Friday, October 26, 2012

nellaikkannan speech


திருமணத்தின் போது செய்யப்படும் சடங்கு முறைகளும் அவற்றின் சிறப்பும்!


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். இத்தகைய திருமணத்தில் பல்வேறு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு அவற்றில் முக்கியமான சில...
காசி யாத்திரை: மணமகன் துறவு பூண எண்ணி எளிய ஆடை உடுத்தி, விசிறி, குடை ஏந்தி, மரப்பாதுகை அணிந்து காசியை நோக்கிச் செல்லத் துவங்குகின்றான். அப்போது மணப்பெண்ணின் தந்தை அவன் முன் வந்து இல்லறவாழ்வின் சிறப்பையும், அதன் அவசியத்தையும் விரிவாகச் சொல்லி, அவன் இல்லறத்தை மேற்கொள்ள, தன் மகளையும் துணைநலமாக, தருவதாக வாக்களித்து, மணமகனை அழைத்து வருவது காசி யாத்திரையாகும்.
மாலை மாற்றல்: மணப்பெண்ணும் மணமகனும் தம்தம் தாய்மாமன் தோள்களில் அமர்ந்து, ஒருவர் கழுத்தில் ஒருவர் மாலை மாற்றும் நிகழ்ச்சி இது. கணவன் மனைவி என்கிற உறவு, ஈருடல் ஓர் உயிர் என்று இரண்டறக் கலக்கும் நிலையில், ஒருவர் அணிந்த மாலையை மற்றவர் அணிய வைப்பது மாலை மாற்றல்.
ஊஞ்சல் அமர்த்தி லாலி பாடுதல்:  இந்நிகழ்ச்சியில் ஊஞ்சல் சங்கிலி, இல்வாழ்க்கைக்கு, இறைவனிடத்தில் ஏற்படுத்திய தொடர்பாகவும், ஆடும் ஊஞ்சல், மேடு பள்ளம், சலனம் நிறைந்த வாழ்க்கைப்பாதையை இருவரும் இணையாக அமைதியாக உறுதியாகக் கடக்க வேண்டிய முறையையும் உருவகப்படுத்துவதாகும்.
மாங்கல்ய தாரணம்: தேர்ந்து எடுக்கப்பட்ட புனித நேரத்தில், மங்கள நாதஸ்வரமும் மேளமும் முழங்க கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள மணப் பெண்ணை நேராக நோக்கி அவள் கழுத்தில் மங்கள தாலியைக் கட்டுகின்றான். முதல் முடிச்சை மணமகனும் மற்ற இரண்டை அவன் சகோதரியும் போட மாங்கல்ய தாரணம் நடைபெறுகின்றது.
கைப்பிடித்தல் (பாணிகிரஹணம்): மணமகன், விரல்கள் மேல் குவிந்த பெண்ணின் வலது கையை தனது வலது கையால் எல்லா விரல்களும் சேர்ந்திருக்கும் வண்ணம் பிடிப்பதே பாணிகிரஹணம் ஆகும் நான் முதுமையடைந்த பின்னும் உன்னை கைவிடமாட்டேன் என மணமகன் மணமகளிடம் கூறுவதாகும்.
ஸப்தபதி (ஏழடி வைத்தல்): ஏழடி எடுத்து வைக்கும் பெண்ணே, உனக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் உன் முதலடியில் அன்னமும், இரண்டாவதில் தேஹபுஷ்டியும் மூன்றாவதில்  விரத அனுஷ்டானமும், நாலாவதில் சுகமும், ஐந்தாவதில் பசுக்கள் விருத்தியும், ஆறாவதில் ருதுக்களால் அனுகூலமும், ஏழாவதடியில் ஹோமம்  செய்யும் ஆற்றலையும் அளிக்க உன்னை பின் தொடர்வாராக.
நலுங்கிடல்: திருமண தினத்தின் மாலை, மணமக்கள் மனசாந்தியும் சுகமும் பெறும் வகையில் கேளிக்கையும் குதூகலமும் பொங்கும் நிகழ்ச்சியே நலுங்கிடலாகும். மணமகள் மணமகனை, தன்இனிய பாட்டினால் நலுங்கிட அழைக்கின்றாள். சுற்றமும் நண்பரும் சூழ சிரிப்பும் கேலியும் நிறைந்து எல்லோரையும் மகிழ்விக்கும் நிகழ்ச்சி நலுங்கிடல் ஆகும்.

Thursday, October 25, 2012

படித்தவர்களுடன் பழகுங்கள்


படித்தவர்களுடன் பழகுங்கள்
செப்டம்பர் 08,2009,
15:31  IST
* அகம்பாவத்தை வெற்றி கொள்வது கடினமான செயல். அதில் வெற்றி பெற வேண்டுமானால் பல ஆண்டு முயற்சி தேவை. இரவுபகலாகப் புத்தகங்களைப் படித்து ஒப்பித்துப் பலவருடம் போராடி ஒரு பல்கலைப்பட்டம் பெறுகிறீர்கள். ஆன்மிகப் பரீட்சை இதைவிடக் கடுமையானது. இந்தப் பரீட்சையில் வெற்றி பெறுவதால் பிறப்பு, இறப்பு தொடரிலிருந்து விடுதலை கிடைக்கும். நிலையான மகிழ்ச்சி கிடைக்கும்.


* சிலர் மனதைப் பஞ்சுப்பொதி போல வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஞானம் சிறு நெருப்புப்பொறியாக பற்றினாலே வெற்றி நிச்சயம். சிலர் காய்ந்த சுள்ளிபோல வைத்திருக்கின்றனர். அதற்கு சிறிது நாளாகும். ஆனால், வெற்றி உறுதிதான். சிலர் ஈரமான விறகுக்கட்டாக மனதை வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஞானத்தீ பட்டாலும் ஈரத்தின் தன்மையால் அணைந்து விடுகிறது.


* கற்றவர்களிடமும், ஆன்மிக அனுபவம் கொண்டவர்களிடமும் மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள். அப்போது, நாளடைவில் உங்கள் மனமும் புலன்களும் நேர்த்தியாக மாறும். தூயபஞ்சினைப் போல லேசாகி விடும். ஆனால், உலகில் பெரும்பாலானவர்கள் தங்கள் மனங்களையும், புலன்களையும் ஈரவிறகைப் போலவே வைத்து இருக்கிறார்கள். அதனால், கொழுந்து விட்டு எரியும் ஞானத்தீ கூட அஞ்ஞானம் என்னும் ஈரத்தால் அணைக்கப்பட்டு விடுகிறது. 

Wednesday, October 17, 2012

பணிவே சிறந்த நற்பண்பு

* யாராவது நம்மைப் புகழ்ந்தால் மகிழ்ச்சி அடையாதீர்கள். அதேபோல, இகழ்ந்து பேசினாலும் கவலை வேண்டாம். புகழையும், பழியையும் சமமாக எடுத்துக் கொண்டால் மனதில் அமைதி நிலைத்திருக்கும்.
* குடும்பவாழ்வில் ஈடுபடுவதே பிறருக்கு உதவி செய்வதற்காகத் தான். நிழல் தரும் மரம் போல மற்றவர்களுக்கு பயனுடையவர்களாக வாழுங்கள்.
* பணிவுடன் இருப்பதே நற்பண்புகளின் உயிர்நாடி. பணிவில்லாத மனிதன் வாழ்வில் உயர்வைப் பெற முடியாது.
* மரணம் எப்போது வேண்டுமானாலும் நமக்கு நேரலாம். அதற்குள் நல்ல அறங்களைச் செய்து மறுமைக்கும் நன்மையைத் தேடுங்கள்.
* பசுவைப் போன்ற நல்ல மனிதர்களிடம் பழகுங்கள். பாம்பு போன்ற விஷத்தன்மை கொண்டவர்களை விட்டு விலகி இருங்கள்.
* மனதில் நல்ல உயர்ந்த சிந்தனைகள் மலர வேண்டுமானால் அன்பும், அருளும் நிறைந்த தூய உணவை மட்டும் உண்ணுங்கள். 
வாரியார்

Sunday, October 14, 2012

சாம்ராஜ்யத்தின் சொந்தங்கள்

* இறைவன் நீங்கள் கேட்கும் முன்பே உங்களுக்கு எது தேவை என்பதை தந்தை ஸ்தானத்தில் இருந்து அவன் அறிவான்.
* குழந்தை போல் எவர் தன்னைப் பணிவாக தாழ்த்திக் கொள்கிறாரோ அவரே பரலோகத்தில் தலைசிறந்தவராய் இருப்பார்.
* கவலைப்படுவதன் மூலம் உங்களில் ஒருவராவது ஒரு முழமேனும் உயர்ந்து விட முடியுமா?
* ஏழைகளே நீங்கள் ஆசீர்வாதத்திற்கு உரியவர்கள். ஏனெனில் ஆண்டவனின் சாம்ராஜ்யம் உங்களுக்குச் சொந்தமானது.
* உங்கள் நற்செயல்களைக் கண்டு விண்ணுலகில் உள்ள உமது தந்தையைப் போற்றும்படி உங்கள் ஒளி அவர்கள் முன் ஒளி வீசட்டும்.
* சின்னஞ்சிறு குழந்தைகள் என்னிடம் வர வழி விடுங்கள். அவர்களைத் தடை செய்யாதீர்கள். 
* உங்களிடம் உள்ளதை ஏழைகளுக்குக் கொடுங்கள். சொர்க்கத்தில் உங்களுக்குச் செல்வம் சேரும்.
* பாடுபட்டுக் கடுஞ்சுமையைத் தாங்கிக் கொண்டிருப்போரே நீங்கள் அனைவரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு ஓய்வு தருகிறேன்.
இயேசுநாதர்

Wednesday, October 10, 2012

ஏற்றத்தாழ்வு நமக்கு இயற்கை

* தெய்வீக வழியில் நடப்பவன் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.. வயது தளர்ந்த காலத்தில் மற்றவர்கள் படும் துன்பத்தைச் சிந்தித்துப் பார்த்து வாழ வேண்டும்.
* சுகமாக வாழும் போதே துக்கத்தையும் பழகிக் கொள்ளுங்கள், ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும் என்பதை உணரவேண்டும்.
* வெயில் அதிகமாக இருந்தால் மழை வரும். அது போல் அநீதி அதிகமானால் தான் மகான்கள் அவதரிப்பார்கள்.
* ஞானிகளின் கோபம் மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்துவிடும், ஆனால், பாமரர்களின் கோபம் பிறவி தீரும் வரை மறையாது. எனவே, கோபத்தை அறவே விடுங்கள்.
* உருவத்தில் மனிதனாகவும், குணத்தில் மிருகமாகவும் இருக்கக்கூடாது, மனிதத் தன்மையில் இருந்து தெய்வத்தன்மை பெற வேண்டும். அது முடியாவிட்டால் மிருகத்தன்மைக்காவது போகாமல் இருக்க வேண்டும்.
* எதிர்ப்பு இருந்தால் தான் உலகம் நம்மை அறியும். அதற்காக வருந்தாதீர்கள். நமக்கு வேண்டாதவரும் வாழவேண்டும் என்பதுதான் நமது பண்பாடு.
- வாரியார் 

Sunday, October 7, 2012

அமைதிக்கு வழி வகுப்போம்

* ஒரு காலத்தில் இருளாக இருந்த நீங்கள் இப்போது கடவுளுடன் இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக எப்போதும் வாழுங்கள்.
* ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், ஒளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொண்டு வீண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்குள் ஒளி வீசித் திகழ்கின்றனர்.
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதை (உடனே) செய். நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல்புரிவதுமில்லை, சிந்தனை செய்வதுமில்லை.
* கோபப்பட்டாலும் பாவம் செய்யாதிருங்கள். படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாயிருங்கள். உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு<, உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.
* சிறிது காலத்துன்பங்களுக்கு பின் கடவுள் உங்களைச் சீர்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்.
* வாழ்க்கையில் எப்போதும் அமைதிக்கு வழி வகுப்பவற்றை தேடுவோம். ஒருவர் மற்றொருவருக்கு வளர்ச்சி தருபவற்றை செய்ய முயற்சிப்போம்.
-பைபிள் 

Tuesday, October 2, 2012

ஆன்மிக சிந்தனைகள் »மகாத்மா காந்தி


பொறுமைக்கு பலன் நிச்சயம்
செப்டம்பர் 25,2011,
10:09  IST
* கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் உண்டு என ஏற்றுக்கொண்டால் நன்மை நமக்குத் தான். 
* பிரார்த்தனை என்பது மனிதனை கடவுளுடன் சேர்க்கும் பாலமாகவும், பேசுவதற்குரிய வாய்ப்பாகவும் இருக்கிறது.
* உண்மையான பிரார்த்தனைக்கு கடவுள் செவி சாய்க்க மறுப்பதில்லை. பெரிய செயலையும் எளிதாக செய்யும் ஆற்றலை கடவுளிடம் இருந்து ஒருவரால் பெற முடியும். 
* மனதை ஒருமுகப்படுத்தி பிரார்த்தனையில் ஈடுபட பொறுமை அவசியம். ஆழமான பக்தி கொண்டவர்கள் எளிதாக கடவுள் சிந்தனையில் ஈடுபடுவர். மற்றவர்கள் பொறுமை பெற சில காலம் ஆனாலும், முயற்சியை கைவிடக் கூடாது. பொறுமையுடன் செய்யும் முயற்சிக்கு பலன் நிச்சயம்.
* பிறர் மீது அன்பு காட்டுபவர், கடவுளுக்கு பிடித்தமானவர். அன்பு நெஞ்சம் கொண்டவர் கடவுளின் அருளை எளிதாகப் பெற்றுவிடுவார். 
- காந்திஜி 

Monday, October 1, 2012

எது செய்தாலும் பலன் நமக்கே!

* கடவுள் பிரம்மாண்டமான பெரிய வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் மையம், 
எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்து
இருக்கிறது. அந்த மையம் தான் மனிதன். 
* நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்
படுத்த ஒரே வழி, மற்றவர்கள் தங்கள் 
தெய்வீக இயல்பை வெளிப்படுத்தும்படி அவர்களுக்கு உதவி செய்வது தான்.
* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மக்களுக்குச் சேவை 
செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை 
செய்பவனாகிறான்.
* தன்னலமற்ற மனப்பான்மை தான் ஆன்மிக வாழ்வின் அடிப்படை. இதை கொண்டே ஒருவரின் ஆன்மிகத்
தேடுதலை சோதிக்க வேண்டும். சுயநலம் 
இல்லாதவனே, ஆன்மிக வாழ்க்கையைப் 
பெற்றவனாகிறான். 
* தீமையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்
களுக்கும் தீமை செய்கிறோம். நன்மையைச் 
செய்வதனால், நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்து கொள்கிறோம். 
- விவேகானந்தர்