Tuesday, June 12, 2012



பெட்ரோல் பங்க் கொள்ளைகள்

பெட்ரோல் போட ஒவ்வொரு முறை செல்லும் போதும் பீ. பி ஏறாமல் இருக்க வேண்டிக் கொண்டே போவேன். நம்மை நிற்க வைத்து கொண்டு கண் முன்னே ஏமாற்றுவது எவ்வளவு கொடியது ! அதை பொறுத்து கொள்வது மிக கடினம் ! இந்த பதிவில் அத்தகைய ஏமாற்று வேலைகள் குறித்து சற்று பகிர்கிறேன்

முதலாவதாக பெட்ரோல் பங்க்கில் செய்யும் ஏமாற்று வேலை கலப்படம். இது சாதாரண பைக் மற்றும் கார் ஓட்டும் நம்மால் அவ்வளவு எளிதில் கண்டு பிடிக்க முடியாது. சொந்த ஆட்டோ வைத்து ஓட்டுவோர் இதனை எளிதில் சொல்வார்கள். இத்தகைய கலப்பட பங்குகளை தவிர்க்க மிக சாதாரண வழி, கூட்டம் அதிகம் இல்லாத பெட்ரோல் பங்குகளை அறவே தவிர்த்து விடுங்கள் ! அந்த பெட்ரோல் பங்குகள் செய்யும் கலப்படம் குறித்து சுற்று வட்டத்தில் உள்ளோர் நன்கு அறிந்தே தான் அதனை முழுதும் தவிர்க்கின்றனர் என்பதை உணருங்கள் !

மாறாக நாம் என்ன நினைக்கிறோம்? பெட்ரோல் பங்க்கில் போய் ஐந்து நிமிடம் காக்க நமக்கு மனமே வருவதில்லை. விரைவில் போட்டால் போதும் என கூட்டம் இல்லாத பெட்ரோல் பாங்குகளை நாடுகிறோம். இந்த எண்ணத்தையும், வழக்கத்தையும் முழுதும் தவிர்க்க வேண்டும்.

அடுத்து மிக முக்கியமாக பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பும் ஆட்கள் செய்யும் திருட்டு ஒன்று உண்டு. நமக்கு முன் ஒருவர் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டிருக்கிறார் என வைத்து கொள்ளுங்கள் அடுத்து நமக்கு இருநூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டுமெனில், மறுபடி சீரோ செய்யாமல் அந்த நூறிலிருந்தே ஓட்டி விடுவார்கள். ஆக உங்களுக்கு இருநூறு ரூபாய்க்கு பதில் நூறு ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் போடப்படும் ! நீங்கள் இதை கவனிக்கா வண்ணம் அந்த நேரம் தான் சரியே இன்னொரு நபர் வந்து உங்களிடம் பணம் வாங்குவார். அல்லது பெட்ரோல் நிரப்பும் நபரே உங்களிடம் வேறு பேச்சு கொடுப்பார். இதை ஒரு வேளை நீங்கள் கவனித்து விட்டு கேட்டால், சீரோவுக்கு மாற்ற மறந்து போன மாதிரி ஆக்டிங் குடுத்து விட்டு பின் முழுதும் போடுவார்கள். நீங்கள் பெட்ரோல் போடும் முன் சீரோவை சரி பார்ப்பது மிக அவசியம்.

மேலே சொன்னது கூட எச்சரிக்கை உணர்வு அதிகம் இல்லாதோருக்கு தான் நடக்கும். அதை விட என்ன தான் எச்சரிக்கையுடன் இருந்தாலும் நம்மிடம் அவர்கள் பெட்ரோல் அடிப்பார்கள். இதை கவனிக்கும் நமக்கு செம டென்ஷன் ஆகும்.

நீங்கள் இருநூறு ரூபாய்க்கு பெட்ரோல் போடுகிறீர்கள் எனில், துவக்கம் சீரோவில் இருந்தாலும் அடுத்த ஜம்பே இருபது அல்லது முப்பது ரூபாயில் ஆரம்பிக்கும். அளவில் பார்த்தால் சீரோவில் இருந்து நேரே 0.20 அல்லது 0.30 லிட்டருக்கு ஓடி விடும். அதன் பின் அடுத்தடுத்த எண் மாறினாலும், இந்த முதல் ஜம்ப் இருக்கே அங்கு தான் அவர்கள் கொள்ளை லாபம் அடிப்பார்கள் ! " என்னங்க எடுத்த உடன் 0 .30 லிருந்து ஓடுது என்று கேட்டால் " மெஷின் செம பாஸ்ட். அப்படி தான் ஓடும் " என்று சொல்லி நம்மை அனுப்புவதிலேயே குறியாய் இருப்பார்கள். என் நண்பர் ஒருவர் இத்தகைய இடங்களில் செமையாக சண்டை போட்டு விடுவார். இவர் போடும் சத்தம் தாங்க முடியாமல் இவருக்கு ஜம்ப் ஆனாதக சொல்லும் 0.30 லிட்டர் பெட்ரோல் மீண்டும் போட்டு அனுப்பி விடுவார்கள். காரணம் அங்கு நிற்கும் கஸ்டமர்கள், இவர் சொல்லும் குற்ற சாட்டுகளை கேட்டால் மறுபடி இங்கு வர மாட்டார்கள் என்பதே !

ஆனால் நம்மை போன்ற ஆட்கள் ஒவ்வொரு முறையும் இவர்களிடம் இப்படி சண்டை போட்டு நம் ரத்த அழுத்தத்தை உயர்த்தி கொள்ள முடியாது ! இதற்கு ஒரே வழி. வரிசையில் நிற்கும் போதே மற்றவர்களுக்கு எப்படி போடுகிறார்கள் என பார்க்க வேண்டும். எல்லோருக்கும் இப்படி ஜம்ப் ஆகிற மாதிரி தான் போடுகிறார்கள் எனில் நம் முறை வரும் போது " மெதுவா போடுங்க. ஜம்ப் ஆக கூடாது" என தெளிவாக அவரிடம் கூறுங்கள். " இவர் ஜாக்கிரதையான ஆள். ஜம்ப் ஆனால் சத்தம் போடுவார்" என ஒழுங்கே போட வாய்ப்பு உண்டு. அப்படி சொல்லும் நேரம் பெரும்பாலும் அதிகம் ஜம்ப் ஆகாமல் அவர்கள் பெட்ரோல் போடுவதை என் அனுபவத்தில் பார்த்துள்ளேன்

இப்படி ஜம்ப் ஆவது துவக்கத்தில் மட்டும் தான் இருக்குமா கடைசியில் வெறும் மீட்டர் ஓட, பெட்ரோல் உள்ளே கொட்டாமல் இருக்குமா என தெரியவில்லை. போலவே ஜம்ப் ஆவது பெட்ரோல் போடுபவர் கையில் தான் கண்ட்ரோல் உள்ளதா அல்லது பெட்ரோல் பங்குகள் எல்லா கஸ்டமருக்கும் இப்படி ஜம்ப் ஆகுற மாதிரி ஏற்கனவே செட்செய்திருப்பார்களா என்றும் தெரிய வில்லை. இது பற்றி யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்கள் !

இவர்கள் செய்யும் இன்னொரு அக்கிரமம். பெட்ரோலுக்கு பெட்ரோல் போடும் முன்பே பணம் வாங்கி விடுவார்கள். போட்ட பிறகு மறுபடி கேட்பார்கள். நாம் கொடுத்து விட்டோம் என சொன்னால் நம்ப மாட்டார்கள். எனக்கு இது மாதிரி இரண்டு முறை ஆகியிருக்கிறது. இன்னும் சிலருக்கும் இப்படி ஆவதை பார்த்துள்ளேன்.

இதற்கு ஒரே வழி பெட்ரோல் போட்ட பின் தான் பணம் தரவேண்டும். அவசரமாய் முடிக்க வேண்டும் என முதலில் தந்தால், ஞாபக மறதியிலோ, அல்லது வேண்டுமென்றோ அவர்கள் மீண்டும் கேட்க வாய்ப்பு உண்டு !

இப்படி பெட்ரோல் பங்குகள் நம்மை செம டென்ஷன் ஆக்குவதை தவிர்க்க, மோசமான பெட்ரோல் பங்குகளை முழுதும் தவிர்த்தல் நலம் ! பிரச்சனை இல்லாத, நல்ல குவாலிட்டி மற்றும் சரியான அளவுடன் பெட்ரோல் தரும் பாங்குகள் குறைவே.

அத்தகைய பங்குகள் எவை என உங்களுக்கு தெரிந்தால், அவை சற்று தூரம் என்றாலும் கூட சிரமம் பார்க்காமல் அவற்றிலேயே பெட்ரோல்

போடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள் ! இன்றைக்கு பெட்ரோல் விற்கிற விலையில் ஏமாறாமல் இருப்பதுடன், அவற்றை கவனித்து பீ.பி ஏறாமல் இருக்கும் 

No comments: