கெட்டதாநல்லதா?
: நம் நாட்டில், 69 சதவீதம் பேரின் சராசரி தினசரி வருமானம், 100 ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளதாக, சமீபத்தில் உலக வங்கி வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது உண்மையா, பொய்யா என்பது ஒரு புறம் இருக்கட்டும்... நம் திட்ட கமிஷன் துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா போன்றோர், "ஒரு நாளைக்கு, 30 ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோர் வறுமையானவர்கள் அல்ல' என்று கண்டுபிடித்து, புல்லரிக்க வைத்திருக்கின்றனர்.மற்றொரு புள்ளி விவரத்தில், நம் இந்தியரின் சராசரி ஆண்டு வருமானம், 60 ஆயிரம் ரூபாய் என்கிறது. அதே சமயம், தனி நபர் வருமானம் அமெரிக்காவில், 23 லட்சம்; ஜெர்மனியில், 25 லட்சம்; சுவிட்சர்லாந்தில், 33 லட்சம் ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. உலகப் பொருளாதாரத்தில், எப்படி நாம் உயர்ந்து, மற்ற நாடுகளோடு போட்டி போடப் போகிறோம்? நாடு சுதந்திரம் பெற்ற, 65 ஆண்டுகளில், 50 ஆண்டுகளுக்கு மேல், காங்., தலைமையிலான அரசு அல்லது அதன் ஆதரவு பெற்ற அரசுதான் ஆண்டு கொண்டிருந்தது.தனி நபர் வருமானமும், சராசரி வருமானமும், புரையோடிப்போன ஊழலும், இப்படி நம்மை மற்ற நாட்டினரோடு ஒப்பிட்டும் போது, கீழே தான் உள்ளது.படேல், சுபாஷ் சந்திர போஸ் போன்ற திடமான, தேசப்பற்றுள்ள தலைவர்கள், இனி கிடைத்தால் தான், நாடு வல்லரசாகும். நமக்கென்ன வந்தது என்ற மக்களின் மனோபாவமும், மிக முக்கிய காரணம். இது மாறாத வரை ஒட்டுமொத்த உயர்வு என்பது, கானல் நீர் தான்.

No comments:
Post a Comment