Friday, April 6, 2012


காற்றில் தவழும் கண்ணதாசன்

First Published : 26 Mar 2012 12:00:00 AM IST


காற்றில் தவழும் கண்ணதாசன் - த.இராமலிங்கம்; பக்.336; ரூ.125; விகடன் பிரசுரம், சென்னை-2; )044 - 4263 4283/ 84.
காலத்தால் அழிக்க முடியாத கீதங்களால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் கவியரசு கண்ணதாசன். அவர் எழுதிய திரையிசைப் பாடல்கள் மூலம் நெகிழ்ச்சியான அனுபவங்ளைத் தொகுத்து வாழ்வியலாக, காதலாக, இலக்கியமாக சொல்லும் நூல் "காற்றில் தவழும் கண்ணதாசன்'.
மேட்டுக்குடி வாழ்வையும், சாலையோரத்தில் வாழும் மக்களின் வாழ்வையும் அவர் அறிந்தவர். அதனால்தான் சகலரையும் கவரும் பாடல்களை அவரால் எழுத முடிந்தது. இந்நூலில், 129 தலைப்புகளில் பாடல் பிறந்த விதம், அவருடன் பணியாற்றியவர்கள், முக்கியமான சம்பவங்கள், குடும்பத்து நிகழ்வுகள், இன்பம், துன்பம், வலி, வேதனை என கண்ணதாசனின் பதிவுகள் சிறப்பாக இடம் பெற்றுள்ளன.
நூலுக்கு கவிஞர் வாலியின் அணிந்துரை மகுடமாக அணி செய்கிறது. கண்ணதாசனுடைய தீவிர பக்தர்களுக்கு இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் ஏற்கெனவே அறிந்த செய்திகளாக இருக்கலாம். ஆனால் அவரை முழுமையாக அறிய விரும்பும் புது வாசகனுக்கு இது புதுமையான நூல். படிக்கப் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.

No comments: