Tuesday, September 11, 2012

பொறுமையால் சுகம் பெறலாம்


* உண்மையான செல்வம் அறிவு மட்டும் தான். எல்லாவிதமான செல்வங்களுக் கும் அறிவு தான் வேராக இருக்கிறது. அறிவிருந்தால் எதையும் வெல்லலாம்.
* சோம்பேறியாக இருப்பது பெரிய குற்ற மாகும். பிச்சை எடுப்போரில் பெரும்பா லோர் சோம்பேறிகள் என்பதே உண்மை.
* பொறுமை இல்லாதவனுக்கு உலகம் எந்நாளும் துன்பமயமாகவே இருக்கும். பொறுமையை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் சுகம் பெறலாம்.
* பொய் சொல்லக்கூடாது. புறம் பேசக் கூடாது. முகஸ்துதி யாக பாராட்டக்கூடாது. தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளக்கூடாது.
* எல்லா தெய்வங்களும் ஒன்றே என்பதை உணர்ந்து கொள். இவ்வுலகில் ஒரு தெய்வம் இருப்பது நிஜம். அது அறிவுமயமாக இருக்கிறது. அந்த அறிவுக்கடலில் நாம் ஒவ்வொருவரும் ஒரு திவலையைப் போல இருக்கிறோம். 
* தன்னை மற. தெய்வத்தை நம்பு. நியாயத் தைச் செய்ய பாடுபடு. கடமையில் கவனம் வை. எல்லா இன்பங் களும் உன்னை நாடிவரும்.

No comments: