Wednesday, August 15, 2012

குலதெய்வ வழிபாட்டு முறை



வணக்கம் நண்பர்களே நமது தளத்தை படித்துவிட்டு பல பேர் அவர்களின் குலதெய்வத்திற்க்கு சென்று வருகிறார்கள். அவர்கள் பிரச்சினை படிப்படியாக குறைந்து வருவதாகும் எனக்கு தகவல் தந்தார்கள். நீங்களும் இன்னும் சென்று வரவில்லை என்றால் கூடிய விரைவில் சென்று வந்துவிடுங்கள். நீங்கள் செல்வதற்க்கு பல தடைகள் ஏற்படலாம். அவற்றை மீறி நீங்கள் சென்றுவிட வேண்டும்.

கடந்த வாரம் ஒரு நண்பர் எனக்கு போன் செய்தார் அவர் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வரும் போது சிறு விபத்து ஏற்பட்டுவிட்டது என்று சொன்னார். நான் உங்களிடம் இதைப்பற்றி சொல்லிருக்க வேண்டும் என்ன காரணம் என்று தெரியவில்லை எழுதமுடியவில்லை. 

உங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது அந்த தெய்வத்திற்க்கு என்ன செய்ய வேண்டும் அதாவது அதற்கு உகந்த பூஜை பொருட்கள் என்ன என்று தெரிந்துகொண்டு செல்ல வேண்டும். சில குலதெய்வங்கள் பலி கேட்கும். அப்படி பலி கொடுக்கும் தெய்வம் என்றால் கண்டிப்பாக நீங்கள் பலி கொடுக்க வேண்டும். சில தெய்வங்கள் ஆடு பலி கொடுப்பார்கள் உங்களுக்கு அது செய்யமுடியவில்லை என்றால் கோழியை பலியாக கொடுத்துவிட்டு நீங்கள் தரிசனம் செய்துவிட்டு வரலாம். சில குலதெய்வங்கள் சாராயம் கூட கேட்கும் அந்த மாதிரி குலதெய்வங்களும் இருக்கின்றன அதை நீங்கள் செய்துவிட்டு தான் வரவேண்டும்.

குலதெய்வத்திற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியாது. இந்த தளத்தை படிப்பவர்கள் அதிகம் பேர் இளைஞர்களாக இருப்பதால் அவர்களின் குலதெய்வத்திற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது உங்கள் தந்தை அல்லது தாத்தாவிடம் கேட்டால் அவர்கள் உங்களுக்கு சொல்லுவார்கள் அப்படி இல்லை என்றால் உங்கள் சொந்த ஊரில் இருக்கும் பெரியவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லிவிடுவார்கள்.

நாம் பல கோவிலுக்கு சென்று வருவோம் அங்கு நமது பேருக்கு அர்ச்சனை மட்டும் செய்துவிட்டு வருவோம் ஆனால் குலதெய்வத்தின் கோவிலுக்கு செல்லும்போது பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு வரவேண்டும். எல்லா குலதெய்வத்திற்க்கும் அது தான் வழக்கம். 

நண்பர்களே நீங்கள் இந்த தகவலை உங்கள் நண்பர்களின் குடும்பத்திற்கும் சொல்லுங்கள் உங்கள் பக்கத்து வீட்டு குடும்பத்திற்க்கும் சொல்லுங்கள் தெய்வத்தின் அருள் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள அது உதவும். 

நான் பலபேருக்கு ஆன்மிக சேவை செய்ததால் தான் என் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள முடிந்தது. என்னால் முடிந்தவரை அனைவருக்கும் பல நல்ல தகவல்களை தந்து இருக்கிறேன். இன்னும் பல நல்ல தகவல்கள் தருவதற்க்கும் இறைவனிடம் வேண்டிக்கொண்டு இருக்கிறேன்.

எனது எண்ணம் எல்லாம் அடுத்தவரை எப்படியாவது வாழ்க்கையில் மேன்மை நிலைக்கு கொண்டு வந்துவிடவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருக்கின்றது. நீங்கள் இந்த தகவல்களை எல்லாம் முடிந்தவரை அடுத்தவர்களிடம் சொல்லுங்கள் அப்பொழுது பலனை அனுபவிப்பீர்கள்.

No comments: