வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க இலகு வழி!
வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’இலிருந்து பைல்களை மீட்க இலகு வழி!
இது கணினி யுகம். என்னதான் அசுர வளர்ச்சி பெற்றிருந்தாலும் இதில் ஆபத்துகளும் இல்லாமல் இல்லை. ஆபத்து என்பது நம் அறிவுசார் சொத்துக்களை பாதுகாப்பது.
அறிவுசார் சொத்துக்கள் என்பது நம் கணினியில் சேமித்து வைத்திருக்கும் ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் உபயோகமான தகவல்கள்.
இதற்குத்தான் ஆபத்து வருகிறது. வைரஸ் என்ற பெயரில். இணையதள இணைப்பு இருந்தால் நிச்சயம் வைரஸ் தாக்குதல் வந்து விடும். அதோடு சேமித்து வைக்க பயன்படும் மேமரிகார்ட், பென்ட்ரைவ் பாதிக்க படும் நிலையில் முதல் இடத்தில் இருக்கிறது.. சிடிக்களில் இந்த ஆபத்து இல்லை என்பது ஒரு ஆறுதல்.
நிற்க...
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள்.
வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது.
ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க பட்டால் உடனடியாக ஸ்கேன் செய்து பைல்களை திரும்ப பெற்று விடலாம்.
சில சமயம் அதை கவனிக்காமல் விட்டு விட்டால் புற்று நோய் பரவி மொத்த பைல்களையும் அழித்து விடும். அல்லது பைல்களை நம்மால் பார்க்க முடியாத சூழ்நிலை வந்து விடும். அப்படி வைரஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும் போது
கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது.
அதாவது நம் கண்ணுக்கு தெரியாது. வெறும் வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது என்பது தான்.
பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் சில முக்கியமா தகவல்கள், அபூர்வமான புகைப்படங்கள், வீடியோக்கள் இருக்கிறது. அதை அப்படியே அழித்து விட முடியாது என்றால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
இதற்க்கு ஏதாவது சாப்ட்வேர் பயன்படுத்த வேண்டுமா என்றால், வேண்டாம். உங்கள் கணினியில் இருந்தே அதை மீட்டெடுக்கலாம்.
கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும்Space சரியாக கொடுக்கவும்.
நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enterஅழுத்துங்கள்.
அவ்வளவுதான் சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.
சந்தோஷம்தானே. சரி..... இது போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு மட்டும் அல்ல, உங்கள் நண்பர்களுக்கும், உங்களுக்கு வேண்டியவர்களுக்கும் வரும்.
சந்தோஷம்தானே. சரி..... இது போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு மட்டும் அல்ல, உங்கள் நண்பர்களுக்கும், உங்களுக்கு வேண்டியவர்களுக்கும் வரும்.
- அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க கூடாது இல்லையா... அதனால் இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கு சேர் செய்யுங்கள்.
No comments:
Post a Comment