Wednesday, November 14, 2012

மனைவியிடம் பொருள் கேட்காதே!

* சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள்.
* அன்னதானம் செய்பவன், கல்விக்காக நிதியுதவி அளிப்பவன், கடன் என்பதே இல்லாமல் வாழ்பவன், போர்க்களத்தில் தைரியமாக முன்நிற்பவன் ஆகியோர் உயர்ந்தவர்களாகப் போற்றப்படுவர்.
* ஒருவருடைய வயது, செல்வநிலை, கணவன் மனைவி இடையில் உண்டாகும் பிணக்கு, ஜபித்து வரும் மந்திரம், அந்தரங்க விஷயங்கள், தானம், தனக்கு நேர்ந்த மான, அவமானங்கள் ஆகியவை அடுத்தவரிடம் சொல்லக்கூடாதவை.
* தெரியாத ஒருவனுக்கு ஒன்றைத் தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு இன்னும் சிறப்பாக அறிய வைக்கலாம். ஆனால், நல்லது கெட்டது எது என்று தெரிந்தும் பின்பற்றாதவனை சீர்திருத்துவதற்குப் பிரம்மதேவனாலும் முடியாது.
* தன் உழைப்பால் தேடிய பொருள் உயர்வானது. தந்தையால் வந்த செல்வம் மத்திமம். சகோதரனுடைய உழைப்பில் வாழ்வது மோசமானது. மனைவி வீட்டிலிருந்து வந்த வரதட்சணையோ மோசத்தில் எல்லாம் மோசமானதாகும். 
-வாரியார்

Tuesday, November 13, 2012

முன்வந்து உதவி செய் ,,,,காஞ்சி பெரியவர்

* மனதாலும், இனிமையான பேச்சாலும், உடம்பாலும், பணத்தாலும் நல்ல செயல்களை தினமும் செய்.
* நம்மிடம் உள்ள பணமெல்லாம் எப்போதும் நம்முடையதல்ல என்ற நினைவு இருக்கட்டும்.
* அனைத்து செயல்களிலும் அளவறிந்து நிற்கிற மனநிலை வந்தால் தான் அமைதி உண்டாகும்.
* நமது சொந்த விருப்பங்களுக்காக செயல்படுகிறோம் என்ற நிலையை மாற்றி, நமக்கு எவ்விதமான லாபமும் தராத செயல்களில் ஈடுபட வேண்டும்.
* தூய்மையோடு மகிழ்ச்சியாக இருப்பது தான் மங்களம். எங்கே நாம் போனாலும் அங்கே மகிழ்ச்சியை உருவாக்க வேண்டும்.
* அவரவரும் உரிய கடமையை பக்தியோடு பின்பற்றினால் தான் மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை ஏற்பட்டு ஞானம் கைகூடும்.
* ஒழுக்கம் இருந்தால், அப்புறம் ஒவ்வொரு துறையிலுமே ஒழுக்கத்தினால் உண்டாகிற அழகும் ஏற்பட்டு விடுகிறது.
* துன்பம் இருக்கும் இடத்திற்கு நாமாக முன்வந்து சென்று, அந்தத் துயரத்தை நீக்க நம்மால் முடிந்த செயலை செய்ய முயல வேண்டும். இது மிகப்பெரிய தர்மமாகக் கருதப்படுகிறது

Monday, November 12, 2012

தெய்வத்திற்கு மிஞ்சிய சக்தியில்லை விவேகானந்தர்

* மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள் புரிந்தாலு<ம் சரி, புரியாமல் போனாலும் சரி... உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போவதாக இருந்தாலும் சரி... உண்மை என்னும் பாதையிலிருந்து மட்டும் அணு அளவு கூட மாறிச்சென்று விடாதே.
* உங்களுக்குள்ளேயே தெய்வீகத் தன்மை ஒளிந்து கிடக்கிறது. அதை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது என்பதும் தான் முக்கியம். 
* "உதவி' என்ற சொல்லை உனது உள்ளத்திலிருந்தே விலக்கிவிடு. நீ உதவி செய்ய முடியாது. அப்படி நீ நினைப்பது தெய்வத்தைக் குறை கூறுவதாகும். தெய்வத்தின் விருப்பத்தினால் தான் நீ இங்கு இருக்கிறாய். தெய்வத்தை வழிபடத்தான் முடியுமே தவிர, தெய்வத்துக்கு உதவி செய்வதாக கூறுவது தவறாகும். தெய்வத்திற்கு மிஞ்சிய சக்தியில்லை.

Thursday, November 8, 2012

இறைவன் உனது எஜமானன்..... கிருபானந்த வாரியார்

* கண்ணுக்கு தெரிந்த உலகிற்கு சேவை செய்வதோடு, கண்ணுக்கு தெரியாத கடவுளுக்கும் சேவை செய்ய வேண்டும்.
* கடவுளை வணங்காவிட்டால் தண்டிக்கமாட்டார். வணங்கினால் உனக்கு நன்மை கிடைக்கும். ஆற்றில் குளித்தால் நன்மை ஆற்றுக்கல்ல, அதேபோல் கடவுளை வணங்கினால் நன்மை கடவுளுக்கல்ல.
* பலபேர் கூடி கையெழுத்திட்ட விண்ணப்பத்தை அதிகாரிகள் உடனடியாக கவனிப்பர். அதேபோல் பலபேர் கூடி கூட்டுப்பிரார்த்தனை செய்தால், அந்த விண்ணப்பத்தைக் கடவுள் உடனே கவனிப்பார்.
* இறைவன் எப்போதும் நமக்கு அருளைத்தான் அளிக்கிறார். சில நேரங்களில் வரும் சோதனைகள் துன்பம்போல் தோன்றும். அது நம்முடைய அறியாமையால் ஏற்படுகிறது.
* இறைவனை எஜமானாகக் கருதி, சேவை செய்வதில் அனுமானைப் போல் நடந்து கொள்ள வேண்டும்.
* கடவுள் உணர்வு இல்லாதவன் எவ்வளவு பெரிய அறிஞனாக இருந்தாலும் அவன் விலங்காகத்தான் கருதப்படுவான்.

Monday, November 5, 2012

மன உறுதியுடன் இருங்கள்

*    ஒவ்வொரு மனித இதயத்தின் உள்ளும் மிக ஆழத்தில் ஆதிஅந்தமில்லாத இறைவன் ஒளிந்து கொண்டிருக் கின்றான். அவனை உணர்ந்த வனே உண்மையை உணர்ந்தவன் ஆவான்.
*    தன்னுடைய பலவீனங்கள், குற்றங்கள், பாவங்கள் எல்லா வற்றையும் வேறொருவரின் மேல் சுமத்துவது மனித இயல் பாக இருக்கிறது. நம்முடைய தவறுகளை உணர மறுப்பது தான் இதற்குக் காரணம். 
*    எத்தனை நல்ல நூல்களை வாசித்தாலும் நம்மால் தூய வராக முடியாது. உண்மையை நாம் உணர வேண்டு மானால், தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அப்போது மெய்யுணர்வு நம்முள் மலரத் தொடங்கும். 
*    உங்களுக்குப் பிடித்ததை கடைபிடிப்பதுபோல, மற்றவர்களும் அவரவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும் சுதந்திரத்தைக் கொடுங்கள். ஏனென்றால், சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை. 
*    எந்த விஷயத்தையும் நன்கு ஆய்ந்து பாருங்கள். கொண்ட கொள்கை மற்றும் குறிக்கோளில் மனவுறுதி யுடன் இருங்கள்.
                                                            விவேகானந்தர்

Saturday, November 3, 2012

ஆன்மிக சிந்தனைகள் »பாரதியார்


தைரியம் தரும் பக்தி
அக்டோபர் 25,2011,
11:10  IST
* தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே உலகமே வியக்கும் வண்ணம் ஒருவனுக்கு எதிர்பாராத விதத்தில் பயன்கள் கிடைக்கும்.
* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி, பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே தெய்வம் அருள் புரியும்.
* நல்ல விளக்கிருந்தாலும் பார்க்க கண் வேண்டும். அதேபோல் நாலுபேர் துணையிருந்தாலும் நல்ல முறையில் வாழ சுயபுத்தி வேண்டும். 
* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன், பிற உயிர்களைத் திருத்த அதிகாரம் பெறமாட்டான்.
* வெறும் சொல்லுக்கு மகிமையில்லை. அச்சொல் உள்ளத் துணிவை உணர்த்துமாயின் அதற்கு மகிமையுண்டு.
* உண்மையான பக்தி இருந்தால் மனதைரியம் கிடைக்கும், மனதைரியம் இருந்தால் தெய்வ பக்தி ஏற்படும். அத்துடன், இந்த பிறவியிலேயே தெய்வநிலை பெறலாம்.
* கடவுளிடமும் அவருடைய படைப்பாகிய அனைத்து ஜீவன்களிடமும் என்றும் மாறாத அன்பு செலுத்துவதே பக்தி. அதுவே முடிவான சாதனமாகும்.
- பாரதியார்