சனி, 16 மே, 2015

கண்ணை கவரும் கோடியக்கரை

video

செவ்வாய், 10 மார்ச், 2015

video
எங்கள் தேசம் இந்தியா 

சனி, 29 நவம்பர், 2014

பைரவர் சாமியின் முக்கியத்துவம்

பைரவர் சாமியின் முக்கியத்துவம்
பைரவரை சிவனுடைய ஒரு அம்சமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக பைவரர் எல்லைத் தெய்வமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது காவல் தெய்வமாக. மூகாம்பிகை கோயில்களுக்குப் போனால் வீரபத்ரசாமிகள் வலப்பக்கத்தில் இருப்பார். அவர் ஒரு எல்லைத் தெய்வம். அம்பாளை வணங்கிவிட்டு வரும்போது காவல் தெய்வமான வீரபத்ரசாமியை வணங்குவார்கள். அதேபோல, பழமையான சிவலாயங்களிலெல்லாம் நோக்கினால் பைரவர் இருப்பார். நாய் வாகனத்துடன் நின்ற கோலம், வதுவான கோலத்தில்தான் இருப்பார். இது என்னவென்றால், காவலாக இருப்பேன் என்பதைச் சொல்கிறது.
காத்து, கருப்பு அண்டாமல் இருப்பது. போட்டி பொறாமை, வயிற்றெறிச்சலால் வரக்கூடியதை கழிக்கக்கூடியதும் பைரவருக்கு உண்டு. அந்தக் காலத்தில் வழித்துணைக்கு பைரவரை வணங்கிவிட்டுத்தான் எல்லோரும் கிளம்புவார்கள். ஏனென்றால், அப்பொழுதெல்லாம் மாட்டு வண்டிப் பயணம், நள்ளிரவுப் பயணமெல்லாம் அதிகம் இருக்கும். அதற்காக அதுபோலச் செய்வார்கள். தேங்காயை உடைத்து கண் இருக்கும் முடியை எடுத்து அதில் ஐந்து விதமான எண்ணெய்களை விட்டு அதில் திரிபோட்டு விளக்கேற்றுவார்கள். இதுபோல பைரவருக்குச் செய்யும் போது, ஏழரைச் சனியால், அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய தோஷம் எல்லாம் விலகும் என்று சொல்வார்கள். ஆகமொத்தத்தில் பைரவர் என்பவர் விசேஷமானவர்.
இதுதவிர, ஜுர பைரவர் என்றெல்லாம் இருக்கிறார். ஜுரம் வந்தால் அவரை வணங்கிவிட்டு வந்தால் ஜுரம் போய்விடும். நிறைய பாடல் பெற்ற தலங்களில், பண்ருட்டி பக்கத்தில் திருவதிகை என்று ஒரு ஊர் இருக்கிறது. வீரதானேஸ்வரம் அது. அங்கு ஒரு பைரவர் இருக்கிறார். இப்படி ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு பைரவர் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. இதுபோல பைரவரை வணங்கும் போது நோய் விலகும், எதிர்மறை எண்ணங்கள் விலகும்.
சனியால், ஏழரைச் சனியால், அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய இடர்பாடுகளுக்கு பைரவர் வழிபாடு தைரியத்தையும், எதிர்மறை எண்ணங்களை முழுமையாக வேரறுக்கக்கூடியவர் பைரவர். அதனால் பைரவரை வணங்கும் போது எல்லா வகையான சக்தியும் கிடைக்கும்.

புதன், 15 அக்டோபர், 2014

இரவு பகலாகிறது. பகல் இரவாகிறது

* இரவு பகலாகிறது. பகல் இரவாகிறது. இரண்டையுமே திறந்த மனதுடன் பாராட்டுங்கள்.
* தன் குறையை அறியத் தொடங்கி விட்டால், மற்றவர்களைப் பற்றிய பேச்சுக்கே நேரம் இருக்காது.
* யாரையும் விரோதியாக கருதாதீர்கள். ஏனென்றால் பகையுணர்வால் தீமை மட்டுமே விளைகிறது.
* பகைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால் அன்பு செலுத்துவது ஒன்றே சரியான தீர்வு.
* உணர்வுடன் இருங்கள். அதே சமயத்தில் உணர்வில் இருந்து விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.
- புத்தர்

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

வாழ்த்துவதால் வருமே வளமும் நலமும்

ஜப்பானில் “கோய்’ என்றொரு மீன் வகை உள்ளது. இந்த மீன் விசித்திரமான இயல்புடையது. நீங்கள் இந்த மீனை ஒரு சிறிய தொட்டியில் வைத்து வளர்த்தால் அது அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று அங்குலம் மட்டுமே வளரும். 
சற்று பெரிய தொட்டியில் வளர்த்தால் கோய் மீன் 8 அல்லது 10 அங்குலம் வரை வளரும். சிறு குட்டையில் கோய் மீன்களை வளர்த்தால் அது ஒன்று முதல் ஒன்றரை அடி வரை வளரும். கோய் மீனைக் குளத்தில் வளர்த்தால் இரண்டரை அடி முதல் மூன்றடி வரை வளரும். மிகப் பெரிய ஏரியில் கோய் மீனை வளர்த்தால் அது ஐந்து அடி வரை வளரும். 
மனிதர்களும் கோய் மீனைப் போன்றவர்கள்தாம். சிறியவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் வளர முடியாமல் போய்விடும். பெரியவைகளைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கவேண்டும். அப்போததான் வளர முடியும். உங்களது சிந்தனை உயர உயர உங்களது செயல்பாடும் மேம்பாடு அடையும். உங்களது மதிப்பும் உயர்ந்து கொண்டே செல்லும். 
மனிதர்கள் தங்களை பற்றிக் குறைவாகவே மதிப்பிடுகிறார்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. சிறிய தொட்டியில் வளர்க்கப்படும் கோய் மீன்கள் போல மனிதர்கள் தங்களைக் குறுக்கிக் கொண்டு விடுகினறனர். இதனால் அவர்களால் அவர்களது முழு ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. இதற்கு முக்கிய காரணங்கள் யாவை? இந்தக் காரணங்களைக் கண்டறிந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய முடியும். 
பொதுவாக எதிர்மறைச் சிந்தனைதான் அதிகமாகக் காணப்படுகின்றது. 
ஒரு குண்டான மனிதர் சாப்பிட உட்காரும்போதே “நான் சாப்பிடுவதெல்லாம் கொழுப்பாக மாறிவிடுகிறது.’ என்று அலுத்துக் கொள்ளுகிறார். 
ஒரு குடும்பத் தலைவி காலையில் எழும்போதே “இந்த வீட்டில் எங்கு பார்த்தாலும் குப்பையாகத்தான் கிடக்கிறது. ஒருநாளும் குப்பைகள் குறைவதாகத் தெரியவில்லை’ என்று அலுத்துக் கொள்கிறார். 
பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும் மாணவி தனத தந்தையைப் பார்த்து, “அப்பா, கணக்கில் நான் குறைந்த மதிப்பெண்கள்தான் எடுப்பேன் போல் தெரிகிறது. தேர்வில் நான் தோல்வி அடைந்து விடுவேன் என்று அஞ்சுகிறேன்’ என்று சொல்கிறார். 
வானிலை அறிவிப்பாளர் “இன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு 20% மட்டுமே உள்ளது. வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும்’ என்று குறிப்பிடுகிறார். 
இவை யாவும் எதிர்மறையான எண்ண அலைகளாகும். ஆற்றல் மிக்க பலர் தங்களது ஆற்றலை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் குடத்தில் இட்ட தீபங்களாக உள்ளனர். குன்றிலிட்ட தீபங்களாக அவர்களால் பிரகாசிக்க முடியவில்லை. பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், மேல் அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கேலி, கிண்டல் செய்வதால் ஆற்றல்களைப் பலரால் வெளிப்படுத்த முடியவில்லை. 
இதமற்ற சொற்கள் ரணத்தை ஏற்படுத்துகின்றன. தெரிந்தோ, தெரியாமலோ உதிர்க்கப்படுகின்ற வார்த்தைகள் வேதனையை ஏற்படுத்துகின்றன. 
உளவியலாளர்கள், எண்ண அலையின் ஆற்றல் எப்படிப்பட்டது என்பதைத் துல்லியமாக நிரூபிக்க ஒரு சோதனையை மேற்கொண்டனர். 
இரண்டு பசுமைக் குடில்கள் ஒரே மாதிரியாக உருவாக்கப்பட்டன. மண், உரம் போன்றவை ஒரே மாதிரியாக இடப்பட்டன. பசுமைக் குடிலில் சீதோஷ்ணம் சமமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது. இரண்டு குடில்களிலும் தலா 23 விதைகள் ஊன்றப்பட்டன. 
ஒரு பசுமைக் குடிலின் முன் ஒருவர் தினந்தோறும் நின்று கொண்டு “இந்த விதைகள் முளைக்காது, முளைத்தாலும் நிலைக்காது. சீக்கிரமே வீணாகிப்போய்விடும்’ என்றெல்லாம் அவர் வசைமாரி பொழிந்து வந்தார். 
மற்றொரு பசுமைக்குடிலின் முன் மற்றொருவர் நின்று கொண்டு, “இந்த விதைகள் யாவும் அபாரமாக முளைக்கும், அற்புதமாக வளரும், அமோக பலனைத் தரும்’ என்று வாழ்த்துமாரி பொழிந்துவந்தார். இந்த வாழ்த்தும் வசையும் மூன்று வாரங்கள் தொடர்ந்தன. 
வாழ்த்துமாரிக்கு உள்ளான குடிலில் ஊனப்பட்டிருந்த விதைகள் யாவும் முளைத்தன. கம்பீரமாகக் காட்சியளித்தன. 
வசைமாரிக்குள்ளான குடிலில் ஊன்றப்பட்டிருந்த 23 விதைகளில் இரண்டு மட்டுமே முளைத்தன. அவை மிகவும் நலிந்த நிலையில் இருந்தன. 
வாழ்த்து மாரியும் வசைமாரியும் தொடர்ந்தன. வாழ்த்துக்குள்ளான பசுமைக் குடிலில் பயிர்கள் செழித்தோங்கின. வசைமாரிக்குள்ளான பசுமைக் குடிலில் முளைத்திருந்த இரண்டு பயிர்களும் வாடி வதங்கிவிட்டன. 
விதைகளின் நிலையே இப்படிப்பட்டது என்றால் மனிதர்களின் நிலையைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அதனால்தான் வைபவங்களின்போது வாழ்த்துகளைக் கேட்க வேண்டும் என்று சமூக ரீதியாக ஏற்பாடு செய்து வைத்துள்ளனர். 
மனிதர்களிடையே குழப்பம் அடிக்கடி தலை தூக்குகிறது. ஒரு மாணவர் ஒரு பாடத்தில் தேர்ச்சியடையவில்லை என்றால் அவர் மனம் உடைந்து விடுகிறார். என்னால் எல்லா பாடத்திலும் வெற்றி பெற முடியவில்லையே என்றும் வேதனைப்படுகிறார். இந்த வேதனை அவருடைய வளர்ச்சியைத் தடுத்து விடுகிறது. 
“பல பாடல்களில் வெற்றி பெற்றுள்ளேன். ஒன்றில் மட்டும்தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளேன். அடுத்த முறை அதிலும் மகத்தான வெற்றி பெறுவேன்’ என்றும் சிந்திக்கத் தொடங்கி விட்டால் தோல்வியை துரத்தியடித்துவிட முடியும். 
தனி நபர்களின் எண்ண ஓட்டத்தைச் சீர்குலைப்பதில் தெரிந்தோ, தெரியாமலோ ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர்கள், மேல் அதிகாரிகள் ஆகியோரும் ஈடுபடுகிறார். திடமான, தெளிவான ஆக்கப்பூர்வ சிந்தனை இருந்தால் மட்டுமே தோல்வியை அண்டவிடாமல் செய்ய முடியும். 

சனி, 9 ஆகஸ்ட், 2014

பைரவ வழிபாடு

பைரவப் பெருமானை காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும். பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும். இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப் பெருமானை அடையும் சாகாக் கல்வியும், மரணமில்லாப் பெருவாழ்வும் கூட கிட்டும்.

பைரவப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயாசம், அவல் பாயாசம் நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம். பைரவ மூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. 

இதில் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனகாப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. பால், தேன், பன்னீர், பழரசம் அபிஷேகமும் மிக விசேஷம்.

தகட்டூர்


இறைவர் திருப்பெயர் : பைரவநாதசுவாமி. (சிவலோக நாதர்) 
இறைவியார் திருப்பெயர் : (சிவகாமசுந்தரி) 
தல மரம்  : நாவல். 
தீர்த்தம்  : 
வழிபட்டோர்  : 
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - வீழக் காலனைக் (7-12-1). 

தல வரலாறு

 • கோயிலின் மகா மண்டபத்தில் அமைந்துள்ள பீடத்தில் பஞ்சாட்சர யந்த்ரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனவே 'யந்த்ரபுரி' என்ற பெயருமுண்டு. இதுவே தமிழில் (தகடு + ஊர்=) தகட்டூர் என்றழைக்கப்படுகிறது.

குறிப்பு

 • தகட்டூர் என்பது வேதாரண்யத்திற்கு அருகிலுள்ள தலமென்றும்; தற்போதைய தருமபுரி என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

சிறப்புக்கள்

 • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
 • மூலவராக பைரவரே எழுந்தருளியுள்ளார். அவருக்கே உற்சவம் முதலிய அனைத்தும் நடைபெறுகின்றன.
 • பிராகாரத்தில் பின்புறத்தில் சிவலோக நாதரும், சிவகாம சுந்தரியும் எழுந்தருளியுள்ளனர்.
 • இங்கு பிரதான மூர்த்தி பைரவநாத சுவாமியே ஆவார்.
 • கோயில் கருவறை கல் கட்டமைப்புடையது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் 'வாய்மேடு' வந்து விசாரித்து சிறிது தூரம் வந்தால் தகட்டூரை அடையலாம்.

தகட்டூர் பைரவர்

 தகட்டூரிலுள்ள பைரவநாத சுவாமி: கோயிலில் பைரவர் மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். இவரை மூலஸ்தானத்தில் கொண்ட கோயில் தமிழகத்தில் இதுமட்டுமே.

பைரவர் பிறப்பு: அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் சொன்னார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.

பல அட்டூழியங்கள் செய்த அவன் அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். உடனே, பார்வதிதேவி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்' என்ற விஷம்படிந்த அந்த பெண்ணுக்கு "காளி' என பெயர் சூட்டினாள் பார்வதி. காளிதேவி கடும் கோபததுடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம் கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின்னர் அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்கு பாலூட்டினாள். அதன்பிறகு சிவபெருமான் காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுக்குள் புகச்செய்தார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு "பைரவர்' என்று பெயர் வைத்தார்.

நாய் வாகனம்: தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பார்கள். சிலர் நாயை தெருவில் கண்டாலே கல்லெறிவார்கள்.இதுபோல், வாழ்க்கையில் வரும் துன்பத்தையும், இன்பத்தையும் இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாகவே நாய் வாகனம் கருதப் படுகிறது. நாய்க்கு "வேதஞாளி' என்ற பெயரும் இருப்பது குறிப்பிடதக்கது. பெயர்க்காரணம்: இவ்வூருக்கு "யந்திரபுரி' என்ற பெயரும் இருக்கிறது. இதன் தமிழ்ப்பெயரே "தகட்டூர்'. சக்தி வாய்ந்த தெய்வங்களின் முன்பு ஸ்ரீசக்ரம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். இந்தக் கோயிலிலும் ஒரு யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. உற்சவர் சட்டைநாதர் சிலையும் இருக்கிறது.
 
   
  தல வரலாறு:
   
 இலங்கையில் ராவணவதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார். அதற்காக லிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார். அனுமான் லிங்கத் துடன் வரும்போது, அவருடன் மகாபைரவரும் வந்தார். கோயில்களில் பைரவரே காவல் தெய்வம். அக்காலத்தில், கோயிலைப் பூட்டிபைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதை தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்திவாய்ந்தவராக பைரவர் கருதப் பட்டார். அதுபோல் காசி லிங்கத்திற்கு காவலாக பைரவர் அனுமனுடன் வந்துள்ளார். அவருக்கு தற்போதைய தகட்டூர் தலத்தில் குடியிருக்க ஆசைபிறக்கவே, அங்கேயே தங்கி விட்டார். 
   
சிறப்பம்சம்:
   
 அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு பைரவர் மூலவராக அருபாலிக்கிறார். 
  
 பொது தகவல்:
   
 அனுமனுடன் வந்த பைரவர் என்பதால், இத்தலத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோரும், பிரகாரத்தில் கணபதி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். கோயிலுக்கு எதிரேயுள்ள தீர்த்தக்குளம் உள்ளது. குளத்தின் ஒரு கரையில் காத்தாயி, கருப்பாயி சமேத ராவுத்தர் சன்னதி இருக்கிறது. இவரும் இத்தலத்தில் காவல் தெய்வமாக இருக்கிறார்.
 
   
 
பிரார்த்தனை
   
 திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விழங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.


 
   
நேர்த்திக்கடன்:
   
 சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

அமாவாசை குலதெய்வ வழிபாடு


குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது

அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று விளக்குஎண்ணெய் ஊற்றி இரண்டு மண்விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சபழம்த்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இந்த வழிபாடு தொடருந்து செய்து வருவது மிகவும் நல்லது
.
குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை

திங்கள், 14 ஜூலை, 2014

கம்ப்யூட்டரை வைரஸ் பாதித்துள்ளதா என அறிவது எப்படி?இணைய செய்திகள்.............., இன்டெர்நெட். ·...........
வைரஸ் பாதிப்பு பற்றியும் ,விதவிதமான வைரஸ்கள் பற்றியும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். திடிரென புதுப்புது வைரஸ்களும் உருவாக்கப்பட்டு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. சாதாரண வைரசில் துவங்கி மால்வேர் வரை பலவிதமான வைரஸ்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதே போல நம்மை அறியாமல் கம்ப்யூட்டருக்குள் வைரஸ் நுழையவும் பல வழிகள் இருக்கின்றன. இணையத்தில் கொஞ்சம் அசந்து எதாவது வேண்டாத இணைப்புகளை கிளிக் செய்தாலோ அல்லது இமெயிலில் வரும் இணைப்புகளை கிளிக் செய்தாலோ வைரஸ்கள் உள்ளே புகுந்து கொள்ளலாம். பென் டிரைவ் வழியாகவும் வைரஸ்கள் உள்ளே நுழைந்துவிடலாம். மிகவும் கவனமாக இருக்கும் போதே கூட வைரஸ்கள் கண்களில் மண்ணைத்தூவிவிடலாம். கவனக்குறைவாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.
எல்லாம் சரி, விழிப்புணர்வுடன் இருப்பதையும் மீறி வைரஸ் உள்ளே நுழந்து விட்டால் என்ன செய்வது ? முதலில் கம்ப்யூட்டரை வைரஸ் பாதித்திருக்கிறது என அறிவது எப்படி?
நம் உடலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை உணர்த்தும் நோய்க்கூறுகள் இருப்பது போலவே கப்யூட்டரில் வைரஸ் பாதிப்பை காட்டிக்கொடுக்கவும் பலவித அறிகுறிகள் இருப்பதாக வல்லுனர்கள் சொல்கின்ற்னர். இந்த அறிகுறிகளை கவனித்துக்கொண்டிருந்தால் வைரஸ் பாதிப்பை சரியான நேரத்தில் உணர்ந்து நடவடிகை எடுக்கலாம்.

முதல் அறிகுறி
வைரஸ்கள் உள்ளே வராமல் தடுக்க நீங்கள் வைரஸ் தடுப்பு மென்பொருளை பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். பொதுவாக வைரஸ்கள் உள்ளே நுழைந்தால் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் அது பற்றி எச்சரிக்கை செய்யும். ஆனால் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளின் கண்காணிப்பையும் மீறியும் வைரஸ் உள்ளே நுழைந்திருக்கலாம். எனில் உங்கள் கம்ப்யூட்டர் திரென காரணமே இல்லாமல் மெதுவாக இயங்கலாம். கோப்புகளை தேடுவதாக இருந்தாலும் சரி, அல்லது வேறு செயல்பாடுகளுக்கான கட்டளை என்றாலும் சரி கம்ப்யூட்டர் உடனே அதை நிறைவேற்றாமல் அதிக நேரம் எடுத்துக்கொள்ளலாம். இப்படி கம்ப்யூட்டர் வழக்கமான வேகத்தை விட குறைந்த வேகத்தில் இயங்கினால் அது வைரசுக்கான அறிகுறையாக இருக்கலாம்.
அதே போல நீங்கள் ஏதாவது ஐகான்களை கிளிக் செய்தாலும் உடடியாக எந்த பதிலும் இல்லாமல் போகலாம். ஏற்கனவே இன்ஸ்டால் செய்துள்ள சாப்ட்வேர்களும் சரியாக இயங்காமல் பிரச்சனை செய்யலாம் . பிரிண்ட் கொடுக்கும் போது அந்த கட்டளை ஏற்கப்படாமல் போகலாம். இவையும் வைரஸ் பாதிப்பின் அடையாளம் தான்.

தானாக ரீபூட்
வைரஸ் உள்ளே இருந்தால் சிஸ்டம் தானாக ரீபூட் ஆகலாம். திடிரென கிராஷ் ஆகலாம். அல்லது அப்படியே ஹாங் ஆகி நிற்கலாம். உங்கள் கோப்புகளை அணுக முடியவில்லை என்று விநோதமான செய்திகள் தானாக திரையில் தோன்றலாம். இவை எல்லாம் இருந்தால் வைரஸ் உள்ளே நுழைந்திருக்க வேண்டும் என்று பொருள் இல்லை என்றாலும் இவை நிச்சயம் ஒரு எச்சரிக்கை தான். இந்த பாதிப்பிற்கு வேறு காரணங்கள் இல்லாவிட்டால் வைரஸ் என சந்தேகிக்கலாம்.

கோப்புகளில் பாதிப்பு
பொதுவாக கோப்புகளை நீங்கள் அணுகாத போது அவை எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கலாம். மாறாக நீங்கள் அணுகாத போதும் கோப்புகளின் அளவு தானாக மாறினால் அதற்கும் வைரஸ் காரணமாக இருக்கலாம் என்கின்றனர். அதே போல மெனுவை அணுகும் போதும் அதில் மாற்றங்கள் இருக்கலாம்.

ஹார்ட் டிஸ்க்
நினைத்த நேரத்தில் உங்களால் ஹார்ட் டிஸ்கை அல்லது டிரைவை அணுக முடியாமல் போனாலும் வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என பொருள். அதே போல வைரஸ் தடுப்பு மென்பொருள் சேவையின் செயல்பாடும் நிறுத்து வைக்கப்பட்டிருக்கிறதா என கவனியுங்கள். இவ்வளவு ஏன் ,சில நேரங்களில் உங்கள் கம்யூட்டரில் வைரஸ் பாத்திருக்கிறது எனும் அறிவிப்போடு தனியே எட்டிப்பார்க்கும் பாப் அப்கள் கூட வைரசின் அடையாளமாக இருக்கலாம் என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். அநேகமாக அதில் சுட்டிக்காட்டப்படும் வைரஸ் அறிமுகம் இல்லாததாக இருக்கும்.

திடீர் பரிசு
இணையத்தில் உலாவும் போது , திடீர் பரிசு பற்றிய செய்தி அல்லது இமெயில் மூலம் மோசடி வலை விரிக்கப்படுவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதோ போன்ற செய்திகள் கம்ப்யூட்டருக்குள் வைரஸ் பாதிப்பு காரணமாகவும் எட்டிப்பார்க்கலாம். இவைத்தவிர வைரஸ் தடுப்பு மென்பொருள் அல்லது வேறு மென்பொருளை நிறுவ முடியாமல் போகலாம். டெஸ்க்டாபில்திடிரென ஐகான்கள் காணாமல் போயிருக்கலாம்.
கம்ப்யூட்டரை பயன்படுத்தும் போது இது போன்ற அமசங்களை கவனித்துக்கொண்டே இருங்கள் .இவை பொதுவான அறிகுறிகளே தவிர இவை மட்டும் தான் அறிகுறிகள் என்றில்லை. போதுவாக கம்ப்யூட்டர் செயல்பாட்டில் வழக்கத்துக்கு விரோதமாக எது இருந்தாலும் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது.