Thursday, June 23, 2016

காமாட்சி விளக்கு

*ஒவ்வொரு இல்லத்திலும் கட்டாயம் இருக்க வேண்டியது லெட்சுமி விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஆகும்.
*எந்த ஒரு பூஜை செய்யும் முன் காமாட்சி விளக்கை பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபட வேண்டும்.
*புதுமனை புகும் போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன் விளக்கே.
*புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, "நிறைநாழி'' எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து அதில் மீது தீபம் ஏற்றவேண்டும்.
*சுமங்கலி பெண்கள் செவ்வாய்,வெள்ளி காலையில் குளித்துவிட்டு தாய் நிலையில் "நிறைநாழி'' வைத்தால் அந்த இல்லத்தில் செல்வம் பொங்கும்.
*நிறை நாழி என்பது தாய் நிலைக்கு வலது புறம்(வீட்டின் முகப்பு திசைக்கு) ஒரு தாம்பலத்தில் சிறு படியில் நெல் வைத்து அதில் வெற்றிலையை வைத்து அதன் அருகில் காமாட்சி விளக்கை ஏற்றுதல் நெல் படி இல்லாவிட்டாலும் வெறும் தாம்பலத்தில் ஏற்றலாம்.இதனால் இல்லத்தில் செல்வம் தங்கும்.
*பெண்ணுக்கு சீர் வரிசைகளை தரும்போது காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்க வேண்டும்.
*நம்முடைய தமிழர் வாழ்வில் காமாட்சி விளக்கு ஓர் அங்கமாகவும்,மங்கலப் பொருட்களில் இன்றியமையாத ஒன்றாகவும் விளங்குகிறது.
 ஜோதிடர் சுப்பிரமணியன்.

No comments: