Tuesday, June 19, 2012


மிளகு, பூண்டுடன் மீன் குழம்பு--சமையல் குறிப்புகள்


 
  • மீன் (சங்கரா, வெள்ளைக் களங்கா, பாறை, வஞ்சிரம், வவ்வால், வரால்) - 1/4 கிலோ.
  • அரைக்க:
  • மிளகு - 1 தேக்கரண்டி.
  • பூண்டு - 8 பல்.
  • மிளகாய்த் தூள் - 1.5 தேக்கரண்டி.
  • தனியாத் தூள் - 2 தேக்கரண்டி.
  • சின்ன வெங்காயம் - 10
  • தக்காளி - 1 பெரியது.
  • தாளிக்க:
  • வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1.
  • வெந்தயம் - 1/2 தேக்கரண்டி.
  • கடுகு - 1/2 தேக்கரண்டி.
  • சீரகம் 1/4 தேக்கரண்டி.
  • கறிவேப்பிலை - சிறிதளவு.
  • எண்ணெய் - தேவையான அளவு.
  • மற்றவை:
  • புளி -1 எலுமிச்சை அளவு
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
  • உப்பு - தேவையானது

  • புளியை தண்ணீர் விட்டு கரைசல் செய்து, அதனுடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து, சுவை பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் சூடானதும் தாளிப்புப் பொருட்களை சேர்த்து, தாளித்து, கலந்த மசாலாவை ஊற்றி, தேவையான தண்ணீர் கலந்து, பச்சை மசாலா வாசம் நீங்கும் வரை கொதிக்க வைத்து, அதன் பின் மீன் துண்டுகளை சேர்த்து, மூடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் சமைத்தால் எண்ணெய் மேலெழும்பி கவர்ச்சியும், சுவையும் மிக்க மீன் குழம்பு தயாராகி விடும்.

No comments: