* சிறிய வேலையோ, பெரிய வேலையோ அதை முழுகவனத்துடன் செய்ய வேண்டும். அதை ஆண்டவனுக்குச் செய்யும் வழிபாடாக எண்ணிச் செய்வது சிறந்தது.
* தியானம் செய்யும்போது எந்தவிதமான இடையூறும் இருக்கக்கூடாது. அமைதி தான் முக்கியமானதாகும். ஒரு பலகை மீது துணி விரித்து தியானம் செய்ய வேண்டும். அப்போது உடலில் தெய்வீக அலைகள் உண்டாகும்.
* தியானத்தின் மீது மனம் பதியும்போது, மற்ற புலன்களின் உணர்வுகள் மெல்ல மறையத் தொடங்கும்.
* இறைவன் மீது முழுமூச்சாக நம் மனதை ஒருமுகப் படுத்தும்போது, வேண்டாத எண்ணங்கள் தாமாகவே விலகிவிடும். இறைவனின் உருவம் மட்டுமே மனதில் நிற்கும்.
* இறைவனிடம்,""எனக்கு துன்பமே கொடுக்காதீர்கள். ஆனந்தத்தை மட்டுமே தாருங்கள்,'' என்று வேண்டு கின்றனர். சோதனைகள் இல்லாமல் வெறும் ஆண்டவன் அருள் மட்டுமே நமக்குக் கிடைப்பதில்லை.
* "இறைவன் தான் எனக்கு எல்லாமே' என்று நினைப்பவர்களுக்கு எப்போதும் மனஅமைதி நிச்சயம் கிடைக்கும்.
- சாய்பாபா
1 comment:
மனஅமைதி எப்படி கிடைக்கும்?
http://guganttp-thagattur.blogspot.in/2012/09/blog-post_6.html#comment-form
Post a Comment