Saturday, April 14, 2012


அருள்மிகு பைரவர் திருக்கோயில், தகட்டூர்

bairaver temple thagattur
அருள்மிகு பைரவர் திருக்கோயில்தகட்டூர்,நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4369- 270 197, 270 662 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை மணி முதல் 11 மணி வரைமாலை மணி முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்- பைரவர்
உற்சவர்- சட்டைநாதர்
பழமை- 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்- இயந்திரபுரி
ஊர்- தகட்டூர்
மாவட்டம்- நாகப்பட்டினம்
மாநிலம்- தமிழ்நாடு

இலங்கையில் இராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக இராமேஸ்வரத்தில் இராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார்.அதற்காக இலிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார்அனுமான் லிங்கத்துடன் வரும்போது,அவருடன் மகாபைரவரும் வந்தார்கோயில்களில் பைரவரே காவல் தெய்வம்அக்காலத்தில்கோயிலைப் பூட்டிபைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள்அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும்அந்தளவுக்கு சக்திவாய்ந்தவராக பைரவர் கருதப் பட்டார்அதுபோல் காசி இலிங்கத்திற்கு காவலாக பைரவர் அனுமனுடன் வந்துள்ளார்அவருக்கு தற்போதைய தகட்டூர் தலத்தில் குடியிருக்க ஆசைபிறக்கவேஅங்கேயே தங்கி விட்டார்.
கோயிலில் பைரவர் மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கிறார்இவரை மூலஸ்தானத்தில் கொண்ட கோயில் தமிழகத்தில் இதுமட்டுமே.
அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளதுதாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான்.உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன்ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் சொன்னார்அவன் அகங்காரத்துடன்ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான்பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்பல அட்டூழியங்கள் செய்த அவன் அழியும் காலம் வந்தது.தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்உடனே,பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள்அந்தச் சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. “காளம்” என்ற விஷம்படிந்த அந்த பெண்ணுக்கு காளி” எனப் பெயர் சூட்டினாள் பார்வதிகாளிதேவி கடும் கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள்.அந்த கோபம் கனலாக வடிவெடுத்துசூரனை சுட்டெரித்ததுபின்னர் அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்குப் பாலூட்டினாள்.அதன்பிறகு சிவபெருமான் காளியையும்அந்தக் குழந்தையையும் தன் உடலுக்குள் புகச்செய்தார்.அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போலஎட்டு குழந்தைகள் உருவாயினஅந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு பைரவர்” என்று பெயர் வைத்தார்.
தெய்வங்களுக்கு காளைசிங்கம்யானைமயில் போன்ற வாகனங்கள் இருக்கபைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளதுசிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்துபிஸ்கட் கொடுத்து,குழந்தை போல வளர்ப்பார்கள்சிலர் நாயை தெருவில் கண்டாலே கல்லெறிவார்கள்இதுபோல்வாழ்க்கையில் வரும் துன்பத்தையும்இன்பத்தையும் இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றனஅந்த வேதத்தின் வடிவமாகவே நாய் வாகனம் கருதப் படுகிறதுநாய்க்கு வேதஞாளி” என்ற பெயரும் இருப்பது குறிப்பிட தக்கது.
இவ்வூருக்கு இயந்திரபுரி” என்ற பெயரும் இருக்கிறது.இதன் தமிழ்ப்பெயரே தகட்டூர்.” சக்தி வாய்ந்த தெய்வங்களின் முன்பு ஸ்ரீசக்ரம் என்ற அமைப்பு உருவாக்கப்படும்இந்தக் கோயிலிலும் ஒரு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதுஉற்சவர் சட்டைநாதர் சிலையும் இருக்கிறதுஅனுமனுடன் வந்த பைரவர் என்பதால்,இத்தலத்தில் காசி விஸ்வநாதர்விசாலாட்சி ஆகியோரும்பிரகாரத்தில் கணபதிவள்ளி,தெய்வானைசுப்பிரமணியர்துர்க்கைசண்டிகேஸ்வரர் ஆகியோரும் உள்ளனர்கோயிலுக்கு எதிரேயுள்ள தீர்த்தக்குளம் உள்ளதுகுளத்தின் ஒரு கரையில் காத்தாயிகருப்பாயி சமேத ராவுத்தர் சன்னதி இருக்கிறதுஇவரும் இத்தலத்தில் காவல் தெய்வமாக இருக்கிறார்.
திருவிழா:
சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்துநாள் விழா நடக்கிறது.ஞாயிறு ராகுகாலமான மாலை 4.30-6 மணி,தேய்பிறை அஷ்டமிகார்த்திகையில் பைரவாஷ்டமி காலங்களில் சிறப்பு பூஜை நடக்கிறதுமனோபலம்,வியாதி நிவர்த்திநியாயமாக நினைப்பவை நிறைவேற தேய்பிறை அஷ்டமியன்று மாலை 5-8மணிக்குள் யாகம் நடத்தப்படுகிறதுதிங்கள்,வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.
வேண்டுகோள்:
திருமணத்தடைகுழந்தை பாக்கியம்கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்:
சுவாமி அபிஷேகம் செய்தும்வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

1 comment:

Unknown said...

பயனுள்ள தகவல் நன்றி
இப்படிக்கு.வரதராஜன் பைரவன்கோவிலடி