Wednesday, November 14, 2012

மனைவியிடம் பொருள் கேட்காதே!

* சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள்.
* அன்னதானம் செய்பவன், கல்விக்காக நிதியுதவி அளிப்பவன், கடன் என்பதே இல்லாமல் வாழ்பவன், போர்க்களத்தில் தைரியமாக முன்நிற்பவன் ஆகியோர் உயர்ந்தவர்களாகப் போற்றப்படுவர்.
* ஒருவருடைய வயது, செல்வநிலை, கணவன் மனைவி இடையில் உண்டாகும் பிணக்கு, ஜபித்து வரும் மந்திரம், அந்தரங்க விஷயங்கள், தானம், தனக்கு நேர்ந்த மான, அவமானங்கள் ஆகியவை அடுத்தவரிடம் சொல்லக்கூடாதவை.
* தெரியாத ஒருவனுக்கு ஒன்றைத் தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு இன்னும் சிறப்பாக அறிய வைக்கலாம். ஆனால், நல்லது கெட்டது எது என்று தெரிந்தும் பின்பற்றாதவனை சீர்திருத்துவதற்குப் பிரம்மதேவனாலும் முடியாது.
* தன் உழைப்பால் தேடிய பொருள் உயர்வானது. தந்தையால் வந்த செல்வம் மத்திமம். சகோதரனுடைய உழைப்பில் வாழ்வது மோசமானது. மனைவி வீட்டிலிருந்து வந்த வரதட்சணையோ மோசத்தில் எல்லாம் மோசமானதாகும். 
-வாரியார்

No comments: