* நல்ல நெஞ்சமே! நீ உன் பகைவனுக்கும் அருள்வாயாக. நன்மைகளைச் செய்வாயாக. புகை ஓரிடத்தில் இருந்து கிளம்புகின்றது என்றால் அவ்விடத்தில் தீயிருப்பதை நீ பார்த்திருக்கிறாய் அல்லவா! அதைப் போல ஏ! நல்ல நெஞ்சமே! பகை நம்மைச் சூழ்ந்து வருகின்ற போது, அவ்விடத்திலும் அன்பே உருவான பரம்பொருள் வாழ்கின்றான் என்பதை உணர்ந்து கொள்.
* எவ்வடிவத்தில் உயிர்கள் வாழ்ந்தாலும், அவ்வுயிரில் ஈசன் குடியிருக்கின்றான் . ஏ! நல்ல நெஞ்சமே! அதைப் போலவே பகைவனின் உயிரிலும் பரம்பொருளான ஈசன் இருப்பதை நீ அறியவில்லையா?
* வாழ வேண்டும் என்று எண்ணினால் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும். கீழான எண்ணங்களைக் கொண்டவன் வாழ்வதற்கு தகுதியற்றவன். பிறரைத் தாழ்த்த நினைப்பவன், தனது வாழ்வில் தோல்வியைத் தழுவி நிற்பான் என்று சாத்திரங்கள் சொல்வதை நல்ல நெஞ்சமே நீ கேட்பாயாக.
* நமக்கு முன்னே சீறிப்பாய்ந்து கடிக்க வரும் புலியைக் கண்டால் கூட அன்போடு அதனை உன் சிந்தையில் வைத்துப் போற்று. நல்ல நெஞ்சமே! அன்னை பராசக்தியே புலியின் வடிவத்தில் நம்முன் தோன்றினாள் என்று வணங்கி மகிழ்

No comments:
Post a Comment