இறைவர் திருப்பெயர் : பைரவநாதசுவாமி. (சிவலோக நாதர்) இறைவியார் திருப்பெயர் : (சிவகாமசுந்தரி) தல மரம் : நாவல். தீர்த்தம் : வழிபட்டோர் : வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - வீழக் காலனைக் (7-12-1).
தல வரலாறு
- கோயிலின் மகா மண்டபத்தில் அமைந்துள்ள பீடத்தில் பஞ்சாட்சர யந்த்ரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனவே 'யந்த்ரபுரி' என்ற பெயருமுண்டு. இதுவே தமிழில் (தகடு + ஊர்=) தகட்டூர் என்றழைக்கப்படுகிறது.
குறிப்பு
- தகட்டூர் என்பது வேதாரண்யத்திற்கு அருகிலுள்ள தலமென்றும்; தற்போதைய தருமபுரி என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.
சிறப்புக்கள்
- இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
- மூலவராக பைரவரே எழுந்தருளியுள்ளார். அவருக்கே உற்சவம் முதலிய அனைத்தும் நடைபெறுகின்றன.
- பிராகாரத்தில் பின்புறத்தில் சிவலோக நாதரும், சிவகாம சுந்தரியும் எழுந்தருளியுள்ளனர்.
- இங்கு பிரதான மூர்த்தி பைரவநாத சுவாமியே ஆவார்.
- கோயில் கருவறை கல் கட்டமைப்புடையது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் 'வாய்மேடு' வந்து விசாரித்து சிறிது தூரம் வந்தால் தகட்டூரை அடையலாம்.
திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் 'வாய்மேடு' வந்து விசாரித்து சிறிது தூரம் வந்தால் தகட்டூரை அடையலாம்.
1 comment:
தகவலுக்கு மிக்கநன்றி...
Post a Comment