Friday, August 31, 2012

பணியாளர்களை உபசரிங்க

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
* பணியாட்களின் சக்திக்கு மிஞ்சிய வேலைப்பளுவை அவர்கள் மீது சுமத்த வேண்டாம். அவ்வாறு சுமத்த நேரிட்டால் அந்த வேலையில் அவர்களுக்கு நீங்கள் துணை புரியுங்கள்.
* பணியாளர்களை உபசரியுங்கள். நீங்கள் உண்பதில் இருந்து அவர்களுக்கும் உணவு அளியுங்கள்.
* உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே! உங்களுக்குக் கீழிருந்தவர்கள் குறித்து உங்கள் ஒவ்வொருவரிடமும் வினவப்படும். பணியாட்கள் தன் எஜமானனின் பொருட்களுக்குப் பாதுகாவலன் ஆவான். அவர்களின் பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படுவார்கள்.
* நாம் பொறுப்பில் அமர்த்தி உள்ள ஒருவர் நம்மிடமிருந்து ஓர் ஊசியை மறைத்தாலும் அல்லது அதைவிடச் சிறியதொரு பொருளை மறைத்தாலும் அதனை அவர்கள் அபகரித்துக் கொண்டார் என்றே பொருள். மறுமை நாளில் அதனைச் சுமந்த வண்ணம் வருவார்.
வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து

No comments: