Tuesday, July 31, 2012

ஆசை உலகிற்கு பயன்படட்டும்


ஆசை உலகிற்கு பயன்படட்டும்
செப்டம்பர் 06,2008,
18:23  IST
* மனிதர்கள் செய்யும் பல தவறுகளுக்கு ஆசையே அடிப்படையாக இருக்கிறது. ஆசையினால் ஒன்றை அடைய விரும்புகிறோம். அதனை அடைவதற்காக சிலர் தர்ம வழியிலிருந்து விடுபட்டு, அதர்ம வழியைக்கடைப்பிடிக்கிறார்கள். எப்படியாவது ஆசையை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற உந்துதலே தவறுகளுக்கு காரணமாகிறது. எனவே, ஆசையை விட்டொழிக்க வேண்டும்.
*அக்னியில் நெய்யை விடும்போது, அது மேலும் பெரிதாகிக் கொண்டுதான் போகிறதே தவிர அணைந்து விடுவதில்லை. அதைப்போலவே ஒரு ஆசை நிறைவேறும்போது, அடுத்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் வருகிறது. நாமாக நிறுத்திக் கொள்ளும்வரையில் ஆசைகள் வந்து கொண்டேதான் இருக்கும். ஆசையில் இருந்து விடுபட மனதை இறைவனிடம் வைக்க வேண்டும்.
* ஆசைகள் மனிதர்களை பாவச்செயல்களில் ஈடுபடுத்தும் சக்தியாக இருக்கிறது. மனதில் இருக்கும் ஆசைகள் கூடிக் கொண்டேதான் இருக்கிறதே தவிர குறைவதில்லை. இதனால் இன்பத்தை காட்டிலும், துன்பமே அதிகமாக இருக்கிறது. எனவே, ஆசைக்கு தடுப்பு போட வேண்டியது அவசியம்.
*ஆசைகளை உலகிற்கு பயன்படுவதாகவும், உங்களுக்கு ஆத்மார்த்தமாக பலன் தருவதாகவும் மாற்றிக்கொள்ளுங்கள். இத்தகைய ஆசையில் ஈடுபாடு காட்டுங்கள். அதனை நிறைவேற்ற முனைப்புடன் செயலாற்றுங்கள். இவ்வாறு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, மாயையான ஆசைகள் எல்லாம் உங்களை விட்டு விலகிவிடும். பாவங்களும் குறைந்து, புண்ணியம் கிடைக்கும்

No comments: