விலைக்கு வாங்கப்படும் விபரீதம்
First Published : 05 Apr 2012 01:29:27 AM IST
சுதந்திரத்துக்குப் பிறகு நமது மின் உற்பத்தித்திறன் வெகுவாகப் பெருகிவந்தாலும், அதைவிட பற்பல மடங்கு நமது தேவைகள் பெருகியுள்ளன. அந்தத் தேவையின் பெரும்பகுதி நமது சமச்சீரற்ற சந்தைப் பொருளாதார வளர்ச்சியின் பொருட்டே ஏற்பட்டதாகும். நமது வளர்ச்சிப்பாதையின் நியாயமே, கேள்விக்குறியாக உள்ள இந்தத் தருணத்தில், பொருளாதார நிர்பந்தத்தைக் கண்டு மயங்காது, நிகழ்கால விஞ்ஞானநோக்கில் அணு ஆற்றல் உற்பத்தி ஏற்புடையதாக உள்ளதா என்று மட்டுமே சிந்திப்பது அறிவுடமையாகும்.
1986-ல் ஏற்பட்ட செர்னோபில் விபத்துக்குப் பிறகு தொழில்நுட்பத்தில் பல மைல்கற்கள் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இனி அணு உலையின் பாதுகாப்பின் பொருட்டு பீதியடையத் தேவையில்லை என்று அதன் ஆதரவாளர்கள் அறுதியிட்டு கூறிக்கொண்டிருக்கையில், ஜப்பானில் புகுஷிமா அணு ஆலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
அணு உலை ஆதரவாளர்கள் அயர்ந்துவிடவில்லை. பூகம்பமும் சுனாமியும் ஒருசேர ஏற்படுத்திய பாதிப்பு அரிதிலும் அரிதானதாகும் என்றும், ஜப்பானிய சூழ்நிலை நம் நாட்டுக்குப் பொருந்தாது என்றும், நமது தொழில்நுட்பம் மேலும் அதிநவீனமானது பாதுகாப்பானது என்றும் உறுதியாகக் கூறுகிறார்கள்.
அணுசக்தி பாதுகாப்பு பெüதீகத்தின் நிபுணரான எம்.வி. ரமணாவின் கூற்றின்படி, "அணு உலை மிக அதிகமான உஷ்ணமும் அழுத்தமும் கதிரியக்கமும் உள்ளடக்கிய சிக்கலான தொழில்நுட்பமாக இருப்பதில், அதில் ஏற்படக்கூடும் விபத்தின் காரணிகள் நம் கணிப்புக்கும் உத்தரவாதத்துக்கும் உள்படாமல் போகக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது' என்று நிபுணருக்கே உரிய அடக்கத்துடன் கூறுகிறார்.
அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருந்த டாக்டர் கோபாலகிருஷ்ணன் விவரமறிந்த அக உறுப்பினராவார். அவர் ஓய்வுபெறுகையில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு
அளித்துள்ள பேட்டியில் கூறியது: நான் ஆறு வருடம் பணிபுரிந்துள்ள அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்பாடுகள் எனக்குப் புரிபடவில்லை. அது கேலிக்கூத்தானதாகவே உள்ளது.
அணுசக்தித்துறையைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்புப் பற்றிய உத்தரவாதங்கள் நம்பகத்தன்மை அற்றவை என்று என்னால் நிரூபிக்க முடியும்.
அணு உலை பாதுகாப்பைப் பற்றி நமது விஞ்ஞானிகளின் பெருமை கலந்த உத்தரவாதங்களுக்கு இடையே, அணு உலைக்கழிவுகளைப் பற்றிய விவாதங்கள் போதிய கவனம் பெறுவதில்லை. 1,000 மெகாவாட் அணு உலையின் வருடாந்திர உபயம் சுமார் 30 டன் தீவிர கதிரியக்கம் பொருந்திய கழிவுகள். 10,000 வருடம் முதல் ஒரு லட்சம் வருடங்களுக்கும் மேலாக நீடிக்கக்கூடிய கதிரியக்கமுடைய அந்தக் கழிவுகளைப் பதுக்கிவைக்கத்தான் இன்றைய விஞ்ஞானத்துக்கு இயலுமே ஒழிய, அவற்றை அப்புறப்படுத்தவோ அவற்றின் நச்சுத்தன்மையை மாற்றவோ, செல்லுபடியற்று போகச்செய்யவோ முடியவில்லை.
இதுபோன்று அணுக்கழிவுகளை அப்புறப்படுத்துவதில் உள்ள பகீரதப் பிரயத்தனங்கள், அணு உலைக் கழிவுகளின் அபாயகரமான உருவைப் பற்றிய விஞ்ஞானிகளின் பீதிகலந்த ஒப்புதல் வாக்குமூலமாகவே கொள்ள வேண்டியுள்ளது. மேலும் பகீரதப் பிரயத்தனங்கள்பால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஏற்படக்கூடிய செலவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டால், அணுசக்தி மின்சாரம் உற்பத்திச் செலவு குறைவானது என்கிற மாயை உடைந்து போகும்.
அணுசக்தி உற்பத்தி பாதுகாப்பானதா அல்லது அபாயகரமானதா என்கிற விஞ்ஞானத்தைச் சார்ந்த வினா பிரதானமாக உள்ளது. இந்நிலையில், அணுசக்தி எதிர்ப்பாளர்கள் வெளிநாட்டைச் சேர்ந்த அமைப்புகளிடம் இருந்து நேரடியாகவோ, சமூகசேவை நிறுவனங்கள் மூலமோ, பணம் பெறுவதாக கூறுவது பிரச்னையைத் திசை திருப்பும் முயற்சியே.
நம்மைச் சுற்றி கதிரியக்கம் பொருந்திய சாதனங்கள் நிரம்ப இருப்பதாலும், அணுக்கதிரியக்கத்தைவிட மோட்டார் வாகன விபத்துகளில் உள்ள அபாயம் கண்கூடாகத் தெரிகிற சூழ்நிலையிலும், அணுசக்தியால் உண்டாகும் அபாயத்தைப் பற்றி பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்கிற ரீதியில் அணுசக்தி உற்பத்தியை ஆதரிப்போர் தரப்பில் விநோதமான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
யுரேனியம் எரிபொருள் அணு உலையில் தாக்கப்பட்டு அதன் கூறுகள் பிரிக்கப்படும். அப்போது அதன் கதிரியக்கம் ஒரு பில்லியன் மடங்கு அதிகரிப்பதுடன், அதன் தாக்கம் பல ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும். அந்தச் சூழ்நிலையில், அதை ஆபத்தற்ற உருவிலுள்ள சாதாரண குறைந்தபட்ச கதிரியக்கத்துடன் உள்ள நிலைப்பாடுடன் ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசமில்லாததுபோல பாசாங்கு செய்வதாகும்.
காப்பீடு செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகன விபத்தின் விளைவு, அதில் நேரடியாக சம்பந்தப்பட்டவரை மட்டும் பாதிக்கும். தீவிர கதிரியக்கப் பாதிப்பானது, பரம்பரை பரம்பரையாகவும் நிவர்த்தி செய்ய முடியாததாகவும் இதுவரை மானுடம் அறிந்திராத பிறவிக் கோளாறுகள் உள்ளடக்கிய பேரழிவை எதிர்கொள்வதுமாகவும் நேரிடும். அப்படி நேர்ந்தால் எதிர்காலச் சந்ததியருக்கு அளவற்ற சிக்கலைத் தோற்றுவிக்கும் மன்னிக்க முடியாத குற்றவாளிகளாக நாம் ஆகிவிடுவோம்

No comments:
Post a Comment