சுமார் ஒன்பது ஆண்டுகளாக உயர்த்தப்படாத மின்கட்டணத்தை தமிழக அரசு உயர்த்துவது நியாயமானது என்பதிலும், இதைத் தவிர வேறு வழியே கிடையாது என்பதிலும் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. மின்கட்டணம் உயரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 45 விழுக்காடு உயரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
500 யூனிட் உள்ளாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மட்டும் அரசு மானியம் அளித்து மின்கட்டணத்தில் ஒரு பாதியை ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 100 யூனிட் வரை கட்டணம் ரூ. 2.60 என்றால் இதில் அரசு மானியம் ரூ.1.50. 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை மின்கட்டணம் ரூ.2.80 என்றால் இதில் அரசு மானியம் ரூ.1. 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை ரூ.4.60 என்றால் அதில் அரசு மானியம் 50 காசுகள்.
இந்த மின் கட்டணங்கள் மின்சார ஆணையத்தால் தீர்மானிக்கப்பட்டவை. இதை அப்படியே அறிவித்தால் தமிழ்நாட்டு மக்கள் கொதித்துப்போய் விடுவார்கள் என்பதால் இந்த மானியத்தையும் சேர்த்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மானியம் என்பது தற்போது நடுத்தர மக்களின் கூக்குரல் எழாமல் இருக்கத்தான் அளிக்கப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது. மின்கட்டணத்தை தமிழக அரசு மாற்றியமைக்க முடியாது என்பதால் எடுக்கப்பட்ட முடிவு இது என்பதையும் உணர முடிகிறது.
தமிழக மின்வாரியம் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி நஷ்டத்தில் செயல்படுகிறது என்பதும், மின்உற்பத்திச் செலவு அதிகமாகிவிட்டது என்பதும் எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உண்மை - இந்தக் கட்டண அடுக்குகளைச் சற்று மாற்றி அமைத்திருந்தால், சாதாரண நடுத்தர மக்களுக்குப் பயனுள்ளதாகவும், அவர்களே மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும்படியும் செய்திருக்கலாம்.
ஒரு விளக்குத் திட்டத்தின்கீழ் வரும் குடிசை வீடுகளுக்காக மட்டும் அரசு கூடுதலாக செலுத்தவுள்ள மானியம் ரூ.135 கோடி. அதாவது இந்த ஒரு விளக்கு வீடுகளில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஒரு விளக்கு எரியும்போது செலவாகும் மின்சாரம் எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு, இந்த வீடுகளுக்கு மின்கட்டணம் தீர்மானிக்கப்படுகிறது. அதை அரசு மானியமாகச் செலுத்துகிறது.
ஆனால், இந்த ஒரு விளக்கு குடிசை அனைத்திலும் இன்று விலையில்லா டிவி வந்துவிட்டது. விலையில்லா மிக்ஸி, விலையில்லா கிரைண்டர் எல்லாமும் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்த ஒரு விளக்கு மின்கம்பியிலிருந்துதான் இவை எல்லாவற்றுக்கும் பயன்படுத்த முடியும். ஆனால், இதை ஏன் மின்வாரியம் கணக்கில் கொள்ளவே இல்லை?
மற்ற நடுத்தர மக்களைப் பொருத்தவரை, ஒரு வீடு என்றால், இரண்டு மின்விசிறி, ஒரு மிக்ஸி, ஒரு கிரைண்டர், ஒரு பிரிட்ஜ், ஒரு டிவி, நான்கு விளக்குகள் கட்டாயமாக இருக்க வேண்டிய சமூகச்சூழ்நிலை உள்ளது. இந்தக் குடும்பங்கள் இதை நியாயமான அளவுக்குச் சிக்கனமாகப் பயன்படுத்தினால், இரண்டு மாதங்களுக்குக் குறைந்தது 350 யூனிட்டுகள் மின்சாரம் தேவை. எப்போதும் மின்விசிறியும், டி.வி.யும் இயங்கிக்கொண்டே இருக்கும் வீடுகளில் மட்டுமே கூடுதலாக மின்சாரம் செலவாகும்.
இந்நிலையில், அரசின் நிலைமையை உணர்ந்து சிக்கனமாகப் பயன்படுத்தும் ஒரு நடுத்தர வருவாய்க் குடிமகனைக் கணக்கில்கொண்டு 400 யூனிட்டுகள் வரை, 10 விழுக்காடு கட்டண உயர்வு மட்டுமே அளித்திருக்கலாமே? இந்த மானிய மாயைகளுக்கு அவசியமே இல்லையே.
அதேபோல, 400 யூனிட் முதல் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டும் தற்போதைய 45% விழுக்காடு கட்டணம் விதிக்கப்பட்டிருக்கலாம். மின்சிக்கனம் இல்லாதவர்கள் அல்லது அதிக வசதி கொண்டவர்களுக்குத்தான் 400 யூனிட்டுகளுக்கு மேல் செலவாகும். ஆகவே, அத்தகைய அதிகம் பயன்படுத்தும் குடும்பங்களிடமிருந்து அதிகக் கட்டணம் வசூலிப்பது குறித்து யாரும் கவலைப்படப்போவதில்லை. அவர்களும், செலவழிக்கும் திறன் இருப்பதால்தான் இத்தகைய மின்கருவிகளைப் பெற்றிருக்கிறார்கள்.
வேளாண்மைக்கு இலவச மின்சாரம் என்பது அவசியம்தான். ஆனால், அது உற்பத்தி சார்ந்ததாக இருக்க வேண்டும். வேளாண்மையில் மின்சாரத்தின் பயன்பாடு மீட்டர் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். ஒரு விவசாயி பயன்படுத்திய மின்சாரத்துக்கு ஏற்ப, அங்கே வேளாண்மை நடந்திருக்க வேண்டும் என்பதுடன் அவர் அரசு வேளாண் விற்பனை மையத்தில் விளைச்சலை விற்பனை செய்பவராகவும் இருக்க வேண்டும்.
இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி, பல ஏக்கர் நெல் விளைவித்து, அதைத் தன் சொந்த அரிசி மண்டியில் 400 மடங்கு லாபத்தில் விற்பனை செய்யும் பணக்கார விவசாயிக்கும் இலவச மின்சாரம், விதை நெல் வாங்கமுடியாமல் கடனுக்கு வாங்கி, அரசின் விற்பனை மையத்தில் நெல்லை விற்பனை செய்யும் ஏழை விவசாயிக்கும் இலவச மின்சாரம் என்பது எந்த வகையில் நியாயம்? விழலுக்கு நீர் பாய்ச்சுவதுபோல இருக்கும் இலவச மின்சாரத்தின் பாரத்தை சராசரிக் குடிமகன் தலையில் கட்டுவதை மின்சார வாரியமும் அரசும் ஏன் தவிர்த்திருக்கக் கூடாது?
வாடகை வீட்டில் குடியிருப்போரின் சப் மீட்டர்களுக்குத் தடை விதித்து, அதற்கான உரிய கட்டணம் செலுத்தி அதையும் ஒரு தனி மீட்டராக மாற்றுவதைக் கட்டாயமாக்கி இருந்தால், தமிழ்நாட்டில் பல கோடி தமிழர்கள் மனம் குளிர்ந்திருப்பார்கள். போக்குவரத்துத் துறையிலும் சரி, மின்வாரியத்திலும் சரி நிர்வாகச் சீர்திருத்தமும், இழப்புகளைத் தடுப்பதும் இதையெல்லாம்விட முக்கியம் என்பதை மட்டும் நமது அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்குத் தெரிவிப்பதே இல்லை. முதல்வரின் பார்வைபட வேண்டிய இடம், திறமையின்மையின் இருப்பிடமாக இருக்கும் போக்குவரத்து மற்றும் மின்வாரிய நிர்வாகத்தின்மீதுதான். கட்டண உயர்வால் மட்டும் இழப்புகள் சரிசெய்யப்பட்டுவிடாது.
நமது ஆலோசனைகளும், கோரிக்கைகளும் முதல்வரால் பரிசீலிக்கப்படும் என்று நம்புகிறோ

No comments:
Post a Comment