலை மற்றும் கீழ் நிலை தண்ணீர் தொட்டி, கிணறு, பள்ளம், பாத்ரூம் மற்றும் செப்டிக் , டேங்க், சலவைக்கல் போன்றவை வரக்கூடாது. 3. வாயுவியத்தில் வரக்கூடாதவை - கிணறு, பள்ளம் , மேல் நிலை மற்றும் கீழ் நிலை தண்ணீர் தொட்டி ஆகியவை கூடாது. 4. நைருதியில் வரக்கூடாதவை - கிணறு, பள்ளம், பூசை அறை, பாத்ரூம் மற்றும் செப்டிக் டேங்க், சன்னல்கள் மற்றும் கதவு போன்ற திறப்புகள் சமையலறை,அதிக காலியிடம் ஆகியவை நைருதியில் வரக்கூடாது. வீட்டிற்கு மற்றும் காம்பவுண்ட் சுவருக்கு வாயில் வைக்க வேண்டிய அமைப்புகள்: 1. கிழக்கு பார்த்த வீட்டிற்கு வட கிழக்கில் வாயில் அமைக்கவும் ( தென் கிழக்கில் வாயில் கூடாது) 2. வடக்கு பார்த்த வீட்டிற்கும் வட கிழக்கு வாயில் வைக்கவும் ( வட மேற்கில் வாயில் கூடாது).3. மேற்கு பார்த்த வீட்டிற்கு வட மேற்கில் வாயில் வைக்கவும் (தென்மேற்கில் வாயில் கூடாது).4. தெற்கு பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கில் வாயில் வைக்கவும் ( தென்மேற்கில் வாயில் கூடாது) ...........thanks to Sp Seethapathi
No comments:
Post a Comment