நீங்கள் நல்ல நோட்டா ? கள்ள நோட்டா ?
ரூபாய் நோட்டுகளை பார்த்து ஒருவன் “ஏ ரூபாய் நோட்டே! நீயும் பேப்பர் தானே உன்னை நான் ஏன் மதிக்க வேண்டும் ?” என்று கேட்டானாம் . அதற்கு அந்த ரூபாய் நோட்டு சொல்லியதாம் “நானும் பேப்பர் தான் ஆனால் இதுவரை ஒரு குப்பைத்தொட்டியை கூட பார்த்ததில்லை “
வங்கியில் வேலை பார்க்கும் நண்பன் ஒருவன் சொன்ன தகவலிது “எங்கள்ட கள்ளநோட்டு வந்துச்சுன்னா உடனே கிழிச்சு குப்பைத்தொட்டியில போட்ருவோம்”
இதை மனிதர்களுக்கு பொருத்திப் பார்ப்போமா ?
நல்லநோட்டு மனிதர் என்றால் எல்லோரிடமும் அன்பாக பழகுவார்கள், பணிவுடன் செயல்படுவார்கள் , ஒழுக்கமாக வாழ்வார்கள் , யாரையும் துன்புறுத்த மாட்டார்கள் . அவர்கள் வாழ்க்கை தரம் உயராமல் இருக்கலாம் ,ஆனால் எல்லோரிடமும் அவர்களுக்கு மதிப்பு இருக்கும் வாழ்க்கையில் உயர்ந்த மனிதர்களாய் போற்றப்படுவர் .ரூபாய் நோட்டை நாம் சட்டைப்பையில் வைத்திருப்பது போல அவர்கள் எல்லோர் இதயத்தில் நீங்கா இடம் பெறுவர்
கள்ளநோட்டு மனிதர் என்றால் சூழ்ச்சியராகவும் , திருடராகவும், அடுத்தவன் உழைப்பை சுரண்டி கொழுப்பவராகவும் இருப்பர் .ஆனால் ஒரு நாள் அவர்கள் சாயம் வெளுத்துப்போகும் அன்று நிச்சயம் அவர்கள் கிழித்தெறியப்படுவார்கள் அவர்களுக்காகவே காத்திருக்கும் ஒரு குப்பைத்தொட்டியில்
நண்பர்களே ! சொல்லுங்கள் நீங்கள் நல்லநோட்டா ? கள்ள நோட்டா

No comments:
Post a Comment