Sunday, July 29, 2012

காலம் ஓடிக்கொண்டிருக்கிற



* உலகத்திலுள்ள ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று அங்குள்ள தெய்வங் களை எல்லாம் வழிபாடு செய்வது நல்லது. 

* வானத்திலிருந்து பெய்யும் பருவமழை குறைந்து விட்டால் உலகில் தான தருமங்களும் குறைந்து விடும்.

* தூய்மையான உள்ளத்தில் வஞ்சக எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கிடையாது. 

* சந்தனம் எவ்வளவு தேய்த்தாலும் தன் நறுமணத்தினையே பிறருக்கு கொடுக்கும்.
அதுபோல நல்லவர்கள் வறுமை அடைந்தாலும் தன் நற்குணத்திலிருந்து மாறுவதில்லை.

* உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கின்றனர். ஒன்று ஆண், மற்றொன்று பெண்.

* தாமரை இலைமேல் தண்ணீர் போல, உடம்பின் மீது உள்ள பற்றுக்களை குறைத்துக் கொண்டு வாழுங்கள்.

* நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமை நிலை அடைந்தாலும், தன் மேன்மையான தன்மை விட்டுக்கொடுக்காமல் தன்னால் ஆன உதவியை பிறருக்குச் செய்வர். 

* ஆண்டுகள் பலவாக அழுது நம்மை நாமே வருத்திக் கொண்டாலும் மாண்டவர்கள்
மீண்டு வரப்போவதில்லை. காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இறப்பு நம்மை நோக்கி
வந்து கொண்டிருக்கிறது. அதனால், உங்களால் முடிந்த நன்மைகளை பிறருக்குச்
செய்யுங்கள்.

No comments: