Thursday, August 23, 2012

பிரார்த்தனை உதட்டிலிருந்து வரக்கூடாது

* அன்பு வழியில் ஆண்டவன் மீது பக்தி செலுத்துங்கள். உங்கள் வாழ்வில் ஏற்படும் அத்தனை குழப்பங்களும் மறைந்துவிடும்.
* வாழ்க்கை மரத்தைப் போன்றது. பண்பை வளர்க்கும் கல்வி தான் வேர். எண்ணங்களே மலர்கள். அவற்றால் விளையும் மகிழ்ச்சி தரும் முடிவுகளே கனிகள்.
* தீய பண்புகளும், நல்ல பண்புகளும் நமது உடலை மாறி மாறி வசப்படுத்தினாலும், இறுதியில் நல்லவை மட்டுமே நம்மை ஆள வேண்டும்.
* சூரியனைப் பார்க்க விளக்கு தேவையில்லை. அதன் ஒளியே போதும். அதேபோல் கடவுளைக் காண அவரின் அருளே நமக்குப் போதுமானது.
* பிரார்த்தனை உதட்டிலிருந்து வரக்கூடாது, நெஞ்சிலிருந்து வரவேண்டும், அதுவும் தனக்காகச் செய்யக்கூடாது, பிறருக்காகச் செய்ய வேண்டும்.
* கல்லிலே கடவுளைக் காணவேண்டுமே தவிர கடவுளைக் கல்லாக்க முற்பட்டுவிடக்கூடாது.
* நல்ல விஷயங்கள் விலைமதிப்பற்றவை. எனவே அது எண்ணிக்கையில் குறைவாகத் தான் இருக்கும், அவற்றை வாங்குவோருக்கு தகுதி வேண்டும்.
சாய்பாபா 

No comments: