வீடுகளுக்கு சோலார் விளக்கு ஒரு யோசனை!
எஸ்.மணி, மடிப்பாக்கம், சென்னையிலிருந்து அனுப்பிய, "இ - மெயில்' கடிதம்: இப்பகுதியில், "மிக நல்ல திட்டம்' என்ற தலைப்பில், மதுரை வாசகர், வீடுகளுக்கு சூரிய மின்சக்தி கலன்களை நிறுவுவது குறித்த கருத்துக்களை எழுதியிருந்தார்; நல்ல விஷயம் தான்.ஆனால், அவர் குறிப்பிட்டுள்ளது போல, 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில், 1,000 வாட் சூரிய மின்சக்தி கலம் பொருத்த முடியுமா என்பது சந்தேகமே. ஏனெனில், சூரியத் தகடுகளின் விலை, மின் மாற்றியின் விலை, மின்சாரத்தை சேமிக்கும் (குறைந்தது 60து 150 ஏ.ஹெச்.,) பேட்டரிகளின் விலை மற்றும் நிறுவும் கட்டணம் இதெல்லாம் சேர்த்தால், 50 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்க வாய்ப்பே இல்லை. தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜன்சி இணைய முகவரியில் சென்று பார்த்தால், இதுகுறித்த உண்மை நிலவரம் தெரியும். அதில் வீடுகளுக்கான, 1 கிலோ வாட் (1,000 வாட்) சூரிய மின் சக்தி தகடு மற்றும் மின் சேமிப்பு கலன்களை நிறுவ, இரண்டு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும் என்றும், அதில், மானியமாக, 81 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானியத் தொகை, 81 ஆயிரம் போக மீதமுள்ள தொகையில், 75 சதவீதம் வங்கிக் கடனாகப் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.மானியம் மற்றும் வங்கிக் கடன் போக, மீதமுள்ள தொகை தான் நம் கைக்காசு என்பதால், மிகவும் குறைவான பணமே தேவைப்படும். இந்தக் காலத்தில், 20 ஆயிரம் ரூபாய் அதிகமில்லை. என்னதான் விலைவாசி ஏறினாலும், அதற்கேற்ப வருமானமும் ஏறிக்கொண்டு தான் இருக்கிறது.ஆனாலும், அரசால் மிகக் குறைந்த காலத்திற்குள் புதிய மின் திட்டங்களை கொண்டு வர முடியாது. இதனால், பெருவாரியான மக்கள் விரும்புவதற்கேற்ப, அரசு மற்றும் வங்கிகளின் பங்களிப்போடு, இந்த மானியத்தை இன்னும் சற்று அதிகப்படுத்தி, சூரியசக்தி கலன்களை மக்களே தங்கள் இல்லங்களில், அரசின் நேரடி கண்காணிப்பின் மூலமோ அல்லது அரசு அனுமதி பெற்ற தனியார் நிறுவனங்களின் மூலமோ, நிறுவிக்கொள்ளும் வகையில், உடனே அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.இது, வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல், உடனே செயல் வடிவமும் பெற்றால், தமிழக மக்களுக்கு இதைவிட மகிழ்ச்சி வேறெதுவும் இருக்க முடியாது. தொடரும் மின்வெட்டு மற்றும் பற்றாக்குறையால் தவிக்கும் மக்களின் வாழ்வில் விளக்கேற்றுவாரா தமிழக முதல்வர்

No comments:
Post a Comment