Tuesday, April 10, 2012



புருஷன் வீட்டல் வாழப்போகும் பெண்ணே!
பெண்கள் திருமணமாகி கணவர் வீட்டுக்குச் செல்லும் போது, கடைபிடிக்க வேண்டியது குறித்த அறிவுரையை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வழங்கியுள்ளார் கள். அவர்கள், தன் திருமகளார் பாத்திமா(ரலி)க்கு வழங்கிய அந்த அறிவுரை எல்லாப் பெண்களுக்கும் பொருந்தும்.
* மகளே! ஒரு பெண் (தான் செய்த குற்றத்திற்காக) தனது புருஷனிடம் பாவமன்னிப்பு கேட்டு, புருஷனைத் திருப்திப்படுத்தாத வரையில் அவள் சொர்க்கம் நுழையமாட்டாள்.
* மகளே! ஒரு பெண் தன் கணவனுக்கு துன்பமும் துயரமும் கொடுத்தால், அல்லாஹ் அவளைச் சபிக்கிறான். அவள் செய்கின்ற எந்த நன்மையும் (வணக்க வழிபாடுகளும்) வானத்தில் உயர்த்தப் படுவதில்லை.
* மகளே! கணவன், மனைவி ஒருவருக்கொருவர் (முகம்) பார்த்து மகிழ்ச்சியடைந்தால், அவர்களைப் பார்த்து அல்லாஹ் மகிழ்ச்சியடைகின்றான். அவ்விருவருக்கும் ரஹ்மத் செய்கின்றான்.
* மகளே! கணவனும் மனைவியும் மகிழ்ச்சியான நிலையில் கைகளை இணைத்துப் பிடிப்பாராகில், இருவருடைய விரல்களுக்கு இடையில் அவர்களின் பாவங்களெல்லாம் கீழே உதிர்ந்து விடுகின்றன.
* மகளே! ஒரு பெண் தன் கணவனுடைய வார்த்தையை மீறி நடப்பாளேயானால், அல்லாஹ் அவளுடைய தொழுகை, நோன்பு, ஜக்காத் முதலிய இறைவழிபாடுகளை ஏற்றுக் கொள்வதில்லை. உணவின் வாசலும் அடைபட்டு விடும். 
* மகளே! ஒரு பெண் தனது கணவனுடைய உத்தரவின்றி வெளியேறினால், அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் கீழும் உள்ள மணல், கல், சூரியன், சந்திரன், தாரகை (நட்சத்திரம்) அனைத்தும் அவளைச் சபிக்கும்.

No comments: