Wednesday, June 15, 2016

வாஸ்து உண்மைகள் 03

சமையலறை:
நல்லசமையறையை அமைக்கவேண்டுமானால், அதை தென்கிழக்கில் இருக்கும்படி அமைக்கவேண்டும். ஏனென்றால், தென்கிழக்கைத்தான் அக்னி மூலை என்று கூறுவார்கள். அங்குதான் அக்னிதேவன் வாழ்வதாக ஐதீகம். எனவே சமையலறையை தென்கிழக்கில் அமைப்பது சாலச் சிறந்தது.
1. ஒருபோதும் சமையலறையை வடகிழக்கில் அமைக்க வேண்டாம். இது முடும்ப அமைதியையும், செல்வச் செழிப்பையும் அழித்துவிடும். குடும்பதினரிடையே நிலவிய நேசமும் காணாமல் போகும்.
2, அதுபோல சமையலறை தென்மேற்கில் இருக்கும்படியும் அமையக்கூடாது. அப்படி அமைந்தால், அது குடும்பத் தலைவரைப் பாதிக்கும்.
3.. சமையலறையிலிருந்து வரும் கழிவு நீர்க் குழாய்கள், வடக்கு, கிழக்கு திசைகளில் விழும்படி அமைக்கவேண்டும்.
4. டாய்லெட்டோ, பூஜையறையோ சமையலற்க்குப் பக்கத்தில் வரும்படி அமைக்ககூடாது.
5. சமைக்கும்போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருந்தபடி சமைக்கவேண்டும்...........thanks to Sp Seethapathi

No comments: