அழகுக்கு மட்டுமல்ல நகை...
அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர்: நாம் அணியும் ஒவ்வொரு அணிகலன்களும், உடலில், உயிர் சக்திப் புள்ளிகளைத் தூண்டி, நம்மை சீராக இயங்க வைக்கின்றன. அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த அணிகலன்கள், ஆரோக்கியத்தையும் தருகின்றன. உதாரணமாக, பொட்டு வைக்கும் ஒரு பெண்ணை சீக்கிரத்தில், "மெஸ்மரிசம்' பண்ண முடியாது. பெண்ணின் இரு கண்களை உற்று நோக்கி வசியப்படுத்த முயற்சிக்கும் போது, மூன்றாவது கண்ணாக உள்ள பொட்டு, அந்த நபரை திசை திருப்பி விடும்.
தைராய்டு சிக்கல் உள்ளவர்களுக்கு, சரியான புள்ளிகளைப் பார்த்து காது குத்தினால், அந்த சிக்கலே தீர்ந்து விடும். கழுத்தில் செயின் அணியும் போது, அங்குள்ள புள்ளிகள் தூண்டப்படும். இதன் மூலம், உடலுக்கும், தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும். பெண்கள் புஜத்தில், "வங்கி' அணிவதால், மார்பகப் புற்று நோய் வருவது பெரும்பாலும் தவிர்க்கப்படுவதாக, ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு போடுவதில் கூட, மருத்துவ நுட்பம் உள்ளது. அச்சமயத்தில் அணியும் வளையல்கள், அந்தப் பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம், வெள்ளை அணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. இதன் மூலம் தாய்க்கும், சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.
மோதிரம் அணிவது, எல்லா மதத்தினராலும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பாலுறுப்புகளைத் தூண்டும் புள்ளிகள், மோதிர விரலில் உள்ளன. இதனால் தான் திருமணத்தன்று, மணமக்களுக்கு மோதிரம் போட்டு அழகு பார்க்கிறோம்.
கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனைத் தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்ப்பப்பை இறக்கப் பிரச்னையை, தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.
"பில்லாலி' என்பது, குழந்தை பிறந்தவுடன், காலில் மூன்றாவது விரலில் அணிவது. இதை அணியும் போது, சில புள்ளிகள் தூண்டப்பட்டு, பால் சுரப்பை அதிகப்படுத்தும். அணிகலன்கள் அணிவது, வரும் முன் காக்கும் அற்புதமான விஷயம். முடிந்த மட்டும், எடை குறைவான பிளாஸ்டிக் அணிகலன்களை அணிவதைத் தவிர்க்கலாம்.

No comments:
Post a Comment