சாதனை மாணவிக்கு உதவும் உள்ளங்கள் யார்?-03-06-2012
கோவை: மாலையில் பள்ளி முடிந்ததும், தங்கப்பட்டறைக்கு வேலைக்கு சென்று படித்து வந்த இந்த அரசுப்பள்ளி மாணவி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1121 மதிப்பெண் பெற்றும், மேற்படிப்பு படிக்க வசதியில்லாமல் தவித்து வருகிறார்.
கோவை, ராஜவீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 2 மாணவி ஐஸ்வர்யா. கட்டட தொழிலாளியாக இருந்த இவரது தந்தை, பணியின்போது, தலையில் கருங்கல் விழுந்து இறந்தார். நான்கு வயதிலேயே தந்தையை இழந்த ஐஸ்வர்யா, படிப்பில் படுசுட்டி. எப்படியும் மகளை நன்கு படிக்க வைக்க, இவரது தாயார் சரஸ்வதி, வீடுகளில் வேலை செய்தும், மாலை வேளைகளில் ரோட்டோரத்தில், இட்லி வியாபாரமும் செய்தார்.
குடும்ப கஷ்டத்தை நன்கு உணர்ந்த ஐஸ்வர்யா, தாயாருக்கு உதவி வருகிறார். பிளஸ் 2 படிக்கும் போது, தினமும் பள்ளி முடிந்ததும், அருகில் உள்ள தங்கப்பட்டறையில், இரவு 10.00 மணி வரை வேலை செய்து, பின்னிரவு வரை, சிரமப்பட்டு படித்துள்ளார் ஐஸ்வர்யா. தூக்கத்தை தியாகம் செய்து, அவர் நடத்திய போராட்டத்துக்கு பலன் கிடைத்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் 1121 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதல் மாணவியாக வெற்றி பெற்றுள்ளார். இவரது மதிப்பெண் : வணிகவியல் 200, கணக்கு பதிவியல் 192, பொருளாதாரம் 195, வரலாறு 193, தமிழ் 186, ஆங்கிலம் 155. அடுத்ததாக உயர்படிப்பு படிக்க யாராவது உதவி செய்ய மாட்டார்களா என, ஏங்கி நிற்கிறார் இந்த ஏழை மாணவி.
மாணவி ஐஸ்வர்யா கூறுகையில், "சின்ன வயசுலயே, அப்பா இறந்துட்டாங்க. ஆனாலும் என்னை அம்மா கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க. ஸ்கூல் விட்டதும் 5.00 மணியில் இருந்து ராத்திரி 10.00 மணி வரை, தங்க பட்டறைல வேலை செய்வேன். சில நாள் ராத்திரி 11.30 மணி வரை கூட வேலை இருக்கும். வாரத்துக்கு 400 ரூபா குடுப்பாங்க. வேலை இல்லாத நாள்ல அதுவும் கிடைக்காது. வீட்டுல ரொம்ப கஷ்டமாக இருக்கும்&'&'.
"ராத்திரி வேலை முடிச்சு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, காலை 3.00 மணி வரை படிப்பேன். அப்புறம் கொஞ்ச நேரம் தூங்கிட்டு, காலை 5.00 மணிக்கு எந்திருச்சி மறுபடியும் 8.00 மணி வரையும் படிப்பேன்.
"ராத்திரி வேலை முடிச்சு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, காலை 3.00 மணி வரை படிப்பேன். அப்புறம் கொஞ்ச நேரம் தூங்கிட்டு, காலை 5.00 மணிக்கு எந்திருச்சி மறுபடியும் 8.00 மணி வரையும் படிப்பேன்.
எப்படியும் ஸ்டேட் பர்ஸ்ட் வந்துரணும்ங்கற வெறியோட படிச்சேன். ஆனா, இங்கிலீஸ்ல மார்க் குறைஞ்சு போச்சு. வேலைக்கு போய்ட்டே படிச்சதால, ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்கணும்னு பிராக்டீஸ் பண்ணலை. அதனால எல்லா கேள்விக்கும் விடை தெரிஞ்சிருந்தும் எக்சாம் ஹால்ல முழுசா எழுத முடியாம போச்சு.
"அடுத்ததா பி.எஸ்.ஜி., காலேஜ்ல பி.காம்., படிக்க அப்ளை பண்ணியிருக்கேன். டிகிரி முடிச்சதும் ஐ.ஏ.எஸ்.,க்கு படிக்க ஆசையா இருக்கு. காலேஜ்க்கு போறதால இனி பட்டறை வேலைக்கு போறதுக்கெல்லாம் நேரம் கிடைக்காது. அம்மாவுக்கும் உடம்புக்கு முடியறதில்லை. யாராவது என் படிப்புக்கு உதவினா அவங்கள என் ஆயுசுக்கும் மறக்க மாட்டேன்,&'&' என்கிறார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யாவுக்கு உதவ விரும்புபவர்கள், 89252 68850 எனும் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment