முற்காலத்திலிருந்து நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மனையடி சாஸ்திரமே , ‘ வாஸ்து ‘ என்பதாகும். இது பஞ்ச பூதங்களையும், திசைகளையும் அடிப்படையாகக்கொண்டது. இந்த வாஸ்து சாஸ்திரத்தை முறையாகக் கடைப் பிடித்து கட்டப்படும் வீட்டிலோ அல்லது அந்த மனையிலோ வசிப்பவர்கள், எல்லா வளங்களையும் பெற்று வாழ்வார்கள். இப்போது ஒரு வீட்டுக்கு கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து விதிமுறைகளைப் பற்றிக் காணலாம்.
வீட்டின் கதவுகளும் நுழைவாயிலும்:
1. வீட்டின் பிரதான நுழைவாசலில் அமையும் மெயின் கதவு, வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளை நோக்கி அமைந்திருக்கவேண்டும். இந்த மெயின் வாசல் நுழைவாயில் கதவு, வீட்டின் ஏனைய கதவுகளைவிட அளவில் சற்றுப் பெரியதாக இருக்கவேண்டும். வீட்டின் பிரதான நுழைவாயில் வீட்டின் பின்பக்க வாசலை நோக்கியபடி எதிரும் புதிருமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், வீட்டின் ‘ சக்தி ‘ (எனெர்ஜி )யானது பின்வாசல் வழியாக வெளியேறிவிடும். வீட்டுக்குள் சுழன்று நற்பயன் விளைவிக்கக்கூடிய நல்ல சக்தி வெளியேறி விடுவது வீட்டுக்கு நல்லதல்ல. எனவே பிரதான வாசல் கதவுக்கு நேரெதிராக பின் வாசல் கதவு இருக்கும்படி அமைக்கக்கூடாது.
2. உங்கள் வீட்டு பிரதான வாசலுக்கு எதிராக மரமோ, கிணறோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அதுவும் உங்கள் வீட்டுக்குள் ‘ சக்தி ‘ ( எனெர்ஜி ) யை நுழைய விடாமல், தடுக்கும்.
3. வாசல் கதவுகள் உள்புறமாக திறப்பதுபோல் அமையவேண்டும். வெளிப்பக்கமாக திறக்கும்படி அமைக்கக்கூடாது.
4. கதவின் அகலம் கதவின் உயரத்தில் பாதியளவு இருக்கவேண்டும்.
5. பிரதான வாயில் கதவு நல்ல , உயர்வகை மரத்தாலானதாக இருக்கவேண்டும். அதோடு, மற்ற கதவுகளை விட இந்த மெயின் டோர் சற்றுப் பெரியதாகவும் இருக்கவேண்டும். நல்லவேலைப்பாட்டுடனும், நல்ல டிஸைனுடனும் இருக்கவேண்டும்.
மிக அழகாகப் பெயிண்டிங் செய்யப்பட்டு மற்ற கதவுகளை விட பளிச்சென்று இருக்கவேண்டும்.
6. . வாசல் கதவு, மற்றுமுள்ள கதவுகள், கன்னல் கதவுகள் முதலியவற்றைத் திறக்கும்போது, சத்தம் எழுப்பக்கூடாது. குறிப்பாக பிரதான வாயில் கதவில் இந்த சத்தம் அறவே வரக்கூடாது. அப்படி நேருமாயின், வீட்டில் வசிப்பவர்களுக்கு கேடு விளையும்.
ஜன்னல்கள்:
7. எல்லா ஜன்னல்களும், வெளிப்புறச் சுவரில் அமைந்திருக்கவேண்டும். ரூம்களுக்குள் ஜன்னல் கதவுகள் திறக்கும்படி இருக்கக்கூடாது.
8. பெரிய ஜன்னல்களை வடகிழக்கு திசையிலும், சிறிய ஜன்னல்களை தென்மேற்கிலும் வரும்படி அமைக்கவேண்டும்.
9. மொத்த ஜன்னல்களைக் கூட்டினால், அது இரட்டைப் படையில் வரவேண்டும்.
10. ஜன்னல்களிலும் கதவுகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் சன்ஷேடுகள் வடகிழக்கு திசையை நோக்கியபடி இருக்கவேண்டும். அப்படி அமைத்தால்தான் மழைத் தண்ணீர் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசையை நோக்கி ஊடுவதற்கு ஏதுவாகும். இதுவே விட்டுக்கு நற்பலன்களை நல்கும்.
11. வடக்கிலும், கிழக்கிலும் அதிக ஜன்னல்கள் வரும்படி அமைக்கவேண்டும்............thanks to Sp Seethapathi

No comments:
Post a Comment