இலக்கு வகுத்து அறிவைத் திரட்டுங்கள்:மாணவர்களுக்குகலாம் அறிவுரை சென்னை""மாணவர்கள் கண்டுபிடிப்பாளராக உயர,இலக்கு வகுத்துகொண்டு, அதற்கான அறிவை திரட்ட வேண்டும்,'' என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.சென்னை ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழாவில் 865 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி, அவர் பேசியதாவது: உலகம் உங்களை நினைவு கூறவேண்டுமென்றால், நீங்கள் உங்களுக்குள் புதைந்து கிடக்கும் தனித்தன்மையை உணர்ந்து, ஒரு கண்டுபிடிப்பாளராக, சாதனையாளராக உயர வேண்டும்.
நீங்கள் ஒரு கண்டுபிடிப்பாளராக உயர வேண்டும் என்றால், முதலில் ஒரு பெரிய இலக்கை வகுத்துக்கொண்டு, அது சார்ந்த அறிவை புத்தகங்கள், இணைய தளம் வாயிலாகவும், அறிவார்ந்த மனிதர்களிடம் பழகியும் திரட்டுங்கள். நீங்கள் இலக்கை நோக்கி கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் இலக்கை அடைகிறபோது, பிரச்னைகள் ஏற்பட்டால், அவை ஓடிப்போகும் அளவிற்கு முழு முயற்சி மேற்கொள்ளுங்கள், என்றார்

No comments:
Post a Comment