Sunday, August 12, 2012

தீமையாய்த் தோன்றுகின்ற அனைத்தில்இருந்தும் விலகுங்கள்.



முகத்தைப் பார்த்து கணிக்காதே!
ஆகஸ்ட் 02,2010,
12:08  IST
* தீயதை நல்லதென்றும், நல்லதை தீயதென்றும் சொல்லுபவர்களுக்குத் துயரம் தான் மிஞ்சும். தீமையாய்த் தோன்றுகின்ற அனைத்தில்இருந்தும் விலகுங்கள்.
* விருந்து வீட்டிற்குப் போவதைவிடத் துக்க வீட்டிற்குப் போவது நல்லது. ஏனெனில் அதுதான் எல்லா மனிதர்களின் முடிவு.
* அறிவாளியின் இருதயம் துக்கவீட்டில் இருக்கிறது. ஆனால், முட்டாளின் இருதயமோ கேளிக்கை வீட்டில் இருக்கிறது.
* முகத்தோற்றத்தைக் கொண்டு முடிவு செய்யாதே. நேர்மையான நியாயத்தைப் பார்த்துத் தீர்ப்பு சொல். 
* தீமையிலிருந்து தீமைதான் புறப்படும். தீமையைச் செய்து துன்புறுவதைவிட நன்மையைச் செய்து துன்புறுவதே மேல்.
* திடீர் என்று எந்த மனிதன் மீதும் கைவைத்து விடாதே. மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே. உன்னைத் தூயவனாகக் காப்பாற்றிக் கொள்.
* துன்மார்க்கன் தன் மமதையினால் எளியவனை வாட்டுகிறான். தாங்கள் கற்பிக்கும் தந்திர மோசங்களில் அவர்களே அகப்பட்டுக் கொள்வார்கள்.
* கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், கண்டடைவீர்கள். தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.
-பைபிள் பொன்மொழிகள்

No comments: