Monday, September 17, 2012

ஒழுக்கத்தின் இலக்கணம்

* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர வேறு ஒரு கடவுள் உலகில் இல்லை.
* ரசாயனத்தைக் கற்பவன் இயற்கை என்னும் புத்தகத்தைப் படித்தறிவது போல, ஆன்மிகத்தைக் கற்பதற்கு படிக்க வேண்டிய நூல் மனித மனம்.
* எல்லையில்லாத சக்தி சுருள் சுருளாக இந்தச் சிறிய மனித உடலுக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சக்தியை உணர முயல்வது தான் ஆன்மிகம்.
* சமயம் சார்ந்த தத்துவ உண்மைகளை மூளையில் ஏற்றி கொண்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். உறுதி பிறழாத ஒழுக்கமே ஆன்மிகத்தின் அடிப்படை.
* சுயநலம் ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். இது தான் ஒழுக்கத்திற்கு கொடுக்கக்கூடிய ஒரே இலக்கணம்.
* மனதிற்கோ, உடலுக்கோ பலவீனத்தை உண்டாக்கும் எதையும் கைவிரலாலும் தீண்டக்கூடாது. பலமே வாழ்வு. பலவீனமே மரணம்.
* கடவுளுக்குச் சமமான ஆற்றல் சாத்தானுக்கும் உண்டு. ஆனால், கடவுளுக்குச் சுயநலம் கிடையாது. 
விவேகானந்தர்

No comments: