வாஷிங்டன்: பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டை இந்தியா இழந்து வருகிறது என்றும் இது போன்ற கடினமான கொள்கையை விலக்கி எளிமைப்படுத்த வேண்டும் என்றும் அதே நேரத்தில் அமெரிக்க வர்த்தகர்கள் மூலம் இந்தியா- அமெரிக்கா பலன் பெரும் நாடுகளாக திகழ்கிறது என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று தெரிவித்தார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், கூறியிருப்பதாவது:
இந்தியா , சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்துள்ளது. இதனால் பல்வேறு துறைகளில் இந்தியா முதலீட்டை அதிகரிக்காமல் இழந்து வருகிறது. அமெரிக்கர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டுக்கு உகந்த சூழல் குறைந்து வருகிறது. வளர்ச்சி என்பது இந்தியாவிற்கு பெரும் சவாலாக உள்ளது. இந்திய பொருளாதார சீர்திருத்த கொள்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். இதன்மூலம் வேலை வாய்ப்புக்கள் பெருகும்.
No comments:
Post a Comment