வெயில் இருந்து தப்பிக்க...
First Published : 15 Apr 2012 12:00:00 AM IST
கூடியவரை கைத்தறி துணிகளை அணிந்தால் பாதி வெயில் குறைந்த மாதிரித் தோன்றும்.
கூடியவரை வெளியில் செல்லும் வேலைகளை காலை அல்லது மாலையில் வைத்துக் கொள்ளலாம்.
வெயிலில் செல்வதென்றால் கட்டாயம் குடையும், தண்ணீர் பாட்டிலும் எடுத்துச் செல்லுங்கள்.
தலைக்குத் தொப்பி அணிவது மிகவும் நல்லது.
வெயிலில் சென்று வந்தவுடன் குளிர்ந்த நீரில் முகம் கழுவுவது அவசியம்.
கோடையில் கண்களின் அடியில் கருவளையம் வரும்; முகம் கறுக்கும். இதை நீக்க தயிரில் ஒரு சொட்டு எலுமிச்சம் சாறு விட்டு கடலைமாவு கலந்துத் தடவி பின் முகம் கழுவினால் முகமும், கண்களும் புத்துணர்ச்சி பெறும்.
வெள்ளெரிப் பிஞ்சு நிறைய சாப்பிடுங்கள். உடலுக்கு குளிர்ச்சி, போனசாக உடலும் இளைக்கும்.
முடிந்தால் இரு வேளைக் குளிக்கலாம். வாரம் மூன்று நாட்களாவது தலைக்குக் குளிப்பதும் நல்லது.
எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல், வேப்பிலை, துளசி, கஸ்தூரி மஞ்சள், பச்சைப்பயிறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கோரைக்கிழங்கு போன்றவைகளைக் கலந்துப் பொடியாக்கிப் பன்னீரில் குழைத்து சோப்பிற்குப் பதிலாகத் தேய்த்துக் குளித்தால் வியர்க்குருவும் வராது. வியர்வை நாற்றமும் வராது.
காரம், வறுவல் உணவுகளைத் தவிர்த்து குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடவும்.

No comments:
Post a Comment