Wednesday, May 30, 2012


இல்லாத இடமே இல்லை
மே 13,2012,
17:05  IST
* மனத்தூய்மை, பொறுமை, அன்பு, நேர்மை ஆகிய குணங்களைக் கொண்டவனே நல்ல மனிதன்.
* கடவுளை சத்தியமாக நம்புபவன் வாழுமிடம் சொர்க்கமாகத் திகழும். விடாப்பிடியாக கடவுளைப் பற்றிக் கொண்டால், வெற்றி தேடி வரும். 
* ஒருபோதும் சோம்பித் திரியாதீர்கள். செய்யும் பணியில் முழுமையாக ஈடுபடுங்கள். சிரத்தையோடு கடமையாற்றுபவன் லட்சியத்தை நோக்கி முன்னேறுவான்.
* புத்திசாலிகள் அறியாமையில் தவிப்பவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. பிறரை வெறுப்பவன் அறிஞனாக முடியாது. 
* கடவுள் இல்லாத இடமே இல்லை. எங்கும் அவர் நிறைந்திருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்து விட்டால் உலகம் உன்னை போற்றும். 
* விருப்பு, வெறுப்பு இரண்டும் நரகத்தின் வாசல்கள். சத்தியத்தின் வடிவமான கடவுள் விருப்பு வெறுப்பவற்றவராகத் திகழ்கிறார்.
* கடவுளைக் காண முதலில் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவரைத் தேடி அலைய வேண்டியதில்லை. அவரே உங்களுக்குள் காட்சி தருவார்.
-சாந்தானந்தர்

No comments: