Friday, May 18, 2012


சம்பாதிப்பவரே பொறுப்பாளர்
மார்ச் 22,2011,
09:03  IST
* நாம், பூமியில் உங்களை அனைத்து அதிகாரங்களுடன் வாழச் செய்தோம். மேலும், அங்கே உங்களுக்கு 
வாழ்க்கைச் சாதனங்களையும் அமைத்து தந்தோம். ஆயினும் நீங்கள் மிக்க குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
* இறைவன் பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காக படைத்தான். உங்கள் நலனுக்காக இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளான்.
* எவர் ஒருவர் எதை சம்பாதிக்கிறாரோ அதற்கு அவரே பொறுப்பாளராவார். மேலும் ஒருவரின் பாவச்சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார்.
* இறைவன் தன் அடிமைகள் அனைவருக்கும் தாராளமாக வாழ்வாதாரத்தை வழங்கியிருந்தால், அவர்கள் பூமியில் அராஜகப் புயலை பரவச் செய்திருப்பார்கள். ஆகவே அவன் ஒரு கணக்குப்படி, தான் விரும்புகிற அளவில் இறக்கி வைக்கின்றான். திண்ணமாக, அவன் தன் அடிமைகள் பற்றி நன்கு புரிந்தவனாகவும், அவர்களைக் கவனிப்பவனாகவும் இருக்கின்றான்.
* உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும் பின்னர் நீங்கள் (பூமியில்) பரவிச் செல்லும் மனிதர்களாக இருக்கின்றீர்கள் என்பதும் இறைவனின் சான்றுகளில் ஒன்றாகும்.

(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

No comments: