Friday, March 30, 2012

இன்றைய சூழ்நிலையில் உழவு முறைகளில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன மற்றும் பல்வேறு புதிய முறைகளான மிகக்குறைந்த உழவு, பூஜ்ய உழவு, தாள் போர்வை உழவு ஆகியவை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
மிகவும் உயர்ந்துவரும் (கச்சா) எண்ணெய் விலையினால் குறைந்த உழவுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பழமையான உழவு முறையில் ஏற்படும் பிரச்னைகளும் காரணம். தொடர்ந்து அதிகமாக இயந்திரங்களை பயன்படுத்துவதினால் மண் கட்டமைப்பு பாதிப்பும், கடின மண் தட்டும் ஏற்படும். மற்றும் மண் அரிப்பிற்கு வழிவகுக்கிறது.
பூஜ்ய உழவு முறை: உழவற்ற நிலையிலேயே பூஜ்ய உழவு என அழைக்கப்படுகிறது. குறைவான உழவு முறையின் குறைந்தபட்ச நிலையிலோ பூஜ்ய உழவு ஆகும். முதன்மை உழவு முழுவதுமாக தடுக்கப்படுகிறது மற்றும் வரிசைப்படுத்துதல் விதைப்படுக்கை தயார் செய்யும் வரை மட்டும், இரண்டாம் உழவு செய்யப்படுகிறது.
பூஜ்ய உழவுகளில் ஒரு முறை ஆகும். இந்த ஒரு தனித்துவமான ஒரே நேரத்தில் நான்கு வேலைகளை நிறைவேற்றுகிறது. பயிர் வரிசையில் குறுகிய வரிசையாக சுத்தம் செய்தல், விதைத்தலுக்கு ஏற்றவாறு துளையிடல், விதையினைத் துளையில் விதைத்தல் மற்றும் நன்றாக விதையினைகள் கொண்டு முதல் முன் பயிர் வரிசையை பெரிய சுவீப் மற்றும் வெட்டும் கத்திப்பகுதி சீரமைக்கிறது. மற்றும் (பிளான்டர்) நடவிற்கு துளையிடும் கொழு, விதைகளை விதைத்து மூடுவதற்கு ஏற்றவாறு குறுகிய துளைகளை ஏற்படுத்துகிறது.
பூஜ்ய உழவு முறையில் களைக்கொல்லியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். விதைப்பதற்கு முன் களைகளைக் கட்டுப்படுத்த, பரந்த வீரியம் கொண்ட இலக்கற்ற களைக்கொல்லி மருந்துகள் (எ.கா. பாராகுவாட், கிளைபோசேட்) பயன்படுத்தப்படுகிறது.
பழமையான உழவு முறை மண் அரிப்பை ஏற்படுத்துகிறது. பருவ காலங்களிலும் பயிர்கள் வளர்வதற்கு ஏற்றவாறு மண்வளத்தை பாதுகாக்க, தாள் போர்வை உழவு அல்லது தாள் போர்வை வேளாண்மை உதவுகிறது. இலையுதிர் காலங்களில் தாவரக் கழிவுகள் மேற்பரப்பில் பரவி போர்வையாக அமைகிறது. இது ஒரு வருடாந்திரப் பயிர் மேலாண்மை திட்டம் ஆகும். இதன்மூலம் மண் இளகுகிறது. தாவரக்கழிவுகளை சிறு துண்டுகளாக்குகிறது. மற்றும் களைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
சுவீப்ஸ் / கத்திகள் பொதுவாக அறுவடைக்குப் பின் செய்யப்படும் முதன்மை உழவின்போது மண்ணை 12 முதல் 15 செ.மீ. ஆழம் வரை உழுகிறது. ஆழத்தைப் பொறுத்து, அடுத்துவரும் உழவு முறைகள் அமையும். பொதுவாக சட்டிக்கலப்பை போன்ற கருவிகள், தாவரக் கழிவுகள் அதிகம் உள்ளபோது முதன்மை உழவுக்கு பயன் படுத்தப் படுகிறது. இதனால் அக்கழிவுகள் மண்ணோடு நன்றாகக் கலக்கிறது மற்றும் விரைவாக மட்டுப்படுகிறது. ஆனால் ஓரளவு கழிவுகள் மண்ணில் காணப்படும்.
தீமைகள்:
* குறைந்த உழவு முறையில் விதை முளைப்புத் திறன் குறைவாக இருக்கும். 
* குறைந்த உழவு முறையில் மட்கும் திறன் குறைவாக காணப்படும். 
* அவரை மற்றும் பட்டாணி போன்ற பயறுவகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகள் பாதிக்கப் படுகின்றன.
* வழக்கமான கருவிகளைக் கொண்டு விதைப்பு செய்வது கடினம்.
* தொடர்ந்து களைக் கொல்லிகளை பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது மற்றும் பல்லாண்டு வாழ் களைகள் அதிகம் வளருகின்றன.
-ஆர்.ஜி.ரீஹானா, 
அக்ரி கிளினிக், 89037 57427

No comments: