Sunday, April 8, 2012



கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு தருவதற்கு பிரதமரை வலியுறுத்துவேன்

 1/1 

மதுரை,ஏப்.- 8 - கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அனைத்து மின்சாரத்தையும் தமிழகத்திற்கு தருவதற்கு பிரதமரை வலியுறுத்துவேன் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.   கூடங்குளம் அணுமிலை மீண்டும் செயல்பட்டதற்காக மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க மத்திய பாராளுமன்ற விவகார துறை இணை மந்திரி நாராயணசாமி நேற்று மதுரை மீனாட்சி அம்மன்  கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் முடிந்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கூடங்குளத்தில் மின்சாரம் தயாரிக்க 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. முதல் அணு உலையில் யுரேனியம் செறிவூட்டப்பட்டவுடன் 1000 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கும். முதல் அணு உலை திறந்து 2வது வாரத்தில் 2வது அணு உலை செயல்படும். அணு உலை திறக்கப்பட்டு  பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இதற்காக பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி, முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக காங்கிரசார் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.    தமிழகத்தில் மின் வெட்டு அதிகம் உள்ளது. இதனால் தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். பலர் வேலை இழந்துள்ளனர். எனவே கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 965 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். நானும் இதை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். இந்த கோரிக்கை பிரதமரின் பரிசீலனையில் உள்ளது. மேற்கொண்டும் இது குறித்து நான்  பிரதமரிடம் பேசி வலியுறுத்துவேன். இலங்கை தமிழர்களுக்கு பல உதவிகளை இந்தியா செய்து வருகிறது. குறிப்பாக வீடு, மின்சாரம், போன்ற அத்தாயவசிய தேவைகளை 2 ஆயிரத்து 500 கோடியில் செய்துள்ளோம். இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல. உலகில் உள்ள எலலா தமிழர்களுக்கும் இந்தியா குரல் கொடுக்கும் என்றார். 
   பேட்டியின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் தெய்வநாயகம், ஏ.ஜி.எஸ்.ராம்பாபு, பி.காந்தி, மீனா செல்வராஜ், ஐ.சிலுவை, செய்தி தொடர்பாளர் விஜயராகவன், மைதீன்பாட்ஷா, செய்யது பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments: