வடக்கு பகுதியில் கிழக்கிலும், கிழக்கு பகுதியில் வடக்கிலும், தெற்கு பகுதியில் கிழக்கிலும், மேற்கு பகுதியில் வடக்கிலும் தெருக்குத்து இருக்கலாம். ஆனால் வடக்கு பகுதியில் மேற்கிலும், கிழக்கு பகுதியில் தெற்கிலும், தெற்கு பகுதியில் மேற்கிலும், மேற்கு பகுதியில் தெற்கிலும் தெருக்குத்து வரக்கூடாது நாம் இருக்கும் இடத்திற்கு தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் காலி இடம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ளதை விட குறைவாக இருக்க வேண்டும். சில சமயங்களில் தெற்கு மற்றும் மேற்கில் இடம் விற்பனைக்கு வந்தால் அதை நீங்கள் வாங்கும் பட்சத்தில் அவ்வாறு வாங்கிய இடத்தில் தென்மேற்கு பகுதியில் வீட்டை அமைக்கலாம். வடக்கு கிழக்கில் காலி இடம் விடலாம். ஒரு மனையில் ( தோட்டமாக இருந்தாலும்) வீடு கட்டும் போது நைருதி பாகத்திலேயே கட்ட வேண்டும். இதுவே சிறந்த அமைப்பு. அவ்வாறு இல்லாமல் வாயு மூலை அல்லது அக்கினி மூலை அல்லது ஈசான்யத்தில் வீட்டை கட்ட கூடாது ...........thanks to Sp Seethapathi
No comments:
Post a Comment