Wednesday, May 16, 2012


காலம் மிகவும் அரிய விஷயம்!
ஆகஸ்ட் 10,2008,
08:52  IST
கடவுளை நினைத்துக் கொண்டே உணவை உட்கொள்ளுங்கள். அப்போதுதான் சாப் பிடும் உணவு கடவுளுக்கு உகந்த பிரசாதமாகி உள்ளத்தையும், உடலையும் சுத்தமாக்கும்.உள்ளம் தூய்மையாய் இருப்பவன் தான் காணுகின்ற காட்சியில் எல்லாம் கடவுளையே காண்பான். மனமாசற்றவன் அகமும் புறமும் பரிசுத்தத்தை முழுமையாக உணர்வான்.
சேர்த்து வைத்த பொருள் அனைத்தும் செத்தவர்களோடு செல்வதில்லை என்பதைக் கண்டு கொண்ட பின்பும் மனிதன் பொருள் தேடி பொருளில்லாமல் அலைகிறான்.கடவுள் சத்தியமாக இருக்கிறார். நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று நம்பும் கூட்டம் அதிகரித்தால் உலகம் எங்கும் அறநெறி தழைத்தோங்கும். அறநெறி மலர்ந்தால் பூவுலகமே சொர்க்கமாகும்.காலம் மிகவும் அரிய விஷயம். வீணே காலத்தை கழிக்காதீர்கள். காலன் நமக்குப் பின்னே விரைந்து வந்து கொண்டிருக்கிறான். அதற்குள் உங்களால் இயன்ற பயனுள்ள செயல்களை செய்வீர்களாக.சத்திரத்திலே தங்கி களைப்பாறலாம். ஆனால், சத்திரத்தை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ள முடியாது. சத்திரத்தை விட்டு வெளியேறுவது போல, இவ்வுலகமாகிய சத்திரத்தை விட்டும் ஒருநாள் வெளியேற வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

No comments: