இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
First Published : 11 Apr 2012 02:46:49 PM IST
Last Updated : 11 Apr 2012 03:08:50 PM IST
இந்தோனேசியாவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 8.9 எனப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி விரைந்தனர். அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் கட்டடங்களில் இருந்து வெளியேறி வீதியில் குழுமினர்.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக தமிழகத்திலும் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 எனப் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்து தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் கூடினர்.
சென்னையில் போரூர்,. ஆழ்வார்பேட்டை, அமிஞ்சிக்கரை, பூந்தமல்லி, அம்பத்தூர், தாம்பரம் உள்ளிட்ட இடIங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டது.
இதேபோல் ஊட்டி, குன்னூர், திருச்சி, நாகப்பட்டினம் உள்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டதாக நமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நிலநடுக்கத்தினால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை.
எனினும் சில இடங்களில் தொலைத்தொடர்பில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment