Thursday, August 23, 2012

இளமையில் உழைப்போம்

* தேனீயைப் போலவும், எறும்பைப் போலவும் உழைத்து உண்ண வேண்டும். அது உங்களுக்கு அமைதியையும், அன்பையும் தரும். 
* இளமையில் வளையாத மூங்கில் கழைக்கூத்தாடியின் காலில் மிதிபடுகின்றது. இளமையில் வளைந்த மூங்கில் அரசனின் கையில் வில்லாகப் பூஜிக்கப்படுகின்றது. அதனால், இளமையில் நம்மை வளைத்து உழைத்தால் பின்னாளில் மகிழ்ச்சியாக வாழலாம். 
* நாவின் சுவைக்கு அடிமையாகி நல்ல உணவு வகைகளை எங்கே எங்கே என்று தேடி அலையாதீர்கள். மனம் வாடி ஏங்காதீர்கள். இறைவன் அளந்த படியை ஏற்று கிடைத்ததை உண்டு வாழ்வில் திருப்தி காணுங்கள்.
* சுகமாக வாழும் போதே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மனித வாழ்வில் உயர்வும் தாழ்வும் மாறி மாறி வரக்கூடியவை என்பதனை மறக்காதீர்கள். 
* பிள்ளைகள் தாய் தந்தையரின் கண்ணீரைத் துடைக்க வேண்டுமே தவிர, அவர்களின் துன்பத்தை அதிகப்படுத்தி கண்ணீரில் மூழ்கச் செய்யக்கூடாது. 
* எங்கும் நிறைந்த இறைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீரினாலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். கடவுளை வழிபாடு செய்வதற்கு அன்பும் ஆசாரமும் இரு கண்கள் போன்றவையாகும். 
* தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல, உள்ளம் உருகினால் அதில் இறைவன் ஒன்றி விடுவான். 
-வாரியார்

No comments: